"தவறு செய்து விட்டேன், ஆனால் பதவி விலக மாட்டேன்" - கோட்டாபய ராஜபக்ஷ

கடந்த காலத்தில் என்ன குறைகள் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான எனது பொறுப்பாகும் என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே

    இன்றைய நேரலை இத்துடன் முடிவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுபாடு நிலவுகிறது.
    • லக்கிம்பூர் வன்முறை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு வழங்கப்பட்ட பிணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
    • ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு முதல்வரான தனக்கும் தனிப்பட்ட பகை ஏதுமில்லை என்றும் தனிப்பட்ட முறையில் அவர் பழகுவதற்கு இனியவர் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
    • மேகாலயாவில் நடந்த கார் விபத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்தார்.
    • இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
    • மத்திய அமைச்சர் எல். முருகன் தேவையில்லாமல், திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி தெரிவித்துள்ளார்.
    • டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • பன்னாட்டு நிறுவனமான ஆம்வே நிறுவனத்தின் 757 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
    • ஸ்வீடனில் குர்ஆன் பிரதிகளை எரிக்கும் தீவிர வலதுசாரி குழுவின் திட்டங்களால் கோபமடைந்த மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இந்திய ராணுவ தலைமை தளபதியாக லெப்டிணன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேவை நியமித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
    • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 84வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.
    • இளையராஜாவின் கருத்து குறித்து யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என, திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக, அக்கட்சி இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேனின் லூவிவ் நகரில் இன்று காலை ரஷ்யப்படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது என, லூவிவ் பிராந்திய தலைவர் மக்ஸிம் கோஸிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
  2. மிஸ் கூவாகம் ஆக தேர்வானார் சென்னையை சார்ந்த மெஹந்தி

    தமிழ்நாடு இந்தியா
    படக்குறிப்பு, முதலிடம் பெற்ற மெஹந்தி

    விழுப்புரத்தில் நடைபெற்ற 'மிஸ் கூவாகம்' போட்டியில் சென்னையைச் சார்ந்த மெஹந்தி முதல் இடத்தையும், திருச்சியை சேர்ந்த ரியானா சூரி இடத்தையும், சேலத்தை சேர்ந்த ஸ்வீட்டி மூன்றாம் இடத்தையும் பிடித்து மிஸ் கூவாகம் பட்டத்தினை வென்றுள்ளனர்.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, "தவறு செய்து விட்டேன், பதவி விலக மாட்டேன்" - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய

    கோட்டாபய ராஜபக்ஷ

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை ஜனாதிபதி

    ரசாயன விவசாயத்திற்கு தடை விதித்ததன் மூலம் தாம் தவறிழைத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஒப்புக்கொண்டுள்ளதால் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளார்.

    அதே சமயம், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நிலைமைக்கு பொறுப்பேற்று தாம் பதவி விலகப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் கோபம் தமக்கு நன்கு புரிகிறது என்று கூறினார்.

    அரசாங்கம் தவறுகளை செய்துள்ளதாகவும், நாட்டின் நன்மைக்காக முன்னோக்கிச் செல்ல அவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    அரசாங்கம் ஒரு திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தை (IMF) மிகவும் முன்னதாகவே அணுகியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்..

    பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு மத்தியில், மக்கள் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக மிகவும் வருந்துகின்றேன்.

    வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத மக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெற வரிசையில் நின்று நேரத்தைச் செலவழிப்பதால் ஏற்படும் வேதனையும் அசௌகரியமும் கோபமும் மிகவும் நியாயமானது.கடந்த காலத்தில் என்ன குறைகள் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான எனது பொறுப்பாகும்.

    எந்த சிரமத்திற்கும் சவாலுக்கும் மத்தியிலும் அந்தப் பொறுப்பில் இருந்து விலக மாட்டேன் என்று என்னை நியமித்த மக்களிடம் உறுதியளிக்கிறேன்.

    தற்போது சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்னைகளில் நாம் முன்னுரிமை வழங்க வேண்டியது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கே ஆகும். அதைத் தீர்க்காமல் வேறு எந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியாது.

    எனவே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நான் ஏற்கனவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன்.

