காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

75 வயதான சோனியா காந்திக்கு ஜூன் 2ஆம் தேதி கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்ததால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, அக்னிபத் வீரர்களை அதானி-அம்பானி வீட்டுக் காவலர்களாக நிறுத்த விரும்புகிறது மோதி அரசு - ஒவைசி

    அகில இந்திய மஜ்லிஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி அக்னிபத் திட்டம் தொடர்பாக பாஜகவையும் மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், அக்னிபத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார்.

    நான்கு வருடங்கள் நாட்டைக் காத்து விட்டு ஒரு இளம் முன்னாள் ராணுவ வீரராக வெளியே வரும் அக்னிவீரர்கள், அதானி மற்றும் அம்பானியின் வீட்டிற்கு வெளியே வரிசையில் நிற்க வேண்டும் அல்லது பாஜக அலுவலகத்திற்கு வெளியே சௌகிதாரி (பாதுகாவலர்) பணியை செய்ய வேண்டும் என்று நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்று அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பினார்.

    இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்திலும் அவர் தொடர் ட்வீட்டுகளை செய்து அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.

    "மோதி ஜி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நிலைமயை சரி செய்ய 50 நாட்கள் அவகாசம் கேட்டீர்கள். அப்போது கொடுத்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. லாக்டவுனின் முடிவை நாங்கள் கண்கூடாகவே பார்த்தோம். ஆனால் அரசாங்கம் தனது தவறுகளை மீண்டும் செய்ய விரும்புகிறது. இப்போது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தில் கை வைக்க விரும்புகிறது."

    "மோதிஜி, இளைஞர்கள் இந்தியாவின் எதிர்காலம். அவர்கள், உங்களிடம் இருந்து அடிக்கடி பதவி நீட்டிப்பு பெறும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அல்ல. அப்பாவி இளைஞர்களின் குரலைக் கேட்டு அவர்களின் கோரிக்கைக்கு செவி சாயுங்கள். இந்த அக்னி வீரர் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுங்கள்" என்று ஒவைசி கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. அன்று `ஜஸ்ட் பாஸ்` ஆனவர் கலெக்டர் ஆன கதை

  3. இலங்கைத் தமிழர்கள் வாழ்வுரிமை, குடியுரிமை: நடவடிக்கை எடுக்கப்படும் - மு.க.ஸ்டாலின்

    இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை - குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ''ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 2000-ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஜூன் 20-ஆம் நாள், #WorldRefugeeDay எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்பதே தமிழர் வாழ்வியல் மரபு.

    உலகெங்கும் அகதிகளாக வாழ்பவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டிய நிலையில், தாய்த் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட நமது அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

    அகதிகள் முகாம் என்ற பெயரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என மாற்றம் செய்து, அவர்களின் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வாழ்வுரிமை - குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.'' என்று தெரிவித்துள்ளார்,

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை - பொதுக்குழு ஒத்தி வைக்கப்படுமா?

    எடப்பாடி பழனிச்சாமி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, எடப்பாடி பழனிச்சாமி

    அதிமுக பொதுக்குழுவை ஒத்தி வைக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ள நிலையில், நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்கிற முழக்கத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இதற்கு ஆதரவாகவும். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பாகவும் உள்ளது. இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    'கட்சியில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழலால் வரும் 23ம் தேதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழுவை ஒத்தி வைக்க' ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 'சர்வாதிகாரப் போக்குடன் தன்னிச்சையாக ஒற்றைத் தலைமை குறித்து பேசப்படுவதாக' துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில், சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், தளவாய் சுந்தரம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

  5. உலக அகதிகள் தினம்: அகதிகள், புலம் பெயர்ந்தோர், குடியேறிகள், தஞ்சம் கோரிகள் என்ன வேறுபாடு?

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்க ஓபிஎஸ் கடிதம் - வைத்தியலிங்கம் பேட்டி

    ஓபிஎஸ்-இபிஎஸ்

    பட மூலாதாரம், Getty Images

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    சென்னை பசுமைவழிச்சாலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் மற்றும் நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது வைத்தியலியங்கம் கூறுகையில் "வரும் 23ம் தேதிக்கு அறிவிக்கப்பட்ட பொதுக்குழுவிற்கு கடந்த கால நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. பொதுக்குழுவிற்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கவில்லை. ஒற்றைத் தலைமை சர்ச்சையால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பொதுக்குழு அஜெண்டா இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை.

