தமிழகத்தில் ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் வரும் ஏழாம் தேதியன்று திறக்கப்படமாட்டாது என்றும், இந்த கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.

    மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து

    கொரோனாவுக்கான தடுப்பு மருந்துக்கான ஆரம்ப கட்ட ஆய்வில் இந்திய மருந்து நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏறத்தாழ 30 தடுப்பு மருந்துகள் வெவ்வேறு நிலையில் உள்ளதாகவும், சில பரிசோதனை கட்டத்தை அடைந்து விட்டதாகவும் பி.எம்.ஓ அலுவலகம் தெரிவிக்கிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. "2 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கு பலியாகி இருப்பார்கள்"

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Getty Images

    நாம் வேறு மாதிரி செயல்பட்டிருந்தல், 2 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கு பலியாகி இருப்பார்கள். நாம் சரியாக செயல்பட்டோம், எல்லாம் சரியாக செய்தோம். நாம் பணிக்கு திரும்ப இது சரியான நேரம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் என்கிறர் ஏ.என்.ஐ செய்தி முகமை.

  4. கொரோனா வைரஸ்: இன்று நடந்தவை என்ன?, நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்

    கொரோனா வைரஸ்: இன்று நடந்தவை என்ன?

    பட மூலாதாரம், Getty Images

    • நாட்டில் எல்லைகளை திறப்பதற்கு இன்னும் வெகுநாட்கள் ஆகும் என நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். அதே நேரம் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே போக்குவரத்தை தொடங்க சாத்தியகூறுகளை விவாதிக்க இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளதால் “அந்தபோரில் வென்றுவிட்டதாக” ஜெசிந்தா ஆர்டன் அண்மையில் தெரிவித்து இருந்தார்.
    • அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ பொய் கூறுவதாக சீன அரசு ஊடகம் குற்றஞ்சாட்டி உள்ளது. வுகானில் உள்ள ஒரு பரரிசோதனை கூடத்திலிருந்தே கொரோனா பரவியதாகவும், அதற்கான ஏராளமான ஆதரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் கூறியதை அடுத்து சீன ஊடகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
    • கொரோனா நிவாரண தொகை அளித்ததால் ஏற்பட்ட பற்றாக்குறையை சமாளிக்க 3 ட்ரில்லியன் டாலர்கள் கடன் வாங்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
    • பாரிஸ் அருகே டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி நிமோனியா இருப்பதாக சிகிச்சை பெற்ற நபருக்கு உண்மையிலேயே கொரோனா இருந்திருக்கிறது என்கிறார் அந்த நோயாளரின் மருத்துவர் கொஹன். அந்த நபரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இப்போது வெளிவந்துள்ளன. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது என்கிறார் மருத்துவர் கொஹென்.
    • கொரோனாவை கண்காணிக்க பிரிட்டன் கொண்டுவந்துள்ள புதிய செயலி தனியுரிமையில் தலையிடுவதாக சிலர் கவலை தெரிவித்துள்ளனர். தனிமனித சுதந்திரத்திற்கு நிச்சயம் இந்த செயலி அச்சுறுத்தலானது இல்லை என சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
    • கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தினார்.
    • ஜன நெருக்கடி உள்ள நகரம் என்பதாலும், பொது கழிப்பறையை மக்கள் அதிகம் பயன்படுத்துவதாலும் கொரோனா சென்னை மாநகரத்தில் வேகமாக பரவி உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். (விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்)
    • இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 46,711 ஆக உள்ளது. இந்தியாவில் உள்ள ஆக்டிவ் கேஸ்கள் 31, 967வும், பலி எண்ணிக்கை 1,583 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,160 ஆகவும் உள்ளன என்கிறது மத்திய சுகாதார அமைச்சகம்
    • தமிழகத்தில் புதிதாக 508 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக அதிகரிப்பு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் இருவர் உயிரிழப்பு.
    • இந்தியாவில் வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
  5. CoronaVirus: பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 05/05/2020, சீனாவுக்கு எதிராக ஆதாரம் திரட்டும் அமெரிக்கா

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  6. கொரோனா வைரஸ் பரவல் முடிந்தபின் சீனாவுக்கான முதலீடுகளை இந்தியா ஈர்க்கும்; புவி அரசியல் மாறும்', பிபிசி மானிட்டரிங் பிரிவு

