You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டேபிள் டென்னிஸ்: காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு 5 ஆவது தங்கம்
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தங்கம் வென்றுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நந்தினி வெள்ளைச்சாமி
எல்லார்க்கும் எல்லாம் என்ற இலக்கோடு தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது - மு.க.ஸ்டாலின்
எல்லார்க்கும் எல்லாம் என்ற இலக்கோடு தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: "எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய வகையில் உன்னத இலக்கோடு திராவிட மாடல் ஆட்சியானது தமிழ்நாட்டில் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
தொழில் புரிய எளிதான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 14வது இடத்தில் இருந்தது. அதில், தமிழ்நாடு தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. அதேபோல், அண்மையில் 'ஸ்டார்ட் அப் இந்தியா' வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் பல படிகள் முன்னேறி அரசின் சிறந்த புத்தொழில் செயல்பாடுகளுக்காக 'லீடர் ' அங்கீகாரத்தின் இப்போது தமிழ்நாடு பெற்றிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
"எஞ்சாய் எஞ்சாமி பாடல் தொடர்பான எவருடனும் விவாதிக்க நான் தயார்'' - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
ரயில்வே பயணிகள் தகவல் தொடர்பு மையத்திற்கு இந்தியில் பெயர் எதற்கு? - சு. வெங்கடேசன் எம்.பி
ரயில்வே பயணிகள் தகவல் தொடர்பு மையத்திற்கு இந்தியில் பெயர் எதற்கு என, சு. வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, இந்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்விற்கு சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில், நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள ரயில்வே பயணிகள் தகவல் தொடர்பு மையங்களுக்கும் இந்தியில் "சஹ்யோக்" என்று பெயரிட வேண்டும் என ரயில்வே வாரியம் அனைத்து மண்டல ரயில்வே பொதுமேலாளர்களுக்கும் அதிர்ச்சியளிக்கிற ஒரு ஆணையை அனுப்பி உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், " எதற்காக இந்த திடீர் 'பெயர் சூட்டல்' என்று புரியவில்லை. நாடு முழுவதும் அவரவர் தாய் மொழியில் இருந்தால்தானே பயணிகள் எளிதாக சேவைகளை பெற இயலும்.
இன்றும் இந்தியாவில் 22 சதவீதமான மக்கள் எழுத்தறிவு பெறாதவர்கள் என்ற நிலை இருக்கும் போது மக்கள் 'அந்நியமாக' உணரும் மொழியில் வார்த்தைகளை திணிப்பது அநியாயம் அல்லவா! இது அவர்களை இன்னல்களுக்கு ஆளாக்காதா! பல பயணிகள் கடைசி நிமிடம்தான் இது போன்ற சேவைகளை அணுக முற்படுவார்கள். அவர்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கலாமா?
ரயில்வே வாரியத்தின் இந்த ஆணையை திரும்பப்பெற வேண்டும். ரயில் நிலையங்களில் எல்லா தகவல் பலகைகளும் மாநில மொழிகளில் இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதனால் அம்மாநிலத்தில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 30 வயதான நபர், மலப்புரத்தில் உள்ள மஞ்சேரி மருத்துவக் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து அந்நபர் ஜூலை 27 அன்று கோழிக்கோடு விமான நிலையம் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் தொடர்பான எவருடனும் விவாதிக்க நான் தயார்'' - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
எஞ்சாய் எஞ்சாமி பாடலின் மொத்த வருமானத்தைம், உரிமைகளையும் நான், தீ, அறிவு என மூன்று பேரும் சமமாகப் பகிர்ந்து கொண்டோம். அறிவு அமெரிக்காவில் இருந்ததால் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ்
தன் பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 முதல் 2021வரையிலான ஆண்டுகளில் தஞ்சாவூர், கோவை, சிவகங்கை மாவட்டங்களில் நெடுஞ்சாலைப் பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் சுமார் 692 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது எனவும் கூறி அறப்போர் இயக்கத்தின் சார்பில் அந்த அமைப்பின் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டன.