    ஆகையால், பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். இருவரும் ஆலோசித்து வேறொரு தேதியை அறிவிக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றைய தினம் கடிதம் அனுப்பியுள்ளார். (அந்த கடிதத்தை வாசித்தார்) அந்த தரப்பில் இருந்து வரும் பதிலைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்.'என்றார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், 'சர்வாதிகாரப் போக்குடன் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று சிலர் பேசிவருகின்றனர். தன்னிச்சையான இந்த போக்கால் கட்சியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு 15 மாவட்ட செயலாளர்கள் ஆதரவாக உள்ளனர். 15 மாவட்ட செயலாளர்கள் நடுநிலை வகிப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னும் பல மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகளின் ஆதரவு இருக்கிறது.

    ஆனாலும், கட்சி நலனைக் கருத்தில் கொண்டு இணைந்து பணியாற்ற நினைக்கிறோம். ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஒற்றைத் தலைமை தீர்மானமம் பொதுக்குழுவில் கொண்டு வர முடியாது. கட்சியின் விதிப்படி எந்த சிறப்பு தீர்மானமும் கொண்டு வர முடியாது."என்றார்.

  7. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன்.

    இது வரை க.சுபகுணம் வழங்கி வந்த நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

  8. இருளர் பழங்குடிக்கு இலவசமாக பரதம் கற்றுத் தரும் அமெரிக்க பெண் பேராசிரியர்

  9. ராகுல் விசாரணையை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் போராட்டம்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத்துறையால் விசாரணைக்கு நான்காவது முறையாக அழைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகக் கூறி காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    காங்கிரஸ் கட்சி தனது யூட்யூப் பக்கத்தில் இந்தப் போராட்டத்தை நேரலை செய்கிறது.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  10. ராகுல் காந்தி விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவகத்திற்கு வருகை

    நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் நான்காவது நாள் விசாரணைக்காக இந்திய அமலாக்கத்துறை அலுவலகம் வந்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில் வெடி வெடித்ததில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்

    திருவிழாவில் வெடி வெடித்து 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்

    மணப்பாறை அருகே உள்ள கள்ளிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா கரகம் பாலித்து இன்று அதிகாலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    அப்போது திருவிழாவில் வானவேடிக்கை நடைபெற்றது. இதில் எண்ணற்ற வகையான வான வெடிகளை வெடித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக பொதுமக்கள் கூடியிருந்த கூட்டத்திற்குள் வெடிகள் தவறி விழுந்தன.

    திருவிழாவில் வெடி வெடித்து 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்

    அதில் காவியா (12), சர்மிளா (14),சர்வினி (10), சத்யா ( 27), கோபிகா (13), பானுமதி ( 3),பாஸ்கரன் (57) ஆகியோர் காயமடைந்தனர்.

    காயமடைந்த அனைவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  12. இலங்கை: கோட்டாபய பிறந்த நாளன்று ஜனாதிபதி செயலகம் முற்றுகை

    கோட்டாபய பிறந்த நாளன்று, ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இளைஞர்கள் போராடி வருகின்றனர். அதன் படங்கள் இங்கே.

    இலங்கை: கோட்டாபய பிறந்த நாளன்று ஜனாதிபதி செயலகம் முற்றுகை
    இலங்கை: கோட்டாபய பிறந்த நாளன்று ஜனாதிபதி செயலகம் முற்றுகை
    இலங்கை: கோட்டாபய பிறந்த நாளன்று ஜனாதிபதி செயலகம் முற்றுகை
    இலங்கை: கோட்டாபய பிறந்த நாளன்று ஜனாதிபதி செயலகம் முற்றுகை
  13. விற்பனைக்கு வந்த ஸ்டெர்லைட் ஆலை

    விற்பனைக்கு வந்த ஸ்டெர்லைட் ஆலை

    பட மூலாதாரம், Reuters

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யவுள்ளதாகவும், வாங்க விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜூலை 4ம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்பவேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

  14. "கார்ப்பரேட் வேலைவாய்ப்பில் அக்னி வீரர்களின் திறன் பயனளிக்கும்" - ஆனந்த் மஹிந்த்ரா