    கொரோனா வைரஸ் பரவல் முடிந்தபின் சீனாவுக்கான முதலீடுகளை இந்தியா ஈர்க்கும்; புவி அரசியல் மாறும்'

    பட மூலாதாரம், Getty Images

    உலகம் முழுவதும் கோவிட்- 19 பெருந்தொற்று பரவலின் காரணமாக சர்வதேச பொருளாதாரம் பெருமளவில் சரிந்துள்ள நிலையில், தங்களின் உற்பத்திச் சாலைகளை சீனாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அந்த நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு நிறுவனங்கள் பரிசீலனை செய்து வருகின்றன.

    சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் சர்வதேச நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் பெருமளவில் முதலீட்டைப் பெற நாம் தயாராக இருக்க வேண்டும் என்று ஏப்ரல் 27-ஆம் தேதி அன்று மாநில முதல் அமைச்சர்களுடன் நடந்த காணொலிக் காட்சி வாயிலான கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியிருந்தார் என்று இந்திய ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப் போக்குவரத்து துறைக்கும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கும் அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரி கோவிட்- 19 நோய்த்தொற்று காரணமாக சீனாவுக்கு உண்டாகியுள்ள இந்த சிக்கல் தொழில் உற்பத்தி மையமாக இந்தியா உருவாவதற்கான வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது பின்பு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த நிறுவனங்கள் சீனாவில் இருக்கும் தங்கள் உற்பத்திக் கூடங்களை வேறு நாடுகளுக்கு மாற்ற விரும்புவதாகவும், அப்படி மாற்ற விரும்பினால் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்கும் என்றும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி ஏப்ரல் 21ஆம் தேதி வெளியான செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.

  7. கொரோனா வைரஸ்: உங்கள் காதலனையோ, காதலியையோ பிரிந்து இருக்கிறீர்களா?, இந்தக் கட்டுரை உங்களுக்கானது

    கொரோனா வைரஸ்: உங்கள் காதலனையோ, காதலியையோ பிரிந்து இருக்கிறீர்களா?

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியாமல் தொலைத் தொடர்பு முறைகளில் உறவுகளைப் பேணி வருகின்றனர்.

    இந்நிலையில், நாம் தொலைபேசி அல்லது வீடியோ செயலிகள் மூலம் எந்த அளவுக்கு தொடர்புகளை அர்த்தம் உள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும்?

    எளிதான வழிகளை நிபுணர்கள் சொல்லித் தருகிறார்கள்.

  8. நீலகிரியில் 4 பேருக்கு கொரோனா

    நீலகிரியில் 4 பேருக்கு கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவடத்தில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக புதிதாக பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. அதனால், நீலகிரி ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், தற்போது மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோவையில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாமக்கல்

    நாமக்கல்லில் 15 பேருக்கு கொரோனா உறுதி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்களில், பெரும்பாலானோர் சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறிகள் சந்தைக்கு சென்று வந்தவர்கள் மற்றும் சென்று வந்தவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என சுகாதாரத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 50 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

  9. தமிழ்நாட்டில் இன்றும் 500 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு. தேசிய, சர்வதேச நிலவரம் என்ன? நேரலை.

  10. கொரோனா வைரஸ்: பிபிசி தமிழ் செய்தியறிக்கை

    தமிழக அரசு மே 7 முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில் மே 7 அழிவின் ஆரம்பம் என்ற ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் பலர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

  11. தமிழகத்தில் அண்மைய தகவல் என்ன?

    தமிழகத்தில் அண்மைய தகவல் என்ன?

    பட மூலாதாரம், Getty Images

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக சென்னையில் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஒரே நாளில் இன்று (மே 5) 508 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று இறந்துவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துவிட்டது.

    இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4058 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் இன்று 76 நபர்கள் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர் என்பதால், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1485ஆக உயர்ந்துள்ளது.

