தமிழ்நாட்டில் கனமழை: டெல்டா மாவட்டங்களில் நீரில் மூழ்கிய 1.50 லட்சம் ஏக்கர் பயிர்கள்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் முக்கிய சுரங்கபாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. பல்வேறு இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு
சென்னைக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்து கொண்டிருக்கும் நிலையில், ரெட் அலர்ட் இல்லை என்று நினைக்க வேண்டாம் என்கிறார் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
கடற்கரையில் இருந்து பிபிசி நேரலை
கரையைக் கடக்கத் தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம். களத்திலிருந்து விரிவான தகவல்களை ஃபேஸ்புக் நேரலையில் வழங்குகிறார் முரளிதரன் காசி விஸ்வநாதன்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, கரையைக் கடக்கத் தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் அடுத்த சில மணி நேரங்களில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மதியம் 2.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு தமிழ்நாட்டு கடலோரப் பகுதி மற்றும் சென்னையை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதி ஆகியவற்றுக்கு இடையே கரையைக் கடக்கும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு, 20 ஊர்களில் நெற்பயிர்கள் மூழ்கின, நடராஜன் சுந்தர்
படக்குறிப்பு, நீரில் மூழ்கிய நெற்பயிர்.
விழுப்புரம் பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால்
சுமார் 20 ஊர்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்னையாறு, பம்பை ஆறு, மலட்டாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக விழுப்புரம் பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் காணை அருகே உள்ள ஆரியூர், பெரும்பாக்கம், அகரம் சித்தாமூர், பள்ளியந்தூர், மல்லிகைபட்டு ஆகிய இடங்களில் உள்ள 5க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன. இந்நிலையில் பெரும்பாக்கம், ஆரியூர், வேடம்பட்டு, வெங்கடேசபுரம் , ஆலத்தூர், நன்னாடு, விராட்டிகுப்பம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன.இந்தப் பகுதியில் வெள்ள நீர் முழுமையாக சூழ்ந்துள்ளதால் இடுப்பளவு நீரில் நெல் பயிர்கள் மூழ்கியுள்ளன. "மழைக்கு முன்பாக ஏரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை அதிகாரிகள் யாரும் எங்களை சந்தித்து சேதம் குறித்துக் கேட்க வில்லை. மேலும் அரசு தக்க நடவடிக்கை எடுத்து நீர் வடிவதற்கான கால்வாயை சீரமைக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்," என விவசாயிகள் வேண்டுகோள் கோருகின்றனர்.
நகர்ந்து வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவிக்கிறது. சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கு திசையில் 80 கிலோ மீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரிக்கு கிழக்கு - வடகிழக்கில் 140 கிலோமீட்டர் தூரத்திலும் இருப்பதாக இன்று மதியம் சுமார் 2.45 மணியளவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
என்ன சொல்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்?
கனமழை குறித்த தற்போதைய சூழல் என்ன?
போலி செய்திகளை நம்பாதீர்கள்!
மழை மற்றும் வெள்ளம் தொடர்பாக எந்த ஒரு போலிச் செய்திகளையும் நம்பாதீர்கள். சரியான தகவல்களை அரசு வலைதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
விடாது பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேக்கம்
சென்னையில் கடந்த 18 மணிநேரமாக தொடர்ந்து தீவிரமாக மழை பெய்து வரும் சூழலில் பல்வேறு இடங்களில் பெருமளவில் மழைநீர் தேங்கியுள்ளது. அவ்வாறு மழைநீர் தேங்கியுள்ள கே.கே. நகர் மருத்துவமனை வளாகத்திலிருந்து பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் வழங்கும் நேரலை.
இலங்கையில் கனமழை: 25 ஆனது உயிரிழப்பு எண்ணிக்கை, ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை
பட மூலாதாரம், dmc sri lanka
இலங்கையில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
17 மாவட்டங்களில் கடும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
இதன்படி, 60,264ற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 2,12,060ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களுக்கு மத்தியில், நான்கு சிறார்களும், மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.
நீரில் மூழ்கி 15 பேரும், மண்சரிவில் 8 பேரும், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 2 பேரும் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.
7 பேர் காயமடைந்து, ஆண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
76 இடைதங்கல் முகாம்களில் 12,476 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், 10,023 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 11 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
கண்டி, கேகாலை, குருநாகல், ஆகிய மூன்று மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த மாவட்டங்கள் உள்ளடங்களாக ஏனைய 11 மாவட்டங்களுக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு திசையில் சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ள தாழமுக்க நிலைமை, வலுவடைந்து பருத்தித்துறையை நோக்கி வடக்காக நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கடல் தொழிலாளர்களை மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு, நடராஜன் சுந்தர்
விழுப்புரம் மரக்காணம்
அடுத்த வண்டிப்பாளையம் கிராம தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு.
தமிழகத்தில் காற்றழுத்த
தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக சூழ்ந்தது.
மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தளாவானுர் தடுப்பணையில் மதகு உடைந்ததால்,
தடுப்பணையில் நீர் சேகரிக்க
முடியாமல் வெளியேறியது.
இதனை தொடர்ந்து விழுப்புரம்
மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் மற்றும் அனுமந்தை ஆகிய கிராமங்களுக்கு இடையில் கழுவெளி
பகுதியில் தரைப் பாலம் அமைந்துள்ளது.