    அக்னி வீரர்களுக்கு கார்ப்பரேட் துறைகளில் திறன் மிக்க வேலை வாய்ப்புகள் உள்ளதாக மஹிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    “அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நடக்கும் வன்முறைகள் வருத்தமளிக்கின்றன. கடந்த ஆண்டு இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டபோது நான் கூறியதையே மீண்டும் கூறுகிறேன். ஒழுக்கம் மற்றும் திறன்களை இது அக்னிவீரர்களுக்கு வழங்குவது, அவர்களை தொழில்முறையில் சிறந்த திறனுடையவர்களாக மாற்றும். மஹிந்த்ரா குழுமம், அத்தகைய பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பை வரவேற்கிறது,” என்று ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டார்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    மேலும், "தலைமைப் பண்பு, அணி செயல்பாடு போன்ற திறன்கள், அக்னி வீரர்களை சந்தையிலுள்ள தொழில்துறைகளின் தேவைக்கேற்ப தயார் நிலையில் இருக்க வைக்கிறது. இது கார்ப்பரேட் துறையில், நிர்வாகம், விநியோகச் சங்கிலியின் மேலாண்மை மற்றும் செயல்பாடுகள் என அனைத்து வகையிலும் அக்னி வீரர்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்பை வழங்கும்,” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  15. இலங்கை: அடுத்தகட்டப் போராட்டத்துக்குத் தயாராகும் இளைஞர்கள்

  16. டெல்லி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கிய காங்கிரஸ் தலைவர்கள்

    டெல்லி ஜந்தர் மந்திரல் காங்கிரஸ் தலைவர்கள் சத்தியாகிரக போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமலாக்கத்துறையால் விசாரணைக்கு நான்காம் முறையாக அழைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகக் கூறி அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக, கடந்த வாரம் ராகுல் காந்தி முதல் முறையாக அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வீதிகளில் நடைபெற்ற அவர்களின் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

    இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாரை தடுத்து வைத்த காவல்துறையினர் அவர்கள் நள்ளிரவில் விடுவித்தனர். இப்படியாக மூன்று நாட்கள் போராட்டங்கள் தொடர்ந்த வேளையில், மூன்றாம் நாள் விசாரணைக்காக ராகுல் காந்திய ஆஜராகவில்லை.

    அவரது தாயார் டெல்லி மருத்துவமனையில் கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வருவதால் அவருடன் இருக்க விரும்புவதாகக் கூறி ஜூன் 20ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டு அனுமதி கோரினார். அதை அமலாக்கத்துறையும் ஏற்றுக் கொண்டது.

    இந்த நிலையில், நான்காம் நாளாக அமலாக்கத்துறையால் விசாரணைக்கு ராகுல் காந்தி இன்று அழைக்கப்பட்டுள்ளார். இதையொட்டி தங்களுடைய போராட்டத்தை வீதிகளில் நடத்தாமல் ஜந்தர் மந்தரில் நடத்துவதாகவும் அதில் காங்கிரஸார் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. திரிபுரா மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தாக்கிய சந்தேக நபர்கள் - மருத்துவமனையில் அனுமதி

    காங்கிரஸ் திரிபுரா

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, தாக்குதலுக்கு ஆளான சுதீப் ராய் பர்மன்

    திரிபுரா மாநிலத்தில் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் சுதீப் ராய் பர்மனை அகர்தலாவில் உள்ள உஜன் அபோய் நகரில் நேற்று இரவு ஒரு குழுவினர் தாக்கியதில் அவர் காயமடைந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அகர்தலா தொகுதியில் போட்டியிடும் சுதீப் ராய் பர்மன், தனது பிரசாரத்தின் ஒரு பகுதியாக உஜன் அபோய்நகரில் ஒரு ஆதரவாளரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் தாக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சந்தேக நபர்கள் சுதீப் ராய் பர்மனை தாக்கிய பின்னர் அவரது காரையும், காங்கிரஸ் கொடிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி தான் காரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    சுதீப் ராய் பர்மன் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

    காங்கிரஸ் கண்டனம்

    சுதீப் ராய் பர்மன் தாக்கப்பட்ட சம்பவத்தை காங்கிரஸ் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டித்துள்ளார். இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை இணைக்கும் முக்கிய சந்திப்புகளை முடக்கிய போலீஸ்

    டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நான்காம் முறையாக இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளது.

    இதைக் கண்டித்தும் அக்னிபத் திட்டத்தை எதிர்த்தும் காங்கிரஸார் மற்றும் ராணுவ பணியில் சேர ஆர்வம் காட்டும் இளைஞர்களும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அக்பர் சாலை பகுதியில் இருந்து பிற பகுதிகளை இணைக்கும் முக்கிய சந்திப்புகளை போலீஸார் தடுப்புகளைப் போட்டு பாதையை முடக்கியுள்ளனர்.

