காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

75 வயதான சோனியா காந்திக்கு ஜூன் 2ஆம் தேதி கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்ததால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. தமிழ்நாடு பிளஸ் டூ பொதுத்தேர்வில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ்

    தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 9.12 லட்சம் பேரில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    பன்னிரண்டாம் வகுப்பில் 93.76 சதவீத மாணவர்களும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    பிளஸ் டூ தேர்வில் 97.95 சதவீத தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

    86.69 சதவீத தேர்ச்சியுடன் குறைந்த தேச்சி பெற்ற மாவட்டமாக வேலூர் உள்ளது.

    விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும் ராமநாதபுர மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

    இந்த தேர்வில் 591க்கும் மேல் மதிப்பெண் ற்றவர்கள் 656 பேர். 581 முதல் 590 வரை மதிப்பெண் பெற்றவர்கள் 3,826 பேர்.

    மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.32% ஆகவும், மாணவர்கள் சதவீதம் 90.96 ஆகவும் உள்ளது.

    துணைத் தேர்வு எப்போது?

    பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே இந்த ஆண்டு அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    பிளஸ் 2 தேர்வில் தெர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு நடைபெறும்.

    ஜூன் 24 ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    12ம் வகுப்பிற்கு ஜூலை 25ம் தேதி முதல் உடனடி தேர்வு தொடங்கும். 10ம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் உடனடி தேர்வுகள் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

  2. தமிழ்நாடு: பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்

    தமிழ்நாட்டில் மாநில அரசு பாட முறையின்படி நடந்த பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.

    இன்று காலை 10 மணிக்கு பிளஸ் டூ வகுப்பு தேர்வு முடிவுகளும், பகல் 12 மணியளவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படவுள்ளன.

    தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரிகள் மூலமாக அறியலாம்: http://tnresults.nic.inhttp://dge1.tn.nic.inhttp://dge2.tn.nic.inhttp://dge.tn.gov.in

  3. வணக்கம் நேயர்களே!

    நான் சுபகுணம். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய சில முக்கியமான செய்திகளையும் இன்று நடக்கவிருக்கும் சில நிகழ்வுகள் பற்றிய தகவல்களையும் இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள், இடதுசாரி கூட்டணி மற்றும் தீவிர வலதுசாரிகளின் புதிய கூட்டணியால் எமானுவேல் மக்ரோங் பிரெஞ்சு தேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளார்.
    • இந்தியா மற்றும் வங்கதேசத்தில் கடுமையான பெய்து வரும் பருவ மழை, புயல்களால் சில இடங்களில் மின்னல் தாக்குதல்கள் காணப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவங்களால் குறைந்தது 59 பேர் இறந்ததாக அறியப்படுகிறது.
    • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ள இந்திய அமலாக்கத்துறை நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளிட்டோர் மீது போலீஸ் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி குடியரசு தலைவரிடம் முறையிட காங்கிரஸ் எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.
    • தலைமைப்பண்பு, அணி செயல்பாடு போன்ற திறன்கள், அக்னிவீரர்களை சந்தையிலுள்ள தொழில்துறைகளின் தேவைக்கேற்ப தயார் நிலையில் இருக்க வைக்கிறது," என்று மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனர் ஆனந்த் மஹிந்த்ரா தெரிவித்துள்ளார்.
    • அக்னிபத் திட்டத்தையும் ராகுல் காந்தியை விசாரணை என்ற பெயரில் அழைத்து துன்புறுத்துவதாகவும் கூறி காங்கிரஸ் கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற இந்தியா உண்மையான பங்களிப்பை வழங்கி வருவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.