பிகார் தேர்தல் முடிவுகள்: பாஜக கூட்டணி, காங்கிரஸ், இடதுசாரிகள் வெற்றி, முன்னிலை நிலவரம்

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் வெல்லப் போவது யார்? அடுத்த பிகார் முதல்வர் யார்? நிதீஷ் குமார்? தேஜஸ்வி யாதவா? வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. இந்தக் கேள்விகளுக்கு இன்னும் சில மணி நேரங்களில் விடை தெரியலாம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தேசிய ஜனநாயக கூட்டணியில் வலுப்பெறும் பாஜக - நிதீஷுக்கு பின்னடைவு?

    பிகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரங்களில் நிதீஷ் - பாஜக கூட்டணி சற்று பின் தங்கியிருப்பதாகவே தோன்றினாலும், எந்தக் கூட்டணி அதிக இடங்களைப் பெறும் என்று இப்போது கூற முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 110 இடங்களிலும், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 115 இடங்களிலும் போட்டியிட்டன. கிட்டத்தட்ட சமமான எண்ணிக்கையில் பாஜக இடங்களைப் பெற்றது நிதீஷுக்கு பலவீனமாகவே பார்க்கப்பட்டது.

    ஆனால், நிதீஷ்தான் தங்கள் முதல்வர் வேட்பாளர் என்று பாஜக உறுதியாக கூறிவிட்டது.

    ஆனால், தேர்தல் முன்னணி நிலவரம் தெரியத் தொடங்கியுள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகதான் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் குறைவான இடங்களிலேயே முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் ஒருவேளை தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை வென்றாலும், அதில் நிதீஷின் இடம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை இது எழுப்புகிறது.

  2. தேர்தல் ஆணையத் தளத்தில் உள்ள முன்னிலை நிலவரம்

    முன்னிலை நிலவரம்

    பட மூலாதாரம், eci

  3. 123 இடங்களில் ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

    ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரங்களின் படி 123 இடங்களில் ஆர்.ஜே.டி. காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

    பாஜக - நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது..

  4. பிகார் தேர்தல்: கொரோனா காலத்தில் முதல் பெரிய தேர்தல்

    பிகார் சட்டப் பேரவைக்கு மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தல் கொரோனா காலத்தில் இந்தியா எதிர்கொண்ட முதல் பெரிய தேர்தல்.

    243 சட்டமன்றத் தொகுதிகள், ஹிந்தி, போஜ்புரி, அவதி, உருது உள்ளிட்ட பல்வேறு மொழிகளைப் பேசுகிற மக்கள் என்று பன்முகத் தன்மை வாய்ந்த பெரிய மாநிலத்தில் இந்த தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

  5. பிகார் தேர்தலைப் புரிந்துகொள்ள..

    பாஜக - நிதீஷ் குமாரின் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு புறம் - காங்கிரஸ் - தேஜஸ்வியின் பெருங்கூட்டணி மறுபுறம். பிகார் சட்டப் பேரவைத் தேர்தலின் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு

  6. 99 தொகுதிகளில் தேஜஸ்வி, 58 தொகுதிகளில் நிதீஷ் முன்னிலை

    பிகார் தேர்தல் முடிவுகளில் முன்னிலை நிலவரம் தெரியத் தொடங்கியது. 99 தொகுதிகலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான பெருங்கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கியுள்ளது. பாஜக - ஜேடியு உள்ளடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 58 தொகுதிகளில் முன்னிலை பெறுகின்றன.