    இதற்கிடையே, காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் தொண்டர்கள் இன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தங்களுடைய போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. பிலிப்பைன்ஸ் துணை அதிபரானார் சாரா டுடெர்டே - தற்போதைய அதிபரின் மூத்த மகள்

    சாரா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, பிலிப்பைன்ஸ் துணை அதிபராக பதவியேற்கும் அந்நாட்டு அதிபரின் மூத்த மகள் சாரா டுடெர்டே

    பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டேவின் மூத்த மகள் அந்நாட்டின் துணை அதிபராக பதவியேற்றுள்ளார்.

    இதையொட்டி தவாவ் நகரில் நடைபெற்ற விழாவில் சாரா டுடெர்டே பிலிப்பைன்ஸை ஒற்றுமையாக வைத்திருப்பதாக உறுதிமொழி எடுத்தார்.

    44 வயதான சாரா டுடெர்டே, பத்தாண்டுகளுக்கு முன்பு டாவோ நகரின் மேயராகப் பொறுப்பேற்றார். இதன் மூலம் தீவிர அரசியலில் அவர் நுழைந்தார். அதிபர் ரொட்ரிகோ டுடெர்டேவின் ஆறு வருட பதவிக்காலமும் விரைவில் முடிவடைய உள்ளது.

    அவர் அந்நாட்டின் அதிபராக மற்றும் ரொட்ரிகோ 2016இல் பதவியேற்றார். அவருக்குப் பதிலாக, ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அதிபராவார்.

    பிலிப்பைன்ஸில் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிக்கு மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் சாராவின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதி தொடங்குகிறது.

  20. இலங்கை நெருக்கடியில் இருந்து மீள இந்தியா பங்களிப்பு தருகிறது - பிரதமர் ரணில் விக்ரமசிங்க

    ரணில் விக்ரமசிங்க

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ரணிக் விக்ரமசிங்க, இலங்கை பிரதமர்

    இலங்கை எதிர்கொண்டு வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதில் இலங்கைக்கு இந்தியா "உண்மையில் உதவியிருக்கிறது" என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

    நாட்டின் பிரதமர் ஆக பதவியேற்று ஒரு மாதத்திற்கு பின்னர் கொழும்பில் உள்ள தி ஹிந்து நாளிதழிடம் விக்ரமசிங்க விரிவாக பேசியுள்ளார்.

    வெளிநாட்டு முதலீடுகள் குறித்து கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, அதானி குழுமம் இலங்கைக்குள் பிரவேசித்ததை அன்புடன் வரவேற்றார்.

    அதானி குழுமம் தொடர்பாக இலங்கையின் உயர் அதிகாரியொருவரின் அறிக்கை தொடர்பில் கடந்த காலங்களில் பல சர்ச்சைகள் எழுந்தன.

    இலங்கையின் வட பகுதியில் உள்ள மிகப்பெரிய மின் திட்டத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக இலங்கையின் மின்சார சபை உயரதிகாரி அந்நாட்டின் நாடாளுமன்றக் குழுவிடம் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார். அவரது கருத்து சர்ச்சையான நிலையில், தனது கருத்தை அந்த அதிகாரி மறுதினமே வாபஸ் பெற்றார்.

    இதைத்தொடர்ந்து அடுத்த சில நாட்களில் அவர் பதவியில் இருந்தும் விலகினார்.

    இந்த சர்ச்சை குறித்து விக்ரமசிங்கே கூறுகையில், "இந்திய அரசு உண்மையிலேயே ஆர்வமாக இருந்திருந்தால், இது குறித்து பிரதமர் மோதி அல்லது அவரது அலுவலகம் எனக்கு தெரிவித்திருக்கும். இந்த திட்டத்தை விரைவில் ஒப்படைக்குமாறு என்னிடம் கோரப்படவில்லை," என்று தெரிவித்தார்.

    கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்து பேசிய விக்கிரமசிங்க, தற்போது எரிபொருள் பற்றாக்குறையை குறைக்க தமது நாடு முயற்சித்து வருவதாக கூறினார்.

    இப்போது இந்தியாவில் இருந்து வரும் கடனுதவியை பயன்படுத்த முடிகிறது. இந்தியாவிடம் இருந்து உதவி கிடைத்த பிறகு, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒரு தொகுப்புதவி கிடைக்கும் என்று இலங்கை நம்புகிறது. இது தவிர, சீனா மற்றும் ஜப்பானின் உதவியையும் கோரியிருந்ததுடன், குறிப்பாக இலங்கைக்கு உதவ ஒரு கூட்டமைப்பை உருவாக்குமாறு குவாட் நாடுகளை இலங்கை வலியுறுத்தியுள்ளது என்று ரணில் தி ஹிந்து நாளிதழ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.