இதையடுத்து, அறப்போர் இயக்கம் தனக்கு எதிராக ஆதாரமில்லாமல் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அதற்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் கோரி தனக்கு இழப்பீடாக ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அறப்போர் இயக்கத்திற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார். ஆனால், இதற்குப் பிறகு அவர்கள் ஏதாவது பதிவிட்டால் அதை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரலாம் என்று கூறிய நீதிபதி, அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை மேற்கொள்வதற்கு நேற்றைய தினம் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, நீதி அமைச்சர் சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை மேற்கொள்ளும் நோக்கில் தன்னால் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்திற்கு அமைச்சரவை நேற்றைய தினம் அனுமதி வழங்கியதாக அவர் கூறுகின்றார்.இதன்படி, அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அனுமதி, இன்றைய தினம் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.வர்த்தமானி வெளியிடப்பட்டு, 7 நாட்கள் முடிவடைந்ததை அடுத்து, சட்டமூலம் முதலாவது வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.22வது திருத்தம் என்பதில் காணப்படுகின்ற குழப்பகர நிலைமையை அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ இன்று தெளிவூட்டினார்.''இறுதியாக 20வது திருத்தமே நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்கட்சியினால் அரசியலமைப்பின் 21வது திருத்தம் என்ற பெயரில் மற்றுமொரு திருத்த பிரேரணை கொண்டு வரப்பட்டது. அது நாடாளுமன்ற உறுப்பினரின் தனிநபர் பிரேரணையாகவே சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நான் தனிநபர் பிரேரணையாக 22வது திருத்தத்தை முன்வைத்தேன். அதன்பின்னர், நான் நீதி அமைச்சர் பதவியை ஏற்றதன் பின்னர், நான் தனிநபர் பிரேரணையாக முன்வைத்த யோசனையை வாபஸ் பெற்றுக்கொண்டு, அரசாங்கம் சார்பில் 22வது திருத்தத்தை கொண்டு வந்தேன்.
இதன்படி, இது தற்போது 22 என குறிப்பிடப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்றதன் பின்னர், அது 21வது திருத்தம் என அழைக்கப்படும். அது நாடாளுமன்ற பொதுச் செயலாளரின் பொறுப்பாகும்" என, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.
வாட்ஸ் அப் மூலம் நிதி திரட்டி மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வளைகாப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் கிராமத்திலுள்ள பள்ளியில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு பொதுமக்கள் வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்தி வைத்தனர்.
புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி குமார் - தமிழ்ச்செல்வி. இருவரும் மாற்றுத்திறனாளிகள். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். குமார் புதுப்பாளையத்தில் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் குமாரின் மனைவி தமிழ்ச்செல்வி தற்பொழுது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இரு வீட்டாரின் ஆதரவும் இல்லாமல், இவர்களது வறுமையை பற்றி அறிந்த பொதுமக்கள் இவர்கள் குறித்து ஒரு வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டுள்ளனர்.
வாட்ஸ் அப் குழுவில் கண்ட அனைவரும் உதவி தர முன்வந்த பின்னர் நிதி திரட்டி ஆரணி அருகே சந்தவாசல் பகுதியில் உள்ள பள்ளியில் தமிழ்ச்செல்விக்கு பொதுமக்கள் முன்னிலையில் வளைகாப்பு நடைபெற்றது.
வளைகாப்பில் வாட்ஸ் அப் குழுவைச் சேர்ந்த அனைவரும் சீர்வரிசை வைத்தனர்.
இந்து ராஷ்டிரா: இந்தியா இந்து தேசமாக மாறுகிறதா? அதில் சிறுபான்மையினரின் நிலை என்ன?
ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே, இந்து தேசத்தை மீட்பதில் செயல்பட்டு வருகிறது. ஹிந்துத்துவத்தில் நிபுணரான புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் பேராசிரியர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் இதை ஒப்புக் கொள்கிறார்.
"சங்பரிவார் தரப்பில் எப்போதும் ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்க ஒரு திட்டவட்டமான முன்னுரிமை உள்ளது. அதாவது அவர்கள் சமூகத்தைக் கீழே இருந்து மாற்ற விரும்புகிறார்கள். அடிமட்டத்தில் உள்ள இந்துக்களின் இந்து ஆன்மாவை சீர்திருத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். 1925இல் தொடங்கி 100 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இந்தத் திசையில் நிறைய சாதித்துள்ளனர்," என்று அவர் கூறுகிறார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, சினிமா தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜாவுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை
தமிழ்நாட்டின் முக்கியமான சினிமா தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ். தாணு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக, மதுரையிலும் சென்னையிலும் சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியன் தொடர்புடைய சுமார் 40 இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று காலை முதல் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் பத்து இடங்களிலும் மதுரையில் 30 இடங்களிலும் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், சென்னை பிரகாசம் சாலையில் உள்ள சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் எஸ்.ஆர்.பிரபுவின் சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் எஸ்.ஆர்.பிரபு.
