You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

"மாணவர்கள் எனும் போர்வையில் சில விஷமிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்"- எ.வ. வேலு

கள்ளக்குறிச்சியில் கலவரம் தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஏ.வ.வேலு, மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலவரம் நடந்த தனியார் பள்ளியில் ஆய்வில் ஈடுபட்டனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

பிரசாந்த் முத்துராமன்

  1. இந்திய குடியரசு தலைவர் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு

    இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

    நாடு முழுக்க இருக்கும் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களின் வாக்குப்பதிவு நடைபெறும். இந்த வாக்குகள் எண்ணப்பட்டு 21ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

    குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு, ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியின் வேட்பாளராக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மூவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

    குடியரசு துணை தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

  2. இன்று கூடுகிறது மழைக்கால கூட்டத்தொடர்

    இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 18) தொடங்குகிறது. இன்று முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின்போது 24 மசோதாக்கள் விவாதிக்கப்பட உள்ளன.

    மேலும், அக்னிபத், ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதம் எழுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை எதிர்க்கட்சிகளில் பலவும் புறக்கணித்துள்ள நிலையில், இன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது.

  3. வணக்கம் நேயர்களே!

    நான் பிரசாந்த் முத்துராமன். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு குறித்த விவரங்கள் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் ட்விட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.