வேட்பாளர் மரணத்தால் விருதுநகர் மாவட்டத்திலுள்ள வார்டில் தேர்தல் ஒத்திவைப்பு

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று கோவை மாவட்டம் கொடிசியா அரங்கில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி and ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. தூத்துக்குடி துப்பாக்கி சூடு: விசாரணை ஆணையம் முன்பு முன்னாள் தலைமை செயலாளர் ஆஜர்

    கிரிஜா வைத்தியநாதன்
    படக்குறிப்பு, விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்த கிரிஜா வைத்தியநாதன்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் முன்பு துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜரானார்.

    தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூடு, தடியடி சம்பவங்களில் 13 பேர் பலியாகினர். இதுதொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இன்று 36வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடந்து வருகிறது.

    இந்த விசாரணைக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போது காவல்துறை தலைவர் மற்றும் உள்துறை செயலாளர் உள்பட 7 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.

    அதைத்தொடர்ந்து இன்று துப்பாக்கி சூடு சம்பந்தமாக முன்னாள் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்

  2. பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவுக்கு யுக்ரேன் அழைப்பு

    யுக்ரேன் பாதுகாப்பு படையினர் சமீப நாட்களில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, யுக்ரேன் பாதுகாப்பு படையினர் சமீப நாட்களில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

    தனது நாட்டு எல்லையில் தீவிரமாகி வரும் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கான சந்திப்பு ஒன்றை நடத்த நடத்த ரஷ்யா மற்றும் வியன்னா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முக்கிய உறுப்பினர் நாடுகளை யுக்ரேன் அழைத்துள்ளது.

    எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்க வேண்டும் என்றும் தாங்கள் அலுவல்பூர்வமாக விடுத்த வேண்டுகோள்களை ரஷ்யா புறக்கணித்துவிட்டதாக, யுக்ரேன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவின் திட்டத்தில் 'வெளிப்படைத்தன்மைக்காக' அடுத்த 48 மணிநேரத்திற்குள் அந்நாட்டுடன் சந்திப்பு ஒன்றுக்கு வேண்டுகோள் விடுப்பதே "அடுத்த நடவடிக்கை" என அவர் தெரிவித்தார்.

    யுக்ரேன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது என்றாலும், படையெடுப்பதற்கான எந்த நோக்கமும் இல்லை என்று மறுத்து வருகின்றது.

  3. இந்தியாவில் கொரோனா நிலவரம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது; கொரோனவால் 346 பேர் இறந்துள்ளனர், என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவிக்கிறது.

    இதுவரை இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,09,011 ஆகியுள்ளது.

    தற்போது 4,78,882 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

  4. டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்

    டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 100 விவசாயிகள் டெல்லி வந்துள்ளனர்.

    புது டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த சென்ற விவசாயிகள் டெல்லி ரயில்வே சந்திப்பில் தடுத்து நிறுத்தபட்டனர்.

    உர விலை கட்டுப்பாடு, உற்பத்திச் செலவைவிட குறைந்தது 50% கூடுதலாக குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் உள்ளிட்டவை அவர்களின் கோரிக்கைகள் ஆகும்.

  5. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்

    பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்

    பட மூலாதாரம், ISRO

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ EOS-04 என்ற செயற்கைக்கோளை PSLV-C52 என்ற ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணில் ஏவியுள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 5:59 மணிக்கு இது ஏவப்பட்டுள்ளது.

    பூமியில் இருந்து 529 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுற்றுவட்ட பாதையில் 6:17 மணிக்கு செயற்கைக்கோள் சேர்ந்தது என்று இஸ்ரோ தெரிவிக்கிறது.

    இன்று INSPIREsat-1, INS-2TD ஆகிய இரு சிறிய செயற்கைக்கோள்களும் இன்று ஏவப்பட்டுள்ளன.

    INSPIREsat-1 இந்திய விண்வெளி அறிவியல் & தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்களால் உருவாக்கப்பட்டது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. உ.பி, உத்தராகண்ட், கோவா மாநில சட்டப்பட்டவைத் தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது

    தேர்தல்

    பட மூலாதாரம், Getty Images

    உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும், உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் 55 தொகுதிகளுக்கும் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும்.

    உத்தராகண்டில் உள்ள 70 தொகுதிகளும், கோவாவில் உள்ள 40 தொகுதிகளும் இன்று தேர்தலை எதிர்கொள்கின்றன.

    இந்த மூன்று மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சியில் உள்ளது.

  7. வணக்கம் நேயர்களே!

    இன்றைய இந்த நேரலைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய செய்திகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    எங்களோடு இணைந்திருங்கள். இந்த நாள் இனியதாகட்டும்.