மேலும், 'ஸ்டுடியோ க்ரீன்' தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் ஞானவேல் ராஜா அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இயக்குநர் பார்த்திபனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு
"இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்" -நடிகர், இயக்குநர் பார்த்திபனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு
சென்னை திருவொற்றியூரில் ஒரு மாதமாக கசியும் ரசாயன வாயு - மூச்சுத் திணறும் மக்கள்
வந்துகொண்டிருக்கும் செய்தி, சினிமா தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ். தாணு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை
தமிழ்நாட்டின் முக்கியமான சினிமா தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ். தாணு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக, மதுரையிலும் சென்னையிலும் சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியன் தொடர்புடைய சுமார் 40 இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று காலை முதல் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் பத்து இடங்களிலும் மதுரையில் 30 இடங்களிலும் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், சென்னை பிரகாசம் சாலையில் உள்ள சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் அலுவலகத்திலும் வருமான வரி சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
பாம்பு கடித்து உயிரிழந்த பள்ளி மாணவர் - டோலி கட்டி உடலை தூக்கிச் சென்ற அவலம்
ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சிக்குட்பட்ட பொன்னம்பள்ளி இருளர் காலனி பகுதியில் பாம்பு கடித்து உயிரிழந்த ஏழாம் வகுப்பு மாணவர் அர்ஜூன் உடலை கொட்டும் மழையில் மூன்று கிலோமீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அபிகிரிப்பட்டை அருகே உள்ள கலைஞர் நகர் ஸ்கூல் தோப்பு இருளர் காலணி பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது மகன் அர்ஜூன் (12). இவர் தனது இல்லத்தின் அருகே உள்ள விவசாய நிலத்தில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாரா விதமாக பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அர்ஜூனை மீட்ட அவரது பெற்றோர் ஸ்கூல் தோப்பு பகுதியில் உள்ள ஒற்றை வழி மண் சாலையில் இருந்து டோலி கட்டி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுவன் அர்ஜூன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்கூல் தோப்பு பகுதி 10க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசித்து வருவதாகவும், முறையான சாலை வசதியில்லாததால் சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லமுடியவில்லை, இதனால் சிறுவன் உயிரிழந்ததாக சிறுவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலும் உடனடியாக அபிகிரிப்பட்டரை பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வசதி அமைத்துத்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13,734 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13,734 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை மருத்துவமனைகளிலும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,39,792.
அதேபோன்று, தமிழ்நாட்டில் நேற்று ஒருநாளில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை மருத்துவமனைகளிலும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12,228. நேற்று 1,802 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு இல்லை.
குமரியில் தொடர் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு
குமரியில் தொடர் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு, தரை பாலம் மூழ்கியது.
தச்சமலை, களப்பாறை மலை கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கோதையாற்றின் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மோதிர மலை-குற்றியாறு சாலையில் உள்ள தரை பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அக்கிராமமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
தொடர்ந்து மலையோர பகுதியில் மழை பெய்து வருவதால் மலை கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அய்மன் அல் ஜவாஹிரி: பின் லேடனின் 'வலது கை'யாக மாறிய கண் மருத்துவரின் கதை
வந்துகொண்டிருக்கும் செய்தி, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
தமிழ்நாட்டின் முக்கியமான சினிமா ஃபைனான்சியரான அன்புச்செழியன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் தொடர்புடைய சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனைகளை நடத்திவருகிறது.
மதுரையிலும் சென்னையிலும் அன்புச்செழியன் தொடர்புடைய சுமார் 40 இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று காலை முதல் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் பத்து இடங்களிலும் மதுரையில் 30 இடங்களிலும் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
அன்புச் செழியன் திரைப்படங்களுக்கு நிதியுதவி செய்வதோடு, தமிழ் சினிமாவின் முக்கியமான விநியோகிஸ்தராகவும் இருந்துவருகிறார். கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களைத் தயாரிப்பதோடு, மதுரையில் கோபுரம் திரையரங்கம் என்ற திரையரங்கத்தையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில்தான், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக அன்புச் செழியன் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை காமராஜர் சாலையில் உள்ள அன்புச்செழியன் இல்லம், மேலமாசி வீதியில் உள்ள அலுவலகம், கீரைத்துறை பகுதியில் உள்ள வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம், சென்னையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீடு உள்ளிட்ட 40 இடங்களில் இந்தச் சோதனைகள் நடந்து வருகின்றன.
இதற்கு முன்பாக கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் அன்புச் செழியன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் 77 கோடி ரூபாய் ரொக்கமும் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அன்புச் செழியனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பிகில் திரைப்படத்தில் பெருமளவு லாபம் கிடைத்ததாக வெளியான தகவலின் பின்னணியில் அந்தத் தருணத்தில் சோதனை நடத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்-காய்தா தலைவர் ஜவாஹிரி உயிரிழப்பு