நேஷனல் ஹெரால்டு வழக்கு: மீண்டும் நாளை ஆஜராக சோனியாவுக்கு உத்தரவு
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சௌக் பகுதி வரை பேரணியாக செல்லவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
பிரசாந்த் முத்துராமன்
சிங்கப்பூரில் கோட்டாபய ராஜபக்ஷ: மேலும் 14 நாட்களுக்கு விசா நீட்டிப்பு
வணக்கம் நேயர்களே!
ஜூலை 26ஆம் தேதி நேரலை பக்கம் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- திருச்சியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.
- எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்க மாட்டார் என்று இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் ராஜிவ் மேத்தா தெரிவித்துள்ளதாக
- கரூரில் 44 ஆவது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி தொடர்புடைய விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
- மக்களவையில் அவை அலுவலுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட நால்வர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு மறுதினமே மாநிலங்களவையில் இருந்து 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- நெல்லை அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். பெற்றோர் கைபேசி கொடுக்காத கவலையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை புதன்கிழமை மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.
பண்ணை விடுதியில் ஆணுறைகள், மதுபானங்கள் - பாலியல் தொழில் நடத்தியதாக மேகாலயா பாஜக தலைவர் கைது
சென்னையில் செஸ் வளர்ந்ததில் சோவியத் யூனியனின் பங்கு
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடக்கப்போவது எல்லோருக்கும் தெரியும். சென்னையில் செஸ் வளர்ந்ததில் சோவியத் ஒன்றியத்துக்கும் பங்கு இருக்கும் வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
YouTube பதிவை கடந்து செல்லGoogle YouTube பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
கோவையில் அதிர்ச்சி சம்பவம்: `மொட்டை அடித்து விடிய, விடிய சித்ரவதை`
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தி மீண்டும் நாளை ஆஜராக உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் இருந்து விசாரணைக்கு ஆஜராகி விட்டு வெளியே வரும் சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை புதன்கிழமை மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், இன்று 6 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தமது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பிறகு இரவு 7 மணியளவில் அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.
எம்பி ரவீந்திரநாத்திற்கு சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்

ரவீந்தரநாத்தை எம்பியாக ஜெயிக்க வைக்க கடுமையாகப் பாடுபட்டோம்.தற்போது அவருக்கு செல்வாக்கு இருந்தால் அவர் தனது நாடளுமன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்கட்டும். அவர் தேர்தலில் ஜெயித்து விட்டால் நான் அரசியலை விட்டு விலகிக் கொள்கிறேன்,” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஓபிஎஸ்-இன் சொந்த மாவட்டத்தில் சவால் விட்டுள்ளார்.
தமிழக அரசின் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டன உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட வரி உயர்வைக் கண்டித்து மாநிலம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஒ.பி.எஸ்-இன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் தங்களின் செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் அதிகளவு ஆட்களைத் திரட்ட முடிவு செய்து, சுமார் 5000த்திற்கும் மேற்பட்டவர்களைக் கூட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஒ.பி.எஸ்-இன் சொந்த மாவட்டத்தில் தங்களின் செல்வாக்கைக் காட்டினார்கள்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் திமுக அரசைக் கண்டித்து நடக்கும் போராட்டத்தை மறந்து முழுக்க முழுக்க ஒ.பி.எஸ்-ஐ குறி வைத்தே பேசினார்.
“ஒ.பி.எஸ் அன்று நடத்தியது தர்ம யுத்தம், இன்று அவர் நடத்துவது துரோக யுத்தம். தேனி மாவட்டம் விசுவாசமானவர்கள் மிகுந்த மாவட்டம். ஆனால் அந்த விசுவாசமுள்ளவர்கள் உள்ள மாவடட்த்தில் பிறந்த ஒ.பி.எஸ் ஒரு துரோகி. சொந்தக் கட்சிக்கே துரோகம் செய்துவிட்டார். அவர் சிரிக்கும் சிரிப்பு துரோக சிரிப்பு.
கடந்த நாடளுமன்ற தேர்தலில் ஒ.பி.எஸின் மகனான ரவீந்தரநாத்தை கடின உழைப்பு மூலமாக வெற்றி பெற வைத்தோம். அவருக்கு தற்போது தேனி மாவட்டத்தில் செல்வாக்கு இல்லை. அவருக்கு செல்வாக்கு இருந்தால் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டும். அவ்வாறு அவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் நான் அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டுப் போகத் தயார்,” என்றார்.
இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்
“கட்டாய இலவசக் கல்வி திட்டத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும்” – மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

