இந்திய குடியரசு தலைவர் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு
இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
நாடு முழுக்க இருக்கும் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களின் வாக்குப்பதிவு நடைபெறும். இந்த வாக்குகள் எண்ணப்பட்டு 21ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு, ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியின் வேட்பாளராக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மூவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.
குடியரசு துணை தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


