பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் இலக்கு
50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்களை குவித்தது இந்திய அணி. பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் இலக்கு
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்திவருகிறது.
50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்களை குவித்தது இந்திய அணி. பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் இலக்கு
65 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 77 ரன்களை எடுத்த விராட் கோலி, மொஹமத் அமீரின் பந்து வீச்சில் அவுட்டானார்.
கோலி - விஜய்சங்கர் ஆகியோர் களத்தில் உள்ளனர். பாகிஸ்தானுக்கு கடினமான இலக்கு வைக்குமா இந்தியா?
மழை நின்றிருக்கும் நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி மீண்டும் சற்று நேரத்தில் தொடங்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போட்டி மழையால் பாதியில் நின்றதையடுத்து, அங்குள்ள ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஆனால், ஒரு பக்கம் சமூக ஊடகங்களில் இதனை கேலி செய்யும் வகையில், நெட்டிசன்கள் மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.
46.4 ஓவர்களில் அங்கு அதிக மழை பொழியத் தொடங்கியதால் போட்டி பாதியில் நின்றது.
4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ரன்களை இந்தியா எடுத்துள்ளது.
46 ஓவர்கள் முடிந்திருக்கும் நிலையில், அங்கு மழை பொழியத் தொடங்கியுள்ளது. இதனால் போட்டி பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்த தோனி, மொஹமத் அமீர் பந்துவீச்சில் அவுட்டானார்.
45 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 298 ரன்களை குவித்துள்ளது.
2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்த ஹார்திக் பாண்டியா மொஹமத் அமீரின் பந்து வீச்சில் அவுட்டானார்.
51 பந்துகளில் அரை சதம் அடித்தார் விராட் கோலி.
தற்போது 43.3 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ரன்களை எடுத்துள்ளது
40 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது.
ரோகித் ஷர்மா ஆட்டமிழந்ததை தொடர்ந்து ஹார்திக் பாண்டியா களமிறங்கியுள்ளார்.
113 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் எடுத்து அவுட்டானார் ரோகித் ஷர்மா
ஹசன் அலி பந்துவீச்சில் வஹாப் கேட்ச் பிடிக்க அவர் அவுட் ஆனார்.
ஒரு விக்கெட் இழப்பிற்கு 34.2 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. தற்போதுவரை ரோகித் ஷர்மா 100 பந்துகளில் 119 ரன்களும், கோலி 31 பந்துகளில் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆடி வருகின்றனர்.
ஒன்பது பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்களுடன் 85 பந்துகளில் சதம் அடித்தார் ரோகித் ஷர்மா
ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் சதம் அடித்த ரோகித், ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் அரை சதம் அடித்திருந்தார்.
25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்துள்ளது. கே.எல் ராகுல் அவுட் ஆகியுள்ளார்.
ராகுல் அவுட்டானதை தொடர்ந்து கோலி களமிறங்கியுள்ளார்.
வஹாப் பந்துவீச்சில் பாபர் கேட்ச் பிடிக்க கே.எல். ராகுல் அவுட் ஆனார். 3 பவுண்டரிகள், இரண்டு சிக்சுகளுடன் 57 ரன்கள் எடுத்தால் ராகுல்.
69 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சுடன் தனது அரை சதத்தை பதிவு செய்தார் கே.எல். ராகுல்.