தமிழகத்தில் ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் வரும் ஏழாம் தேதியன்று திறக்கப்படமாட்டாது என்றும், இந்த கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கோயம்பேடு அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு பரிசோதனை - ஓ. பன்னீர்செல்வம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. ஊர் திரும்ப மறுக்கும் பறவைகள்

  3. கொரோனா உலகம், இந்தியா மற்றும் தமிழகம் - ஆறு முக்கிய செய்திகள்

    கொரோனா உலகம், இந்தியா மற்றும் தமிழகம் - ஆறு முக்கிய செய்திகள்

    பட மூலாதாரம், Getty Images து

    1.கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்க 250,000 ஐ கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து சர்வதேச அளவில் மீண்டவர்களின் எண்ணிக்கை 11,71, 569 ஆக உள்ளது. அமெரிக்காவில் 187, 180 பேர் மீண்டிருக்கிறார்கள், ஜெர்மனியில் 135,100 பேர் மீண்டிருக்கிறார்கள், ஸ்பெயினில் 121,343 பேர் மீண்டிருக்கிறார்கள் என்கிறது ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள்.

    2.பாரிஸ் அருகே டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி நிமோனியா இருப்பதாக சிகிச்சை பெற்ற நபருக்கு உண்மையிலேயே கொரோனா இருந்திருக்கிறது என்கிறார் அந்த நோயாளரின் மருத்துவர் கொஹன். அந்த நபரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இப்போது வெளிவந்துள்ளன. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது என்கிறார் மருத்துவர் கொஹென்.

    அந்த நோயாளர் முழுவதுமாக குணமாகிவிட்டார். எங்கிருந்து நோய் தொற்றியது என்பதே அவருக்கு தெரியவில்லை. கொரோனா தொற்று பரவிய இடங்களுக்கு அவர் செல்லவும் இல்லை.

    அப்படியானால் இப்போது கூறப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே கொரோனா பிரான்ஸிற்கு வந்திருக்கிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவரின் மனைவி விமான நிலையம் அருகே ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றுகிறார். சீனாவிலிருந்து வந்த நபர்கள் அங்கு வந்திருக்கலாம். அவர் மூலமாக இவருக்கு பரவி இருக்கலாம் என்கிறார் மருத்துவர்.

    3. நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நீட் உள்ளிட்ட தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

    இன்று மாணவர்கள் தங்களின் கேள்விகள், சந்தேகங்களை அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேகுடன் முன்வைத்தனர். அவற்றுக்குப் பதிலளித்த அவர், தேர்வு தொடர்பாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அவர், ''நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதியன்று நடைபெறும். JEE முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23-ம் தேதி வரை நடைபெறும் என்றார்.

    4. கடந்த 21 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படாததால் பச்சை மண்டலமாக மாறியுள்ளது ஈரோடு மாவட்டம்.

    ஈரோடு மாவட்டத்தில், மொத்தம் 70 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 69 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். பெருந்துறையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மாவட்டத்தில் இரண்டு வாரங்களாக புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படாததால் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, 21 நாட்களாக புதிதாக நோய்த்தொற்று பதிவாகததையடுத்து ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக இன்று மாறியுள்ளது.

    பச்சை மண்டலமாக மாறினாலும், ஊரடங்கு முடியும் வரை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    5. சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் டாஸ்மாக் வரும் மே 7 முதல் திறக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது சமூக ஊடகங்களில் கடும் கண்டனத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.

    ட்விட்டரில் #TASMAC என்ற ஹாஷ்டேகில் 17 ஆயிரம் ட்வீட்டுகள் பகிரப்பட்டு ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் #மே7அழிவின்ஆரம்பம் என்ற ஹாஷ்டேக் உள்ளது.

    இதன் கீழ் 8.5 ஆயிரம் ட்வீட்டுகள் பகிரப்பட்டுள்ளன.

    6. இன்று மாலை 4 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 195 பேர் பலியாகி உள்ளனர், 1020 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்து வருபவர்களின் விகிதம் 27.42 சதவீதமாக உள்ளது என்று இன்று சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

  4. இலங்கையில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

    இலங்கையில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

    இந்த தகவலை சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தினார்.

    கொழும்பு - முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான பெண்ணொருவரே வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

    அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  5. கொரோனா வைரஸ்: கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு தொற்று, 195 பேர் பலி

    இன்று மாலை 4 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 195 பேர் பலியாகி உள்ளனர், 1020 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்து வருபவர்களின் விகிதம் 27.42 சதவீதமாக உள்ளது என்று இன்று சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. அலுவலகங்கள் கடைப்பிடிக்கும் நடைமுறை

    இப்போது இயங்கும் அலுவலகங்கள் ஊழியர்களுக்கு தெர்மல் பரிசோதனையை உறுதபடுத்த வேண்டும். போதுமான முகக்கவசங்கள் இருக்கிறதா, சானிடைசர்ஸ் இருக்கிறதா? சமக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஊழியர்கள் ஆரோக்கிய சேது ஆப் ஊழியர்கள் அனைவரும் தரவிறக்கம் செய்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புனியா சலிலா ஸ்ரீவத்சவா தெரிசித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர

    கொரோனா காரணமாக இந்தியா திரும்ப முடியாமல் பல்வேறு நாடுகளில் தவிப்பவர்களை மீட்க மே7 முதல் 13 ஆம் தேதி வரை 64 விமானங்கள் இயக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. கொரோனா வைரஸ்: சுய இன்பம் என்ன தொடர்பு?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  9. கொரோனா வைரஸ்: தமிழகத்தில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் டாஸ்மாக்

    சென்னை நீங்கலாக தமிழக்த்தின் பிற பகுதிகளில் டாஸ்மாக் வரும் மே 7 முதல் திறக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இது சமூக ஊடகங்களில் கடும் கண்டனத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.

    ட்விட்டரில் #TASMAC என்ற ஹாஷ்டேகில் 17 ஆயிரம் ட்வீட்டுகள் பகிரப்பட்டு ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

    இரண்டாவது இடத்தில் #மே7அழிவின்ஆரம்பம் என்ற ஹாஷ்டேக் உள்ளது.

    இதன் கீழ் 8.5 ஆயிரம் ட்வீட்டுகள் பகிரப்பட்டுள்ளன.

    இப்படியான சூழலில், இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    X பதிவை கடந்து செல்ல, 2

    X பதிவின் முடிவு, 2

    X பதிவை கடந்து செல்ல, 3

    X பதிவின் முடிவு, 3

  10. இந்தோ திபத்திய எல்லைப்படை காவலர்களுக்கு கொரோனா

    இந்தோ திபத்திய எல்லைப்படை காவலர்கள் 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதில் 43 பேர் டெல்லியில் உள்நாட்டு பாதுகாப்பு பணியில் இருந்ததாகவும், இருவர் டெல்லி போலீஸுடன் இணைந்து சட்ட ஒழுங்கு பாதுகாப்பு பணியில் இருந்ததாகவும் கூறுகிறது இந்தோ திபத்திய எல்லைப்படை.

  11. பிரான்ஸில் டிசம்பர் மாதமே பரவியதா கொரோனா?

    பிரான்ஸில் டிசம்பர் மாதமே பரவியதா கொரோனா?

    பட மூலாதாரம், Getty Images

    பாரிஸ் அருகே டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி நிமோனியா இருப்பதாக சிகிச்சை பெற்ற நபருக்கு உண்மையிலேயே கொரோனா இருந்திருக்கிறது என்கிறார் அந்த நோயாளரின் மருத்துவர்.

    அவரது பரிசோதனை முடிவுகள் இப்போது வெளிவந்துள்ளன. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது என்கிறார் மருத்துவர் கொஹென்.

    அந்த நோயாளர் முழுவதுமாக குணமாகிவிட்டார். எங்கிருந்து நோய் தொற்றியது என்பதே அவருக்கு தெரியவில்லை. கொரோனா தொற்று பரவிய இடங்களுக்கு அவர் செல்லவும் இல்லை.

    அப்படியானால் இப்போது கூறப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே கொரோனா பிரான்ஸிற்கு வந்திருக்கிறது.

    கொரோனா தொற்றுக்கு உள்ளானவரின் மனைவி விமான நிலையம் அருகே ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றுகிறார். சீனாவிலிருந்து வந்த நபர்கள் அங்கு வந்திருக்கலாம். அவர் மூலமாக இவருக்கு பரவி இருக்கலாம் என்கிறார் மருத்துவர்.

  12. சோனியா காந்தி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

    காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி காணொளி காட்சி மூலம் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலத்தின் முதல்வர்களுடன் நாளை கொரோனாவின் நிலை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. நீட் தேர்வு புதிய தேதி அறிவிப்பு, அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார்

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நீட் உள்ளிட்ட தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

    இன்று மாணவர்கள் தங்களின் கேள்விகள், சந்தேகங்களை அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேகுடன் முன்வைத்தனர். அவற்றுக்குப் பதிலளித்த அவர், தேர்வு தொடர்பாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அவர், ''நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதியன்று நடைபெறும். JEE முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23-ம் தேதி வரை நடைபெறும் என்றார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  14. Saudi, UAE, Oman, Bahrain, Kuwait, Dubai -ல் வேலை செய்பவர்கள் நிலை?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

    கொரோனா வைரஸ் தொற்றுகாரணமாக உலகில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    அதிலும் தங்களின் சொந்த ஊர், குடும்பங்களை பிரிந்து வெளிநாடுகளில் பணியாற்றி வரும் நபர்களை,இந்த வைரஸை விட அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிக கடுமையாக பாதித்து வருகிறது.