  12. சென்னையில் கோவிட்-19 தொற்று அதிகம் பரவுவது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

    கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அரசின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று (மே 5) மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

    சென்னையில் அதிக மக்கள் தொகை வசிக்கும் குறுகலான தெருக்கள் இருப்பதோடு, பொது கழிவறை பயன்பாடு அதிகம் இருப்பதால் நோய் தொற்று அதிகமாக பரவுவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா வைரஸ்: இந்திய நிலவரம் இதுதான்

    இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 46,711 ஆக உள்ளது. இந்தியாவில் உள்ள ஆக்டிவ் கேஸ்கள் 31, 967வும், பலி எண்ணிக்கை 1,583 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,160 ஆகவும் உள்ளன என்கிறது மத்திய சுகாதார அமைச்சகம்.

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு குழு: தமிழக முதல்வர்

    சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு குழு: தமிழக முதல்வர்

    பட மூலாதாரம், Twitter

    சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    கொரோனா பாதிப்பு குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 14 முறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. 10 குழுக்கள் அமைத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    கொரோனா பரவலைத் தடுக்க 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. மூன்று அதிகாரிகளுக்கு உதவுவதற்கு 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.

    ஜன நெருக்கடி உள்ள நகரம் என்பதாலும், பொது கழிப்பறையை மக்கள் அதிகம் பயன்படுத்துவதாலும் கொரோனா சென்னை மாநகரத்தில் வேகமாக பரவி உள்ளதாக தெரிவித்துள்ளார். அதை நேரம் அரசு அதனை கட்டுப்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.

  15. சிங்கப்பூர் - அண்மைய நிலவரம் என்ன?

    சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் புதிதாக 632 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது உறுதியானது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 19,410 ஆக அதிகரித்துள்ளது.

    புதிதாக நோய்த் தொற்றியோரில் 9 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர். மற்ற அனைவரும் அந்நியத் தொழிலாளர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    "வைரஸ் தொற்று பாதிப்புள்ள நோயாளிகள் அனைவருக்கும் உரிய மருத்துவப் பராமரிப்பு வழங்கப்படும். சிகிச்சைக்கான மொத்த செலவையும் சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். சிங்கப்பூர் குடிமக்கள் பெறக்கூடிய அதே தரமான பராமரிப்பு அந்நியத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும்," என அமைச்சர் ஈஸ்வரன் உறுதி அளித்துள்ளார்.

    இந்தச் செய்தி அடங்கிய காணொளிப் பதிவு ஒன்றை அவர் இன்று வெளியிட்டுள்ளார். இந்தக் காணொளியானது அந்நியத் தொழிலாளர்களுக்கு வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  16. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு

    கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவில் வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

  17. கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகி உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    மூன்று பேரும் வயநாடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கேரளாவில் 502 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 37 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

  18. வெளிநாட்டு தொழிலாளர்களே எங்களது அடுத்த இலக்கு - மலேசியா

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

    மலேசியாவில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,383ஆக அதிகரித்துள்ளது.

    இதுவரை ஒரே நாளில் பதிவான நோய்த்தொற்று எண்ணிக்கையில் இதுவே ஆகக் குறைவானது என்று மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 83 நோயாளிகள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும், குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,567 என்றும் அவர் தெரிவித்தார்.

    மலேசியாவில் கோவிட்-19 நோயாளிகளில் இதுவரை 71.55 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.

    இதற்கிடையே அந்நியத் தொழிலாளர்களை கோவிட் 19 பரிசோதனைக்கு உட்படுத்துவது தவிர்க்க இயலாதது என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    அந்த அமைச்சின் அடுத்த இலக்குகளில் அந்நியத் தொழிலாளர்களும் இடம்பெற்றிருப்பதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

    "இதற்கு முன்பு ஸ்ரீ பெட்டாலிங் பகுதியில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்கேற்றவர்கள்தான் சுகாதார அமைச்சின் இலக்காக இருந்தனர். தற்போது அந்நியத் தொழிலாளர்கள் எங்களது இலக்காக மாறியுள்ளனர். குறிப்பாக கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் உள்ளிட்ட சிவப்பு மண்டலத்தில் இடம்பெற்றுள்ள பகுதிகளில் வசிக்கும் அந்நியத் தொழிலாளர்கள் மிக விரைவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்," என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

  19. 50 விமானங்களை அனுப்பி உள்ள இந்திய அரசு