கட்டாய இலவச கல்வி திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பள்ளியில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வசித்தாலும் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் வகுத்துள்ள இந்த விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பின் தங்கிய குழந்தைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கோபால் மற்றும் சரவணன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் தங்களது குழந்தைகளுக்கு மதுரை மகாத்மா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டத்தின் RTE அடிப்படையில் பள்ளியில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “மனுதாரர்கள் இருவரும் தங்களது குழந்தைகளுக்கு மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டத்தில் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். ஆனால் மனுதாரர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளே வசிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி பள்ளி நிர்வாகத்தால் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா மெட்ரிக் பள்ளி சிறுபான்மையினர் பள்ளியும் கிடையாது. எனவே இவர்கள் இந்த சட்டத்திலிருந்து தப்பிக்கவும் முடியாது.
மத்திய அரசின் கட்டாய கல்வி திட்டத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
ஒரு பள்ளியில் கட்டாயக் கல்வி திட்டத்தின் அடிப்படையில் பள்ளி ஒரு கிலோமீட்டருக்குள் போதிய விண்ணப்பம் வரவில்லை என்றால் மூன்று கிலோமீட்டர் தூரதில் வசிக்கக்கூடிய மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றும் மூன்று கிலோ மீட்டருக்குள்ளும் போதிய மாணவர்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது .
எனவே நீதிமன்றம் வகுத்துள்ள இந்த விதிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே பின்தங்கிய குழந்தைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
எனவே இதைக் கருத்தில் கொண்டு மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும்,” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
செஸ் ஒலிம்பியட் ஜோதி வரவேற்பு: குத்தாட்டத்தோடு வரவேற்ற வாணியம்பாடி வட்டாச்சியர்

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவதை ஒட்டி அதற்கான விழிப்புணர்வு ஜோதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தது.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய வட்டாச்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது..
பின்னர் அந்தந்த வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் வாணியம்பாடி வட்டாச்சியர் அலுவலகத்திற்கு ஒலிம்பியாட் ஜோதி வந்த போது வாணியம்பாடி வட்டாச்சியர் சம்பத் தனது சக அலுவலர்களுடன் குத்தாட்டம் போட்டு ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்றார்.
நெல்லை அருகே பள்ளி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
நெல்லை அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். பெற்றோர் கைபேசி கொடுக்காத கவலையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதநகரை சேர்ந்த, 17 வயதான மாணவர் சதீஷ்,பாளையங்கோட்டையில் உள்ள ஓர் அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். சதீஷின் தந்தை ஜெகதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இன்று காலை சதீஷ் வழக்கம்போல் பள்ளிக்குச் செல்வதாக தனது தாயிடம் தெரிவித்து விட்டு வெளியே சென்றுள்ளார்.
இதற்கிடையில் மருதநகர் ரயில்வே கேட் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஒரு சிறுவன் உடல் கை, கால்கள் தனியாகத் துண்டான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அது ஜெகதீஷின் மகன் சதீஷ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து சிறுவனின் சடலத்தை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் மாணவன் சதீஷ் செல்போனுக்கு அடிமையாகி இருந்த்தாகவும்,எனவே பெற்றோர் செல்போன் கொடுக்காததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் சதீஷக்குபள்ளியில் ஏதேனும் பிரச்னையா அல்லது வீட்டில் வேறு ஏதாவது பிரச்னை உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவையில் நேற்று நால்வர், இன்று மாநிலங்களவையில் 19 பேர் இடைநீக்கம்

