கள்ளக்குறிச்சி மாணவி உடலைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை நாளை காலையில் பெற்று, இறுதிச் சடங்குகளை முடித்துக்கொள்வதாக அந்த மாணவியின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. 44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி- திருச்சியில் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்

    44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி- திருச்சியில் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்

    44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

    இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின் முதல் நிலை கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் 188 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் இருந்து தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் பாஸ்கெட் அசோசியேஷனை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஓட்டத்தினை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி- திருச்சியில் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்
    44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி- திருச்சியில் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்
  2. "நாங்கள் சிறைகளுக்கு அஞ்சவில்லை," - அரவிந்த் கெஜ்ரிவால்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மதுபான கொள்கை குறித்து சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரைத்துள்ளது குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

    ஏ.என்.ஐ செய்தி முகமையின் கூற்றுப்படி, “நாங்கள் சிறைகளுக்கு அஞ்சவில்லை. கயிறுகளுக்கு அஞ்சவில்லை. எங்கள் மக்கள் மீது பல வழக்குகளைப் போட்டுள்ளனர். பஞ்சாபில் வெற்றி பெற்றதிலிருந்து ஆம் ஆத்மி வளர்ச்சியடைந்து வருகிறது. நாங்கள் தேசியளவில் உயர்வதை அவர்களால் பார்க்க முடியவில்லை. அதனால், அவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுக்கின்றனர். ஆனால், எதுவும் எங்களைத் தடுக்காது.

    அவர் (மணிஷ் சிசோடியா) விரைவில் கைது செய்யப்படுவார் என்று எனக்குத் தெரியும். இது சில மாதங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும். நாட்டி.ல் இப்போது ஒரு புதிய அமைப்பு உள்ளது. யாரை சிறைக்கு அனுப்புவது என்பதை அவர்கள் முடிவு செய்கிறார்கள். பிறகு, ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு முன்வைக்கப்படுகிறது,” என்று டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

  3. கள்ளக்குறிச்சி வன்முறையின்போது கண்டெடுத்த 14 கம்மல்கள் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

    கலவரத்தில் கண்டெடுத்த 14 கம்மல்கள் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

    கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே எலவடியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் நேற்று மாலை சின்னசேலம் காவல் நிலையத்தில் பள்ளி வன்முறையின்போது கண்டெடுத்ததாக கூறி 14 கம்மல்களை சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இவரைப் போல் சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த வன்முறையின்போது கண்டெடுத்த பொருட்களையும் பொதுமக்கள் ஒப்படைத்து வருகின்றனர்.

    கலவரத்தில் கண்டெடுத்த 14 கம்மல்கள் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு
  4. கோவை மாவட்டம் ஈஷா மையத்தில் ஆந்திர இளைஞர் தற்கொலை

    ஈஷா மையம்

    கோவை மாவட்டம் போலுவாம்பட்டியில் ஈஷா அமைப்புக்குச் சொந்தமான யோகா மையம் இயங்கி வருகிறது.

    ஈஷா யோகா மையத்திற்கு வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்து செல்வது வழக்கம். பல தன்னார்வலர்கள் ஈஷா யோகா மையத்தில் தங்கியும் உள்ளனர்.

    இந்நிலையில், இன்று 32 வயதான ஆந்திராவைச் சேர்ந்த கொள்ளு ரமணா என்ற இளைஞர் அங்கு தற்கொலை செய்துகொண்டதாக முதல் கட்ட தகவல் தெரிய வந்துள்ளது. 6 மாத யோகா பயிற்சிக்காக ஈஷா மையத்தில் ரமணா தங்கி வந்துள்ளார்.