இந்த தரைப்பாலமானது
வண்டிப்பாளையம் கிராமத்தை அடுத்த ஓமிப்பேர், நடுகுப்பம், கிளாப்பாக்கம், நாணக்கால் மேடு ஆகிய கிராமங்களையும், அனுமந்தை அடுத்த ஆட்சிப்பாக்கம், ஊரணி, பாலக்காடு, ஆத்திக்குப்பம்,
கீழ் பேட்டை, செட்டி நகர், செட்டி குப்பம், செய்யங்குப்பம்ஆகிய கிராமங்களை இணைக்கும் முக்கிய தரைப்பாலமாக
இது தரைப்பாலம் அமைந்துள்ளது.
தற்போது பெய்து வரும்
கனமழையின் காரணமாக இந்த தரைப்பாலம் வெள்ள நீரால் மூழ்கி உள்ளது.இதனால் அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 20 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு நகரத்திற்குச் செல்லும்
நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக தரைப்பாலத்தில்
உயர்மட்ட பாலம் அமைக்க பொதுமக்கள் சார்பில் பல்வேறு முறை கோரிக்கை விடுக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 20 மணி நேரத்திற்கு மேல் தொடரும் கனமழை; மருத்துவமனைக்குள் புகுந்த தண்ணீர்
விடாது பெய்து வரும் கனமழை
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
டெல்டா மாவட்டங்களில் நீரில் மூழ்கிய 1.50 லட்சம் ஏக்கர் பயிர்கள்
படக்குறிப்பு, தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர்
தமிழ்நாட்டில் வடகிழக்கு
பருவ மழை தீவிரமாக பெய்து வருவதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெற்
பயிர்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. பல இடங்களில் நெற் பயிர்கள் முற்றிலும் மூழ்கி, அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக,
தஞ்சாவூர் மாவட்டம் முதலை
முத்துவாரி உள்ளிட்ட வாரிகளில் வெள்ள நீர் வயல் வெளிக்குள் புகுந்துள்ளன.தொடர்ந்து மழை பெய்து வருவதால், தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து
வருகின்றனர்.
வேளாண்துறை அதிகாரிகளின்
தகவல்படி, தற்போது வரை திருவாரூர்
மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர்,
தஞ்சாவூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. பயிர்
சேதம் குறித்த கணக்கெடுப்பு பணிகளை வேளாண்துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த சில நாட்களுக்கும்
பெரு மழை நீடித்து, வயல்களில் தேங்கியுள்ள
தண்ணீர் வடியவில்லை என்றால் பயிர் சேதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு வாரத்தில்
சேத மதிப்பின் முழு விபரம் தெரிய வரும் என்றும் தெரிவித்தனர். ஆனால், விவசாயிகள் தரப்பில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள
பரப்பு இன்னும் அதிகம் என்கிறார்கள்.
இந்த பயிர்களை காப்பாற்றுவது கேள்விக் குறியாகியுள்ளது. வேளாண்துறையினர் விரைந்து கணக்கெடுப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்றும் , சேதமடைந்துள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
`பருவநிலை பிரச்னையை எதிர்கொள்ள சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்` - COP26 மாநாட்டில் வெளியான அறிவிப்பு
வந்துகொண்டிருக்கும் செய்தி, வெள்ளநீரில் மூழ்கிய சென்னையின் முக்கிய சுரங்கப் பாதைகள்
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக பல முக்கிய சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன.
துரைசாமி சுரங்கப்பாதை, வியாசார்பாடி சுரங்கப்பாதை, தாம்பரம் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, கணசேபுரம் சுரங்கப்பாதை உள்ளிட்ட 11 சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன.
அதேபோன்று கே.கே.நகர் - ராஜ மன்னார் சாலை, மயிலாப்பூர் - சிவசாமி சாலை, வியாசார்பாடி- முல்லைநகர் மேம்பாலம் போன்ற சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் அட்டவணைப்படி விமானங்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கொரோனா நான்காம் அலை
பட மூலாதாரம், Getty images
ஜெர்மனியில் கொரோனா தொற்றின் நான்காம் அலையை தடுப்பதற்கான
நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் மேலும் ஒரு லட்சம் பேர் வரை உயிரிழக்கக்கூடும் என
ஜெர்மனியின் முக்கிய வைரலாஜிஸ்ட் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் சமீபமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமையன்று பெருந்தொற்று தொடங்கிய
காலத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
“நாம் உடனடியாக செயலாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார் வைராலஜிஸ்ட்
கிறிஸ்டியன் ட்ரோஸ்டென்.
தற்போதுள்ள நிலையை ஒரு உண்மையான அவசர நிலை என அவர்
விவரித்துள்ளார்.
ஜெர்மனியில் நான்காம் அலை மிக மோசமாக இருக்கும் என சில
மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர்.
தொடர் கனமழை: அண்மைய தகவல்
தென்மேற்கு வங்கக்கடலில், சென்னையின் தென் கிழக்கில்
சுமார் 170கிமீ மற்றும் புதுச்சேரியின் கிழக்கே 170கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு
நிலை உருவாகியுள்ளது.
இது
மேற்குமற்றும்
வடமேற்கு
நோக்கி நகர்ந்து, 11 நவம்பர் மாலைக்குள் வட தமிழகம் மற்றும் சென்னை
மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியை கடக்கவுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
சென்னையின் உதவி எண்
சென்னையில் உள்ள மக்கள் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான குறை மற்றும் புகார்களுக்கு 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தமிழ்நாட்டில் தொடரும் கனமழை
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன; முக்கிய சுரங்கபாதைகள்
நீரில் மூழ்கியுள்ளன. பல்வேறு இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த
தாழ்வு மண்டலம் இன்று கடலூர் அருகே
கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தென் மண்டல
இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று தெரிவித்திருந்தார்.