    குறிப்பாக இந்தியர்கள்அதிக அளவு பணியாற்றக்கூடிய அரபு நாடுகளில், கொரோனா வைரஸ் காரணமாக பலர் வேலையிழந்துள்ளனர்.

  15. இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்த முதல் பெண்

    இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.

    ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான பெண்ணொருவரே இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

    ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இந்த பெண் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குருநாகல் - பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

    குறித்த பெண் ஏற்கனவே சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

    இலங்கையில் இதற்கு முன்னர் 7 பேர் உயிரிழந்திருந்ததுடன், அவர்கள் அனைவரும் ஆண்களாவர்.

    கோவிட் தொற்றுக்குள்ளாகிய நிலையில் இலங்கையில் உயிரிழந்த முதலாவது பெண் இவராவார்.

    கோவிட் தொற்று காரணமாக இதுவரை 721 பேர் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் 520 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 194 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

    கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 137 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

  16. மக்களை வேவு பார்க்கின்றனவா இந்திய அரசின் கோவிட்-19 செயலிகள்?

    கோவிட் 19

    பட மூலாதாரம், Getty Images

    கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களைக் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா பயன்படுத்துவது தனியுரிமைப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய அரசின் 'ஆரோக்கிய சேது' உட்பட மத்திய, மாநில அரசுகள் பல அதிகாரபூர்வ செயலிகளைப் பயன்படுத்துகின்றன. கொரோனா தொற்று இருக்கும் ஒருவர் அருகில் வந்தால் எச்சரிக்கை செய்யும் வகையில் இந்த செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் இந்த செயலிகளைத் தரவிறக்கிப் பயன்படுத்துகிறவர்களின் அந்தரங்கத்தில் ஊடுருவி வேவு பார்க்க இவை உதவுவதாகவும், டிஜிடல் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இது தவிர, கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பொது முடக்க நிலையின்போது பலர் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதாலும், இணையவழி நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் பிற இணைய வழி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாலும் இணைய வழிக்குற்றங்கள் அதிகரிக்கும் என்று சைபர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

  17. மாதவிடாய் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகளால் பலருக்கு மன அழுத்தம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இதனால் பெண்களின் உடல்நலம் பெரிதாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சென்னையில் உள்ள மகப்பேறு மருத்துவர் உமையாள் முருகேசனிடம் பேசினோம். பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியாவுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து சில முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

    வெளிப்புற நடவடிக்கைகள் குறைந்துவிட்டதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. திடீரென உடல் எடை அதிகரிப்பது, மன அழுத்தம் ஆகியவை மாதவிடாய் சுழய்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    சமீபத்தில் இம்மாதிரியான அழைப்புகள் அதிகம் வருகிறது. அதில் பலருக்கு பெரும்பாலும் பிசிஓடி பிரச்சனைகள் கூட கிடையாது.

    என்ன மாதிரியான உணவு வழங்க வேண்டும் என பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக இந்த சமயத்தில் இளம் வயதினர் நொறுக்கு தீனிகளை அதிகம் உட்கொள்கின்றனர் எனவே அதை தவிர்த்து சத்தான உணவுகளை மேற்கொள்ள வேண்டும். முடிந்தவரை உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    தற்போதைய நிலையில், வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக கருச்சிதைவுகள் ஏற்படுகின்றன. அது மட்டுமல்லாமல் திட்டமிடாத கர்ப்பங்களும் ஏற்படுகின்றன.

    ஆரோக்கியமான உணவை உட்கொண்டு தேவையற்ற எண்ணங்களை தவிர்த்து நேர்மையாக சிந்தித்து வந்தால் வெற்றிகரமாக இந்த கொரோனா தொற்றிலிருந்து வெளிவரலாம்.

  18. கோவையில் குணமடைந்த காவலர்கள்

    கோவையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 காவலர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

    கோவை மாநகரில் கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வந்த 7 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் 6 பேர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், ஒருவர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    மேலும், பாதிக்கப்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வந்த போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 6 காவலர்கள் குணமடைந்துள்ளனர்.

    அவர்களை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி மற்றும் மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும், ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் மற்றொரு காவலரும் விரைவில் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பபடுவார் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  19. வந்துகொண்டிருக்கும் செய்தி, பச்சை மண்டலமாக மாறியது ஈரோடு மாவட்டம்

    கடந்த 21 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படாததால் பச்சை மண்டலமாக மாறியுள்ளது ஈரோடு மாவட்டம்.

    ஈரோடு மாவட்டத்தில், மொத்தம் 70 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 69 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். பெருந்துறையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மாவட்டத்தில் இரண்டு வாரங்களாக புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படாததால் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, 21 நாட்களாக புதிதாக நோய்த்தொற்று பதிவாகததையடுத்து ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக இன்று மாறியுள்ளது.

    'பச்சை மண்டலமாக மாறினாலும், ஊரடங்கு முடியும் வரை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  20. சென்னையில் டாஸ்மாக கடைகள் திறக்கப்படாது