    ரமணாவின் தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ள நிலையில், மன அழுத்தம் தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    ரமணாவின் உடலை ஆலாந்துரை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

    ஆலாந்துரை காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  5. இலங்கையில் பிபிசி தமிழ் செய்தியாளரைத் தாக்கிய ராணுவம்

  6. "சிம்புவின் திருமணத்தை இறைவன் தான் நிச்சயிக்க வேண்டும்" - டி.ராஜேந்தர்

    சிம்பு
  7. BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

  8. அரவிந்த் கெஜ்ரிவாலின் மதுபானக் கொள்கை பற்றி சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்த ஆளுநர்

    டெல்லி துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மதுபானக் கொள்கை குறித்து துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் பெயரை நேரடியாகவே குறிப்பிட்டு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    மேலும், இதுகுறித்துத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி தலைவர் சௌரவ் பரத்வாஜ், “சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் விசாரணைகள் எங்களைத் தடுப்பதற்காகப்பாயும், 2016-ஆம் ஆண்டின் நிலைமை மீண்டும் திரும்பும். எங்களுடைய பணிகளை முடக்க அனைத்து வழிகளிலும் முயல்கிறார்கள். துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவை அவர்கள் குறி வைத்துள்ளார்கள்.

    பஞ்சாயத்து தேர்தல்களில் கூட நாடு முழுவதும் முதலமைச்சர் கெஜ்ரிவாலின் புகழ் அதிகரித்து வருவது மத்திய அரசை அச்சுறுத்தியுள்ளது. குறிப்பாக, பஞ்சாப் வெற்றிக்குப் பிறகு, பாஜக மத்திய அரசு எங்களைக் கண்டு அஞ்சுகிறது. வரும் நாட்களில் பல விசாரணைகள் தொடங்கப்படும்,” என்று தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. "கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக 32 போலிச் செய்திகள் பரப்பப்பட்டன" - காவல்துறை

    32 போலியான வதந்தி செய்திகள் கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக பரப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த 32 வகையான போலிச் செய்திகள் பரப்பப்பட்ட ட்விட்டர், யூடியூப் பக்கங்களை எஸ்பி பகலவன் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.

    எத்தனை வலைதள பக்கங்கள் இந்த வதந்தி செய்திகளைப் பரப்பியுள்ளன என்பது குறித்து கணக்கெடுத்த பின், அந்தப் பக்கங்களை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்பி பகவன் தெரிவித்துள்ளார்.

  10. கள்ளக்குறிச்சி வன்முறையின்போது எடுத்த பொருட்களை வைத்துச் சென்ற பொதுமக்கள்

    கள்ளக்குறிச்சி சம்பவம்

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக ஏற்பட்ட வன்முறையின்போது பள்ளியில் இருந்த பொருட்களை பொது மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன் திரும்ப ஒப்படைக்க கோரி கனியாமூர் கிராமத்தில் தண்டோரா அறிவிப்பு வெளியான நிலையில் நேற்று இரவு பொது மக்கள் பள்ளி அருகில் பொருட்களை வைத்து சென்றுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி சம்பவம்

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக ஏற்பட்ட வன்முறையின்போது பள்ளியில் இருந்து கணினி, நாற்காலி, மாணவர் இருக்கை, மேஜைகள், பாத்திரங்கள் ஆகிய பொருட்களை பொது மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன் திரும்ப ஒப்படைக்கக் கோரி கனியாமூர் கிராமத்தில் தண்டோரா அறிவிப்பு வெளியான நிலையில் நேற்று இரவு பொது மக்கள் பள்ளி அருகில் பொருட்களை வைத்துச் சென்றுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி சம்பவம்
  11. "பிள்ளையைப் போல தென்னை மரங்களை வளர்த்தேன். விலையில்லாததால் வெட்டிவிட்டேன்"

  12. கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் 2ஆவது பிரேத பரிசோதனை – தடயவியல் நிபுணர் நீதிமன்றத்தில் விளக்கம்

    கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை இரண்டாவது முறை பிரேத பரிசோதனை செய்ததில் புதிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவிலை என்று தடயவியல் நிபுணர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். மாணவியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் மாணவியின் மரண வழக்கில் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

    உடற்கூராய்வு அறிக்கையோடு, உடற்கூராய்வு வீடியோ பதிவுகளையும் ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் ஜிப்மர் மருத்துவக் குழுவுக்கு உத்தவிட்டுள்ளது. மேலும், தகுதியான தடயவியல் நிபுணர்களைக் கொண்டு அறிக்கையை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  13. ஜனாதிபதி செயலகம் அருகே போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட படங்கள்

    இலங்கை ஜனாதிபதி செயலகம் அருகே இருந்த போராட்டக்காரர்கள் மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதல். அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.