    அதன் அடிப்படையான மற்றும் முக்கியமான நடவடிக்கைகளாக புதிய நிதியமைச்சர் ஒருவர், நீண்டகால அனுபவமுள்ள மத்திய வங்கியின் புதிய ஆளுநர் மற்றும் திறைசேரியின் புதிய செயலாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பொருளாதார முகாமைத்துவம் தொடர்பாக அரசாங்கத்திற்கும் எனக்கும் ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச அனுபவமும் பொருளாதார முகாமைத்துவத் துறையில் உயர் அங்கீகாரமும் கொண்ட மூன்று பொருளாதார நிபுணர்களை நியமித்துள்ளேன். மேலும், அரசுக்கு உதவுவதற்காக பொது மற்றும் தனியார் துறை நிபுணர்கள் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவுடன் இணைந்து கடந்த சில நாட்களாக நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நிலை நிறுத்த நாம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.

    எண்ணெய், மருந்துப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிடமிருந்து கடன் வசதிகளைப் பெற்றுள்ளோம். மேலும், உலக வங்கி எரிவாயு, உரம், பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் இறக்குமதிக்கு ஒத்துழைப்பு வழங்கவும் முன்வந்துள்ளது.

    நாட்டு மக்களுக்கு தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயு தற்போது நாட்டுக்கு கிடைக்கப் பெற்றாலும், சமீப நாட்களாக அது முறையாக விநியோகிக்கப்படவில்லை. இதன் காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் நாம் தற்போது செயற்பட்டு வருகின்றோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

  4. இலங்கையில் இனி முக கவசம் தேவையில்லை: அரசு

    இலங்கையில் சில கட்டுப்பாடுகளுடன், கட்டாயப்படுத்தப்பட்டிருந்த முக கவசம் அணியும் சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.பொது போக்குவரத்து பயன்பாடு மற்றும் உள்ளக நிகழ்வுகளின் போது மாத்திரம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் ஷன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார்.இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை, வளாகங்களுக்குள் செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் தகவல்களை திரட்டுதல் ஆகியனவும் இன்று கட்டாயம் கிடையாது என சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

  5. யுக்ரேன் நெருக்கடி: மூழ்கும் ரஷ்ய போர் கப்பல் காட்சிகள்

    ரஷ்ய போர்க்கப்பல்

    பட மூலாதாரம், MIKE RIGHT/TWITTER

    படக்குறிப்பு, மோஸ்க்வா மூழ்கியதற்கான காரணம் குறித்து முரண்பட்ட தகவல்களை ரஷ்ய, யுக்ரேனிய படையினர் கொடுத்துள்ளனர்.

    கடந்த வாரம் ரஷ்ய போர்க் கப்பலான மோஸ்க்வா மூழ்குவதற்கு முன் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    அந்த கப்பலில் ஏற்பட்ட தீயால் அதில் இருந்த வெடிமருந்துகள் வெடித்த வேளையில், புயல் காற்றுடன் அது இழுத்துச் செல்லப்பட்டது. அந்த கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியதாக யுக்ரேன் கூறுகிறது. யுக்ரேன் கப்பலைத் தாக்கியதாகக் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு, ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படங்கள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    பிபிசி இந்த காட்சிகளை சர்வதேச கேந்திர விவகாரங்கள் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த கடற்படை நிபுணர் ஜோனாத்தன் பெந்தமிடம் காட்டியது சரிபார்க்குமாறு கேட்டுக் கொண்டது.

    அவர் படத்தில் காணப்படும் கப்பல் நிச்சயமாக ஒரு ஸ்லாவா-கிளாஸ் க்ரூசர் மற்றும் "அநேகமாக" மோஸ்க்வாவாக இருக்கலாம் என்று தமது முடிவை கூறியிருக்கிறார். இந்த போர்க்கப்பலில் காணக்கூடிய சேதம் நெப்டியூன் ஏவுகணை தாக்குதலுடன் ஒத்துப்போகிறது என்று அவர் கூறுகிறார், ஆனால் கப்பல் மூழ்கியதற்கான பிற காரணங்களையும் நிராகரிக்க முடியாது என்கிறார் ஜோனாத்தன் பெந்தம்.

  6. லூவிவ் ஏவுகணை தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

    யுக்ரேன் - ரஷ்யா

    பட மூலாதாரம், EPA

    யுக்ரேனின் லூவிவ் நகரில் இன்று காலை ரஷ்யப்படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது என, லூவிவ் பிராந்திய தலைவர் மக்ஸிம் கோஸிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    நான்கு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும், அதில் மூன்று ஏவுகணைகள் கிடங்கு ஒன்றை தாக்கியதாகவும், ஒரு ஏவுகணை வாகன பழுதுபார்க்கும் இடத்தைத் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

  7. வரலாறு: ஹிட்லரை ஏமாற்றி தோற்கடித்த பேய்ப் படையும், தந்திரக் கலைஞர்களும்

      • எழுதியவர், மேத்யூ வில்சன்
      • பதவி, பிபிசி கல்சர்
    ஹிட்லர் - வரலாறு

    பட மூலாதாரம், GETTY IMAGES

    வரலாற்றில் ஆர்வமுள்ளவரா நீங்கள்?

    உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் வெளியான இந்த சுவாரஸ்ய கட்டுரையை வாசியுங்கள்.

    இரண்டு உலகப் போர்களிலும் மாயத் தோற்றங்களை உருவாக்க கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டனர். நேச நாடுகளை வெற்றிக்கு இட்டுச் செல்ல உதவிய "ஏமாற்று வேலைகளில்" ஒரு உருமறைப்புப் பிரிவும், 'பேய்ப் படையும்' பயன்படுத்தப்பட்டன. இந்த சுவாரஸ்ய கட்டுரையை படிக்க இங்கே சொடுக்குங்கள்:

  8. ஆளுநர் பங்கேற்ற அண்ணாமலை பல்கலை. பட்டமளிப்பு விழா - அமைச்சர்கள் பங்கேற்கவில்லை

    ஆளுநர் ஆர்.என்.ரவி

    பட மூலாதாரம், Annamalai University Youtube

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 84வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 84வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி மாணவர்களுக்குப் பட்டமளித்தார்.

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முனைவர் பட்டம், முதுநிலை மற்றும் இளநிலை பிரிவுகளில் துறை ரீதியாக முதலிடம் பிடித்த 1,014 மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மேலும், கடந்த ஏப்ரல் 2019 முதல் மே 2021 வரை இரண்டு ஆண்டுகள் நேரடி மற்றும் தொலைதூரக் கல்வியில் படித்து முடித்த 1,21,525 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்க ஒப்புதல் அளித்தார்.

    இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கவும், சிறப்பிக்கவும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகிய திமுக அமைச்சர்கள் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக அமைச்சர்கள் இருவரும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.

    இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    ஆளுநர் ஆர்.என்.ரவி

    பட மூலாதாரம், Annamalai University Youtube

    அண்மையில் தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை திமுக மக்கள் பிரதிநிதிகள் புறக்கணித்த நிலையில், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அழைப்பு விடுக்கப்பட்ட திமுக அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.

    இது குறித்து விசாரித்தபோது, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதால் அமைச்சர்கள் அதில் பங்கேற்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

  9. இளையராஜாவை விமர்சிக்கக் கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் - உதயநிதி

    உதயநிதி ஸ்டாலின்

    பட மூலாதாரம், UDHAYANIDHI STALIN/FB

    இளையராஜாவின் கருத்து குறித்து யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என, திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக, அக்கட்சி இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

    அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோதியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அன்ட் மோதி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.

    அதில், "பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் முயற்சிக்கிறது" என நீண்ட முன்னுரையை எழுதியுள்ளார்.

    அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோதியையும் ஒப்பிட்டு இந்த முன்னுரையில் இளையராஜா வெளியிட்டுள்ள கருத்துகளை பாஜகவினர் வரவேற்றுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இளையராஜா மீதான விமர்சனங்கள் குறித்து, இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதிலளித்த திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், "அது அவருடைய (இளையராஜா) கருத்து, அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். இதுகுறித்து யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என தலைவர் (மு.க.ஸ்டாலின்) அறிவுறுத்தியுள்ளார். நாகரிகமற்ற முறையில் யார் விமர்சித்தாலும் அது தவறுதான்" என கூறியுள்ளார்.

  10. இலங்கையில் ஊடகவியலாளர்கள் போராட்டம்

    "நாட்டிற்கு உண்மையை சொன்ன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்" எனக்கூறி, ஊடக சுதந்திரம் வழங்கக்கோரி இலங்கை காலி முகத்திடலில் ஊடகவியலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

  11. இலங்கை 'தமிழச்சி' - போராட்ட களத்தில் கலக்கும் தமிழ் பெண்

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  12. யுவன் சங்கர் ராஜாவை விட நான் கருப்புத் தமிழன், கருப்பு திராவிடன் - அண்ணாமலை

    "யுவன் சங்கர் ராஜாவை விட நான் கருப்புத் தமிழன், கருப்பு திராவிடன்" என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பிபிசி தமிழின் இந்த ட்விட்டர் பதிவுக்கு சென்று தெரிவியுங்கள்:

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்திய ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்

    இந்திய ராணுவ தலைமை தளபதியாக லெப்டிணன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேவை நியமித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது. பொறியாளர் ஒருவர், ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேயின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மனோஜ் பாண்டே தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. நடிகர் விஜய் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரலாமா? ரசிகர்கள் சொல்வது என்ன? - காணொலி

    நடிகர் விஜய் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரலாமா? ரசிகர்கள் சொல்வது என்ன?

