20 ஓவர்கள் முடிவில் 105 - 0
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், விக்கெட்டுகள் இழப்பு ஏதுமின்றி 105 ரன்களை அடித்துள்ளது.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்திவருகிறது.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், விக்கெட்டுகள் இழப்பு ஏதுமின்றி 105 ரன்களை அடித்துள்ளது.
ரோகித் ஷர்மா - கே.எல் ராகுல் கூட்டணி 18 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.
போட்டியை நேரில் காணும் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன்
விக்கெட் இழப்பு ஏதுமின்றி 15 ஓவர்கள் முடிவில் இந்தியா 87 ரன்கள் எடுத்துள்ளது.
34 ரன்களில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சுகளுடன் அரை சதம் அடித்தார் ரோகித் ஷர்மா.
போட்டி நடைபெறும் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தின் வெளியே போட்டியை காணும் ரசிகர்கள்
நிதானமாக ஆடி வரும் ரோகித் – ராகுல் கூட்டணி பத்து ஓவர் முடிவில் 53 ரன்கள் எடுத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து ஆட்டத்தை தொடங்குவது இதுவே முதல்முறையாகும்.
கடந்த இரு உலகக்கோப்பை போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா மீது இம்முறையும் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் சதம் அடித்த ரோகித், ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் அரை சதம் அடித்திருந்தார்.
பாகிஸ்தானின் சிறப்பான பந்து வீச்சில் ரோகித் ஷர்மா மற்றும் கே.எல் ராகுல் கூட்டணி நிதானமாக ஆடி வருகிறது. ஐந்து ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகள் இழப்பு ஏதுமின்றி 20 ரன்களை எடுத்துள்ளனர்.
"இது ஒரு விளையாட்டுதான்; இதில் ஒருவர் வெல்ல வேண்டும், ஒருவர் தோற்க வேண்டும் என்பதுதான் நியதி; இது போர் போன்றது அல்ல; இரு நாடுகளையும் இணைக்கும் விளையாட்டு இது. அந்த மனநிலை உடன்தான் விளையாட வேண்டும்; நிச்சயமாக இரு நாட்டு வீரர்களுக்கும் இடையில் எந்த பகை உணர்வும் இல்லை; பார்வையாளர்களும் அதே மனைநிலையுடன் இந்தப் போட்டியை ரசிக்க வேண்டும்," என்றார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மாவுடன் கே.எல். ராகுல் களத்தில் உள்ளர். முதல் ஓவரில் பந்து வீசிய மொஹமத் அமீர் ரன் ஏதும் கொடுக்கவில்லை.
லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது.
முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.