கள்ளக்குறிச்சி மாணவி உடலைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை நாளை காலையில் பெற்று, இறுதிச் சடங்குகளை முடித்துக்கொள்வதாக அந்த மாணவியின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. இலங்கை ராணுவம் நள்ளிரவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: பிபிசி தமிழ் செய்தியாளரும் தாக்கப்பட்டார்

  2. ஆயுதம் தாங்கிய படைகளை களமிறக்க ரணில் உத்தரவு

    இலங்கை ராணுவம்.

    இலங்கையில் ஆயுதம் தாங்கிய படைகளைக் களமிறக்க புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

    பொது அமைதியைப் பேணுவதற்கு, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆயுதந்தாங்கிய படைகளை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க பிறப்பித்துள்ளதாக, விசேட வர்த்தானி ஒன்றின் ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  3. இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்பு

    இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்பு

    பட மூலாதாரம், Getty Images

    இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்றார்.

    தினேஷ் குணவர்த்தன, 1949-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி பிறந்தார். இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மஹாஜன எக்சாத் பெரமுன கட்சியின் தலைவராக 1983-ஆம் ஆண்டிலிருந்து இருந்து வருகிறார். கொழும்பிலுள்ள ராயல் கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை முடித்தார்.

    ஒரேகன் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ படித்தார். அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தபோது அவர் வியட்நாம் போருக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார். குணவர்த்தன 1977 நாடாளுமன்றத் தேர்தலில் மஹாஜன எக்சாத் பெரமுன கட்சியின் வேட்பாளரானார்.

    ஆனால், தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து 1983-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். மேலும், 1989, 2000, 2004, 2010, 2015, 2020 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    2000-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு அவர் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் UPFA வின் கொழும்பு மாவட்டத்தில் ஒரு வேட்பாளராகப் போட்டியிட்டார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.

    தேர்தலுக்குப் பிறகு அவர் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நீர் வழங்கல் அமைச்சராகவும், கல்வி துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். ஜனவரி 2007 இல் அவரது அமைச்சரவை இலாகா நகர்ப்புற வளர்ச்சி மற்றும் புனிதப் பகுதி மேம்பாட்டு அமைச்சராக மாற்றப்பட்டது, ஆனால் அவர் தனது துணை அமைச்சர் பதவியை இழந்தார். ஜூன் 2008 இல் அவர் தலைமை அரசாங்கக் கொறடாவாக நியமிக்கப்பட்டார்.

  4. வணக்கம் நேயர்களே!

    நான், க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு குறித்த விவரங்கள் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் ட்விட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.