நன்றி நேயர்களே
இன்றைய நேரலை இத்துடன் முடிவடைகிறது.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:
- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுபாடு நிலவுகிறது.
- லக்கிம்பூர் வன்முறை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு வழங்கப்பட்ட பிணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
- ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு முதல்வரான தனக்கும் தனிப்பட்ட பகை ஏதுமில்லை என்றும் தனிப்பட்ட முறையில் அவர் பழகுவதற்கு இனியவர் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
- மேகாலயாவில் நடந்த கார் விபத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்தார்.
- இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
- மத்திய அமைச்சர் எல். முருகன் தேவையில்லாமல், திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி தெரிவித்துள்ளார்.
- டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பன்னாட்டு நிறுவனமான ஆம்வே நிறுவனத்தின் 757 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
- ஸ்வீடனில் குர்ஆன் பிரதிகளை எரிக்கும் தீவிர வலதுசாரி குழுவின் திட்டங்களால் கோபமடைந்த மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இந்திய ராணுவ தலைமை தளபதியாக லெப்டிணன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேவை நியமித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 84வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.
- இளையராஜாவின் கருத்து குறித்து யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என, திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக, அக்கட்சி இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
- யுக்ரேனின் லூவிவ் நகரில் இன்று காலை ரஷ்யப்படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது என, லூவிவ் பிராந்திய தலைவர் மக்ஸிம் கோஸிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.