நேயர்களுக்கு நன்றி!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
- சர்வதேச சதுரங்கப் போட்டியான 44ஆவது செஸ் ஒலிம்பியாடில் இந்திய அணி வீரர்கள் முன்னணி வகிக்கின்றனர்.
- உலகின் முன்னோடி சுற்றுச்சூழல் விஞ்ஞானியான ஜேம்ஸ் லவ்லாக் தனது 103 வது பிறந்தநாளில் பிரிட்டனில் இறந்தார்.
- காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பளுதூக்குதலில் மட்டும் 2 தங்கம் உட்பட இதுவரை ஐந்து பதக்கங்கள் பெற்றுள்ளது.
- சிவ சேனை கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை நேற்று கைது செய்துள்ளது. அவர் தன் தாய்க்கு விடை கொடுக்கும் காணொளி வைரலாகி வருகிறது.
- மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
- இரானின் அணுசக்தி முகமை தலைவர் மொஹம்மத் எஸ்லாமி, தமது நாட்டுக்கு அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் திறன் இருப்பதாகவும், ஆனால் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
- ஹைதராபாத்தில் முன்னாள் முதல்வர் என்.டி ராமா ராவ் மகள் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.











