டேபிள் டென்னிஸ்: காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு 5 ஆவது தங்கம்

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தங்கம் வென்றுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' - பினராயி விஜயன்

    பினராயி விஜயன்

    பட மூலாதாரம், ANI

    கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதாகவும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தின் தென் மாவட்டங்களில் அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதுவரை கனமழையில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 5 வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளதாகவும், 55 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில மீட்புப்படைகள் இணைந்து அவசர கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இடுக்கி, கோழிக்கோடு, திருச்சூர், வயநாடு பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு குறித்த விவரங்கள் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • சர்வதேச சதுரங்கப் போட்டியான 44ஆவது செஸ் ஒலிம்பியாடில் இந்திய அணி வீரர்கள் முன்னணி வகிக்கின்றனர்.
    • உலகின் முன்னோடி சுற்றுச்சூழல் விஞ்ஞானியான ஜேம்ஸ் லவ்லாக் தனது 103 வது பிறந்தநாளில் பிரிட்டனில் இறந்தார்.
    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பளுதூக்குதலில் மட்டும் 2 தங்கம் உட்பட இதுவரை ஐந்து பதக்கங்கள் பெற்றுள்ளது.
    • சிவ சேனை கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவர் தன் தாய்க்கு விடை கொடுக்கும் காணொளி வைரலாகி வருகிறது.
    • மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
    • இரானின் அணுசக்தி முகமை தலைவர் மொஹம்மத் எஸ்லாமி, தமது நாட்டுக்கு அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் திறன் இருப்பதாகவும், ஆனால் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
    • ஹைதராபாத்தில் முன்னாள் முதல்வர் என்.டி ராமா ராவ் மகள் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.