பிசிராந்தையார் பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு அறிவுரை
வழங்கிய
"காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே."
எனும் புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டினார்
பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அளிக்கப்பட்ட அறிவுரையை அரசாங்கம் ஏற்கிறது என்று நிர்மலா குறிப்பிட்டார்.
இந்த பாடலுக்கு அவர் நாடாளுமன்றத்தில் விளக்கமும் அளித்தார்.
“வயலில் விளைந்துள்ள நெற்கதிர்களை அறுத்து, நெல்மணிகளை பிரித்து அரிசியாக்கிப் பின் சோற்றுக் கவளமாக்கி யானைக்கு உண்ணத் தந்தால், ஒரு துண்டு நிலத்தில் விளையும் அரிசியும் கூட அந்த யானைக்குப் பலநாள் உணவாகும். அப்படிச் செய்யாமல் அந்த யானையையே வயலுக்குள் சென்று பயிரை மேயுமாறு விட்டுவிட்டால், அதன் வாய்க்குள் செல்லும் நெல்லை விட அதன் கால் பட்டுக் கசங்கும் கதிர்களே மிகுதியாக இருக்கும்."அதேபோல வரித் திணிப்புச் செய்து, இரக்கமின்றித் தன் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்ய அரசன் முற்பட்டால், அந்த நாடு 'யானை புக்க புலம்' போல அவனுக்கும் பயன் தராமல், மக்களும் பயன்கொள்ள வழியில்லாமல் சீர்கெடும்” என்பதுதான் என நிர்மலா குறிப்பிட்டார்.
2013-14இல் 6.38 லட்சம் கோடியில் இருந்து 2018-19இல் 11.37 லட்சம் கோடியாக இந்தியாவின் நேரடி வரி வருவாய் உயர்ந்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் இது 78% வளர்ச்சி.
இரண்டு முதல் 250 கோடி ரூபாய் வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே 25% வரி எனும் கார்ப்பரேட் விகிதத்தின் உச்ச அளவு, 250 கோடி ரூபாயில் இருந்து 400 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இது 99.3% நிறுவனங்களை உள்ளடக்கும்.