திருவண்ணாமலை திருப்புதல் தேர்வு கசிந்த விவகாரம்: சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் - ஆணையர் எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில பள்ளிக் கல்வித்துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் கசிந்தன.
இந்த நிலையில் தேர்வுத்துறை பிறப்பித்த வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் செயல்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே வெளியான அட்டவணைப்படி திருப்புதல் தேர்வு எவ்வித மாற்றமின்றி அதே தேதியில் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.