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஸ்வீடனில் குர்ஆனை எரித்ததற்கு எதிர்ப்பு: கலவரம் தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைது

    சுவீடனில் குரான் எரிப்பு

    பட மூலாதாரம், EPA

    ஸ்வீடனில் குர்ஆன் பிரதிகளை எரிக்கும் தீவிர வலதுசாரி குழுவின் திட்டங்களால் கோபமடைந்த மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று, கலவரக்காரர்களை எச்சரிக்கும் விதமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக, தீவிர வலதுசாரி டென்மார்க் அரசியல்வாதியான ராஸ்மஸ் பலுடான், தான் குர்ஆனின் ஒரு பிரதியை கொளுத்தியதாகவும், வருங்காலத்திலும் அவ்வாறே செய்வேன் எனவும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தெற்கு நகரமான லிங்கோபிங் நகரத்தில் காவல்துறை முன்னிலையில் ராஸ்மஸ் பலுடான் குர்ஆனை எரிக்க முயன்றார். இதையடுத்து, ராஸ்மஸ் பலுடான் ஆதரவாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.

    குர்ஆன் எரிப்பு சம்பவத்திற்கு செளதி அரேபியா, இரான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முன்னதாக, இராக், இரான் ஆகிய நாடுகள் அவற்றின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக தங்கள் நாட்டில் உள்ள ஸ்வீடன் தூதர்களுக்கு அழைப்பாணை அனுப்பி விளக்கம் கேட்டன.

  16. எம்எல்எம் மோசடி புகார் - ஆம்வே நிறுவனத்தின் ரூ.757 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

    ஆம்வே நிறுவனம்

    பட மூலாதாரம், @amwayindia

    பன்னாட்டு நிறுவனமான ஆம்வே நிறுவனத்தின் 757 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

    ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.411.83 கோடி மதிப்பிலான சொத்துகளையும் 36 வெவ்வேறு வங்கிக்கணக்குகளில் உள்ள ரூ.345.94 கோடி பணத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    இதில், தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வே நிறுவனத்தின் தொழிற்சாலை நிலங்களும் அடக்கம் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் வங்கி வைப்புத்தொகையும் முடக்கப்பட்டுள்ளது.

    அந்நிறுவனம் எம்.எல்.எம் எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, "கற்களை வீசி ரத்தம் வரச் செய்தாலும் பயணத்தை நிறுத்த மாட்டேன்" - தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பிரத்யேக பேட்டி

    தமிழிசை செளந்தர்ராஜன்
    படக்குறிப்பு, தமிழிசை செளந்தர்ராஜன், தெலங்கானா மாநில ஆளுநர்

    தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் டெல்லியில் பிபிசி தமிழுக்கு இன்று பிரத்யேக நேர்காணல் அளித்தார்,

    அதில்,''மனசாட்சியுடன் மக்களுக்கான ஆளுநராக பணியாற்றி வருகிறேன். மக்கள் எளிதில் அணுகும் ஆளுநராக இருக்கிறேன். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் செய்கிறார்கள். அரசியலை ஆளுநர் மீது புகுத்தக் கூடாது. அது இளைய தலைமுறைக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும்.

    நட்போடு இருப்போம் என்றுதான் செயல்படுகிறேன். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் முதலமைச்சர்கள் உள்ள மாநிலங்களில் ஆளுநர் எதிர்ப்புணர்வுடன் செயல்படுகிறார்கள்.'' என்று கூறினார்.

    தொடர்ந்த் அவர் கூறுகையில், ''சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்களைப் பார்த்து, போற்றுவோர் போற்றட்டும் என்று கடந்து விடுகிறேன். என் மீது கற்களை வீசி, காயம்பட்டு ரத்தம் வந்தாலும் தடையில்லாமல் எனது பணியை செய்வேன். பயணத்தை நிறுத்த மாட்டேன். வாழ்வின் கடைசி வரை பொதுவாழ்க்கையில் எனது பணி இருக்கும். என்மீது கறைபடவும் களங்கப்படுத்தவும் விடமாட்டேன். எதுவந்தாலும் எனது பணியை உறுதியாக தொடர்வேன்.