பட மூலாதாரம், ㅤ
மக்களவையில் அவை அலுவலுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட நால்வர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு மறுதினமே மாநிலங்களவையில் இருந்து 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணவீக்கம் தொடர்பாக அரசுக்கு எதிராக எதிர்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி.க்கள் 19 பேர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள்:
சுஷ்மிதா தேவ், மௌசம் நூர், சாந்தா சேத்ரி, டோலா சென், சாந்தனு சென், அபி ரஞ்சன் பிஸ்வர், எம்.டி. நதிமுல் ஹக் (திரிணமூல் காங்கிரஸ், பி லிங்கய்யா யாதவ், ரவிஹந்திர வத்திராஜு, தாமோதர் ராவ் திவகொண்டா (தெலுங்கானா ராஷ்டிர சமிதி), ஏ.ஏ. ரஹீம், வி சிவதாசன், எம்.சண்முகம், (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), சந்தோஷ் குமார் பி (இந்திய கம்யூனிஸ்ட்), மொஹம்மத் எம் அப்துல்லா, எஸ் கல்யாணசுந்தரம், ஆர்.கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி, என்.வி.என்.சோமு (திமுக).
அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே நேரத்தில் மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை.
2019ஆம் ஆண்டு ஜனவரியில் அப்போதைய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் 45 பேரை இடைநீக்கம் செய்தார்.
விருத்தாசலத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை - முழு விவரம்
ஸ்மார்ட் மீட்டர்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது: கரூரில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

