நன்றி நேயர்களே
இன்றைய நேரலை பக்கத்தை இத்துடன் நிறைவு செய்கிறோம். இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய செய்தித் துளிகள் இதோ...
- கேரளாவில் இரண்டாவதாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது
- மத்திய அரசு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறிவதற்கு 15 ஆய்வகங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்ம சாவு தொடர்பாக அவரது பெற்றோர் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை பகுதியில் ஆய்வு செய்த தமிழக அமைச்சர் எ.வ. வேலு, மாணவர்கள் எனும் போர்வையில் சில விஷமிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். புதிய கட்டண உயர்வு தொடர்பான தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
- கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் பிடிபட்ட 128 பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 108 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி உத்தரவிட்டுள்ளார்.
- கோட்டா வீட்டுக்கு போ' போராட்டத்தின் விளைவாக, இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ள நிலையில், 'ரணில் வீட்டுக்குப் போ' (Ranil Go Home) எனக் கூறி, போராட்டக்காரர்கள் தமது கோஷத்தை மாற்றியிருக்கின்றனர்..