    ஜனாதிபதி செயலகம் அருகே போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட படங்கள்

    பட மூலாதாரம், Getty Images

  14. காலிமுகத் திடல் வளாகத்திற்குள் செல்லத் தடை

  15. "போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது" - சஜித் பிரேமதாச

    இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கோழைத்தனமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்வீட்டில், “போராட்டக்காரர்கள் முகாம்களைக் காலி செய்வதாகக் கூறிய பிறகும் பயனற்ற அகங்காரத்தையும் தனது வலிமையையும் காட்டியது, அப்பாவி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயரைப் பாதிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. பிபிசி தமிழ் செய்தியாளர் மீதான தாக்குதலைக் கண்டித்த எம்.பி.ரவிக்குமார்

    பிபிசி தமிழ் வீடியோ செய்தியாளார் ஜெரின் சாமுவேல் தாக்கப்பட்டது குறித்து எம்.பி ரவிக்குமார் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “கொழும்பில் பிபிசி தமிழ் செய்தியாளர் மீதான இலங்கை ராணுவத்தின் மனிதாபிமானமற்ற தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இலங்கையின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியிடம் இந்தப் பிரச்னையை எழுப்ப வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்து கவலைகளை வெளிப்படுத்திய அமெரிக்க தூதர்

    நேற்று நள்ளிரவில் போராட்டக்காரர்களுக்கு எதிராக காலிமுகத் திடலில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தனது கவலைகளை இலங்கையிலுள்ள அமெரிக்க தூதர் ஜுலி சங் வெளிப்படுத்தினார். அதோடு, காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கவும் வழிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. "அமைதியான போராட்டத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தியுள்ளோம்" - பிரிட்டன் தூதர்

    இலங்கைக்கான பிரிட்டன் தூதர் சாரா ஹல்டன், “காலிமுகத் திடல் போராட்டக் களத்தில் இருந்து வரும் செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையின் முக்கியத்துவத்தை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்,” என்று காலிமுகத் திடலில் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் குறித்து பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. இலங்கையில் பிபிசி தமிழ் செய்தியாளர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்திய காட்சி

    இலங்கை பாதுகாப்பு படைகளால் போராட்டக்காரர்கள் அகற்றப்படும்போது பிபிசி தமிழ் செய்தியாளர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்திய காட்சி.

  20. "பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டது குறித்துத் தெரியவில்லை" - காவல்துறை செய்தித் தொடர்பாளர்

    இலங்கையில் பாதுகாப்புப் படையினர் தலைநகர் கொழும்புவில் உள்ள முக்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்ட முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி கூடாரங்களை அகற்றினர். இதில் போராட்டக்காரர்கள் பலர் படையினரால் தாக்கப்பட்டனர்.

    அப்போது, பிபிசி செய்தியாளர்கள் மணிகண்டன், அன்பரசன் எத்திராஜன், ஜெரின் சாமுவேல் ஆகியோர் பிபிசி நேரலையில் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, வீடியோ செய்தியாளர் ஜெரின் ராணுவத்தால் தாக்கப்பட்டார். அதோடு, ராணுவ வீரர் ஒருவர் அவருடைய கைபேசியைப் பறித்து, அதிலிருந்து வீடியோக்களை அழித்தார்.

    இதுகுறித்து விளக்கமளித்துள்ள காவல்துறை செய்தித்தொடர்பாளர் எஸ்.எஸ்.பி.நிஹல் தல்டுவா பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டது குறித்து தனக்குத் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரிப்பதாகவும் கூறியுள்ளார்.