    புதுச்சேரியில் நான் அழைப்பு விடுத்திருந்த தேநீர் விருந்தை எதிர்கட்சிகள் புறக்கணித்தது மன வருத்தமாக இருக்கிறது. தமிழாய் இணைவோம் என்று அழைத்தும் அவர்கள் பங்கேற்கவில்லை என்றார் தமிழிசை.

    தெலங்கானா, புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களையும் எனது இரண்டு கண்களாக பார்க்கிறேன். இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் போல், இரண்டு மாநிலங்கள் மீதும் கவனம் செலுத்துகிறேன்.

    தற்போது தெலுங்கு மொழியை 25 சதவீதம் கற்றுள்ளேன். மூன்று மாதங்களில் மேடைகளில் சரளமாக பேசுவேன். இந்திய உள்துறை அமைச்சர் வெளியிட்ட இந்தி இணைப்பு மொழி குறித்த கருத்தை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

    தாய்மொழியுடன் கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிற்கு உதவியாக இருக்கும். ஆகையால், இந்தி திணிப்பு என்று அதை எடுத்துக் கொள்ளக் கூடாது. நீட் தேர்வு குறித்து தமிழ்நாட்டில் சரியான புரிதல் இல்லாமல் எதிர்க்கிறார்கள்.

    தொழில்முறை மருத்துவர் என்ற முறையில் நீட் தேர்வு நம் நாட்டுக்கு அவசியம். உலகில் பிற நாடுகளிலும் மருத்துவ சேர்க்கையில் இருக்கும் நடைமுறைதான் இங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் தனிப்பட்ட முடிவு கிடையாது. உச்ச நீதிமன்றம் எடுத்த இறுதி முடிவாகும். அதற்கு இசைவு தெரிவித்து எதிர்கால தலைமுறையை நீட் தேர்விற்கு தகுதிப்படுத்த வேண்டும்,'' என்கிறார் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன்.

    இந்த நேர்காணலில் அவர் தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு ஆளுநர் பதவிக்கு களங்கம் கற்பிப்பதாகவும் தனக்கு அந்த மாநிலத்தில் எப்படியெல்லாம் அவமரியாதை தரப்படுகிறது என்பது குறித்தும் பேசியிருக்கிறார். இது தவிர தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராக ஆளும் கட்சி கூட்டணி ஒலிக்கும் குரல்கள், புதுச்சேரி அரசியல் குறித்தும் தமிழிசை விரிவாக பேசியிருக்கிறார்.

    விரிவான நேர்காணல் காணொளி மற்றும் எதுத்து வடிவ நேர்காணலை இன்று இரவு பிபிசி தமிழ் இணையதள பக்கத்திலும் சமூக ஊடக பக்கத்திலும் காணலாம். காணலாம்.

  18. இலங்கை நெருக்கடி: கொழும்பு போராட்டத்தில் தமிழில் குரல் எழுப்பிப் போராடும் ஒற்றைப் பெண்

  19. காலையில் கவுன்சிலர் பணி... மாலையில் தள்ளுவண்டி உணவகம்

    “மக்களுக்கு சேவை செய்ய பிடிக்கும்.. இருந்தாலும் தொழில விட்டுட முடியுமா?” என்கிறார் இந்த தன்னம்பிக்கை ஊட்டும் பெண் கவுன்சிலர்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  20. கோவை - கரூர் ஆறு வழி பசுமைவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

    கோவை - கரூர் ஆறு வழி பசுமைவழிச் சாலை

    கோவை முதல் கரூர் வரை ஆறு வழி பசுமைவழிச் சாலை அமைத்திட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என, கோவை மாவட்ட விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மண்டல விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோவை - கரூர் பசுமைவழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உடன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் கலந்துகொண்டனர்.

    அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கொங்கு மண்டல விவசாயிகள் நல சங்க தலைவர் முருகசாமி, "இந்த திட்டம் தேவையற்ற திட்டம். ஏற்கெனவே இருக்கின்ற நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தி, தேவையான இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் கட்டினாலே போதுமானதாக இருக்கும். கடந்த ஆட்சியில் இருந்தே இது குறித்த பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கியிருக்கிறோம்.

    ஆனால், பசுமைவழிச் சாலைகள் வரும் நிலங்களுக்குப் பத்திர பதிவு செய்யக்கூடாது என 3A நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தை விற்கவோ வங்கிகளில் கடன் வாங்கவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அந்த நோட்டீசை திரும்பப் பெற வேண்டும். பசுமைவழிச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும்" என்றார்