பட மூலாதாரம், ㅤ
கரூரில் 44 ஆவது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி தொடர்புடைய விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பிறகு தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அதன் விவரம்:
இரண்டு நாட்களாக பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில சிலர் கருத்துக்கள் பரிமாறி கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தினுடைய இந்த மின் கட்டண மாற்றத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மின் நுகர்வோரிடம் குறிப்பாக வீடு மற்றும் குடிசையில் பயன்படுத்தக்கூடிய மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் என்ற ஒரு தவறான கருத்து நிலவுகிறது.
அந்த அடிப்படையில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற அந்த மின்வாரியத்தினுடைய நிகழ்ச்சியிலே தெளிவுபட எடுத்துச் சொல்லி இருக்கிறேன். நிச்சயமாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய குறிப்பாக வீடுகளுக்கு மற்றும் குடிசைகளுக்கு மின் இணைப்பு பெற்ற அந்த மின் நுகர்வோர்களுக்கு எந்தவிதமான ஸ்மார்ட் மீட்டர் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்பதை மிக தெளிவாக எடுத்துச் சொல்கின்றேன்.
காரணம் 2 கோடியே 37 லட்சம் பேர் வீடுகள் மற்றும் குடிசைகளுக்கு மொத்த மின் நுகர்வோர்கள் அதில் அதில் ஒரு கோடி மின் நுகர்வோர்களுக்கு எந்த விதமான கட்டண உயர்வும் இல்லாமல் மாற்றம் இல்லாமல் அதே கட்டணம் செலுத்தக்கூடிய அளவுக்கு ஜீரோ என்ற நிலையில் இருக்கக்கூடிய ஒரு கோடியை மின் இணைப்பிற்கு எந்த ஒரு ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் உள்ளது 101 இருந்து 200 வரை மின் இணைப்பு பயன்படுத்துவர்கள்.
63 லட்சத்து 35 ஆயிரம் பேர இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 55 ரூபாய் குறிப்பாக ஒரு மாதத்திற்கு 27 ரூபாய் 50 பைசா ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் கூட கிடையாது. இந்த சிறிய அளவை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எனவே சமூக வலைதளங்களில் சில அரசியல் இயக்கங்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள் என்பது ஏற்புடையதாக இல்லை. மின்வாரியத்தை பொருத்தவரை பொதுமக்களுக்கு அடித்தட்டு மக்களுக்கும் எந்த வித பாதிப்பும் இல்லாத வகையில் கட்டண மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், ㅤ
குறிப்பாக, வீடுகளுக்கு பொருத்தக்கூடிய ஸ்மார்ட் மீட்டர்களுக்கு மாதாந்திர வாடகை என்பது வசூலிக்கப்பட மாட்டாது.
ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி எந்த அரசு ஆட்சியில் இருந்தபோது கடன் தொகை உயர்ந்தது. 16,000 கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு வட்டியாக மின் வாரியம் கட்டும் நிலைக்கு தள்ளப்பட எந்த அரசாங்கம் காரணம்?
ஒட்டுமொத்த மின் தேவையில் மூன்று பங்கு மட்டும் தான் மின்சாரம் மின்சார வாரியம் உற்பத்தி செய்கின்றோம் மீதி இரண்டு பங்கு வெளிச்சந்தையில் தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது நம்முடைய தேவை நாம் பூர்த்தி செய்ய முடியாமல் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரத்தை வாங்கிவிட்டு மின் மிகை மாநிலம் என்று ஒரு பொய்யான கருத்துக்களை மக்களிடத்திலே எடுத்துச் சென்றார்கள்.
நாலரை லட்சம் விவசாயிகள் இரண்டு வருடமாக மின் இணைப்புக்கு பதிவு செய்து காத்திருந்தார்கள் அதில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
இன்னும் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு இந்த வருடம் கொடுப்பதற்கான உத்தரவுகளை பிறப்பித்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொருத்தவரை கடந்த ஆட்சி காலத்தில் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக இழுத்து மூடக்கூடிய நிலையில் இருந்தன குறிப்பாக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய அரசு மானியங்கள் அதேபோல ஆர் .இ .சி. பி நிதி நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய கடன்கள் வங்கிகள் நமக்கு கொடுக்க வேண்டிய கடன்கள் மறுக்கப்பட்ட சூழ்நிலையில் தான் இந்த மின் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாதாந்திர ஸ்மார்ட் மீட்டர் வாடகைக்கு வீட்டு மின் உபயோகிப்பாளருக்கு மாதாந்திர வாடகை என்பது எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை பத்திரிக்கையில் மற்றும் சமூக வலைதளங்களில் வந்த செய்தி தவறான செய்தி என்று கூறினார்.
கடலூரில் கபடி வீரர் மரணம்: விளையாட்டின்போது நம் ஆரோக்கியத்தில் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?
கார்கில் வெற்றி தினம்
இந்தியா- பாகிஸ்தான் இடையில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் குறிக்கும் விதமான கார்கில் வெற்றி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்தப்போர் வெற்றிக்காக நிகழ்த்தப்பட்ட ஆபரேஷன் விஜய் நினைவாக விஜய் தினம் என்றும் இந்த நாள் அழைக்கப்படுகிறது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
திருவள்ளூர் மாணவி மரணம்: பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு
கல்வி நிறுவனம் 'தொழில் அல்ல தொண்டு'- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக தொடர்ந்து வரும் மாணவிகளின் தற்கொலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
''அண்மைக் காலமாக தமிழகத்தில் நடந்த சில நிகழ்வுகளை எண்ணிப்பார்க்கும்போது மன வேதனையாக உள்ளது. கல்வி நிறுவனங்களை நடத்துவோர் அதை தொழிலாக நினைக்காமல் தொண்டாக நினைக்க வேண்டும்.'' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.முதல்வர் பேசியது என்ன என்பதை கீழுள்ள இணைப்பில் தெரிந்து கொள்ளுங்கள்,
கள்ளக்குறிச்சி: டிஎஸ்பி பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கணியாமூர் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி மரணமடைந்தார். ஜூலை 13ஆம் அன்று மாணவியின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து காவல் துறை விசாரணையை தொடங்கியது.
அந்த வழக்கு முதன் முதலில் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

படக்குறிப்பு, பணியிட மாற்றம் செய்யப்பட்ட டி எஸ் பி ராஜலட்சுமி இந்த சம்பவத்தின் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக சர்வண்குமார் ஜடாவத், காவல் கண்காணிப்பாளராக பகலவன் புதிதாக பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில், மாணவி மரணம் தொடர்பான வழக்கை முதன் முதலில் விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் கள்ளக்குறிச்சி புதிய காவல் துணை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

படக்குறிப்பு, புகழேந்தி கணேசன்
