மீனவர்களுக்கு சிறப்புத்திட்டம்
மீனவர்களுக்கான சிறப்பு திட்டம் மூலம் மீனவர்களுக்காக உள்கட்டமைப்பு, சந்தைப்படுத்தல் உள்ளிட்டவை மேம்படுத்தப்படும்.

பட மூலாதாரம், ANI
இந்திய அரசின் 2019-2020ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் நாளன்று அது குறித்த செய்திகளை முழுமையாகவும் விரிவாகவும் அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
மீனவர்களுக்கான சிறப்பு திட்டம் மூலம் மீனவர்களுக்காக உள்கட்டமைப்பு, சந்தைப்படுத்தல் உள்ளிட்டவை மேம்படுத்தப்படும்.

பட மூலாதாரம், ANI
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளதாக மகாத்மா காந்தி கூறினார். அவர் பிறந்த150வது ஆண்டில் கிராமப்புற மேம்பாட்டுக்கு அரசு பலவற்றை செய்கிறது.
2022இல் இந்திய சுதந்திரத்தின்75ஆம் ஆண்டில், இணைப்புகளை ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் தவிர ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் சமையல் எரிவாயு மற்றும் மின்வசதி வழங்கப்படும்.ன்
விமானப் போக்குவரத்து, ஊடகம், காப்பீடு ஆகிய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2018-19ஆம் நிதியாண்டில் அந்நிய முதலீட்டு வளர்ச்சி விகிதம் 6%ஆக இருந்தது.
சமூக நல திட்டங்களை தொண்டு நிறுவங்கள் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க வருடாந்திர மாநாடு இந்தியாவில் நடத்தப்படும்
சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை எளிமையான வழிமுறைகள் மூலம் தொழிற்கடன் வழங்கப்படும்.
மேலும், 1.5கோடி ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருவாய் உள்ள சில்லறை வணிகர்கள் மற்றும் சிறு முதலாளிகள் மூன்று கோடி பேருக்கு ஓய்வு ஊதிய திட்டங்கள் விரிவு செய்யப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தை அரசு மறுகட்டமைக்கும். பாரத் மாலா திட்டம் மூலம் மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு உதவி செய்யப்படும்.
பழைய மின் உற்பத்தி நிலையங்களை நிறுத்திவிட்டு, உற்பத்தி திறனைவிட குறைவாக பயன்படுத்தப்படும் மின் உற்பத்தி நிலையங்களை மேம்படுத்த உயர்மட்ட குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.

பட மூலாதாரம், ANI
கடந்த ஓராண்டில் 657 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் தண்டவாளங்கள் இந்தியாவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
சாலைப்போக்குவரத்தில் நெரிசலைக் குறைக்க நதிகள் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும்.
2018 முதல் 2030 வரை ரயில்வேவை மேம்படுத்த 50 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையைத் தொடங்கினார். கடந்த அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டிலேயே தங்கள் திட்டங்கள் தெளிவுபடுத்தப் பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மூன்று ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக இந்தியா உருவாகும் என்றும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் உலகின் 11வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா இப்போது ஆறாம் இடத்தில் இருப்பதாகக் கூறினார் நிர்மலா சீதாராமன்.
பொருள் வாங்குதிறன் சமநிலை (Purchasing power parity) அடிப்படையில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து மூன்றாம் பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது - நிர்மலா சீதாராமன்.
17வது மக்களவையின் முதல் பட்ஜெட் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்றம் வந்தார் பிரதமர் நரேந்திர மோதி.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் முதன்முதலில் ஒரு முழுநேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பட்ஜெட் தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பாஜகவின் வெற்றியை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் இது. இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை தாக்கல் செய்வார்.