அதிமுக அலுவலக சீல் வழக்கு: ஜூலை 18க்கு உத்தரவு தள்ளிவைப்பு

கடந்த ஜூலை 11ஆம் தேதி அஇஅதிமுகவின் தலைமை அலுவலக வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து அந்த அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. அரசாங்கமும் காவல்துறையும் துரோகிகளுடன் துணைநின்று அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர் - இபிஎஸ்

    எடப்பாடி பழனிசாமி

    பட மூலாதாரம், FACEBOOK

    அரசாங்கமும் காவல்துறையும் துரோகிகளுடன் துணைநின்று அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளதாக, எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுகவினரிடையே இன்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

    அப்போது பேசுகையில், "அதிமுகவில் இருந்துகொண்டே நம்மை அழிக்க வேண்டும் என சில பேர் செய்த சதியினால்தான் நாம் ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அதிமுக ஆட்சி வருவதற்கு யாரெல்லாம் தடையாக இருந்தார்களோ, அந்த தடைக்கற்கள் அத்தனையும் இன்று உடைத்தெறியப்பட்டுள்ளன.

    அதிமுகவை இன்று முடக்கப் பார்க்கின்றார் மு.க.ஸ்டாலின். நம் துரோகிகளுடன் சேர்ந்துகொண்டு இந்த அரசாங்கம் எம்ஜிஆர் மாளிகைக்கு (அதிமுக அலுவலகம்) சீல் வைத்திருக்கின்றனர். அரசாங்கமும் காவல்துறையும் துரோகிகளுடன் துணைநின்று நாம் கோவிலாக வணங்கக்கூடிய எம்ஜிஆர் மாளிகைக்கு சீல் வைத்துள்ளனர்.

    அதிமுக தொண்டர்களுக்கு எம்ஜிஆர் விட்டுச் சென்ற சொத்து எம்ஜிஆர் மாளிகை. இதில் யாருக்கும் உரிமையில்லை, அது தொண்டர்களின் சொத்து" என பேசினார்.

  2. நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்தது ஏன்? 'வைரல் போட்டோ' போராட்டக்காரர் கூறுவது என்ன?

  3. நடிகர் விஜய் வழக்கில் உத்தரவு - "2019க்கு முன்பாக நுழைவு வரி செலுத்தியிருந்தால் அபராதம் தேவையில்லை"

    விஜய்

    நடிகர் விஜய் வெளிநாட்டுக் காரை இறக்குமதி செய்த வழக்கில், 2019க்கு முன்பாக அவர் நுழைவு வரியைச் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

    நடிகர் விஜய் 2005ஆம் ஆணடு அமெரிக்காவிலிருந்து 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இந்தக் காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழ்நாடு அரசின் வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் முறையிடப்பட்டது.

    நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளதாக நீதிபதி கூறியதையடுத்து, 7 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்தினார் விஜய். மேலும், வரி செலுத்தாத காலகட்டத்திற்கான அபராதமாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டுமென கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வணிக வரித்துறை உத்தரவிட்டது.

    இதனை எதிர்த்து விஜய் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்துவந்தார். அதில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, 2019ஆம் ஆண்டுக்கு முன்பாக விஜய் முழு நுழைவு வரியையும் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக்கூடாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    விஜய் தனது காரை 2005ஆம் ஆண்டே இறக்குமதி செய்திருந்தாலும், நுழைவு வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை உள்ளதா என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டுதான் மாநில அரசுக்கு உரிமை உள்ளது எனத் தீர்ப்பளித்தது. ஆகையால், 2019ஆம் ஆண்டு ஜனவரிக்கு முன்பாக விஜய் வரியைச் செலுத்தியிருந்தால், அவருக்கு அபராதம் விதிக்கக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    நடிகர் விஜய் மட்டுமல்லாமல், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ஆகியோரும் நுழைவு வரியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளும் விஜய் தொடர்ந்த வழக்கோடு சேர்த்து முடித்துவைக்கப்பட்டன.

  4. அதிமுகவின் திட்டங்களைத் தான் திமுக ஆட்சியில் தொடங்கிவைக்கின்றனர் - செல்லூர் ராஜூ

    செல்லூர் ராஜூ

    அதிமுகவின் திட்டங்களைத் தான் திமுக ஆட்சியில் தொடங்கிவைப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, "வாரிசு அரசியல், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் தொடங்கிய கட்சி அதிமுக. அதிமுக சிறப்பாக ஆட்சி நடத்தியிருக்கிறது.

    இன்றைக்கு ஒன்றரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இருக்கிறது. என்ன நடந்திருக்கிறது? எங்கள் திட்டங்களைத்தான் திமுக ஆட்சியில் தொடங்குகின்றனர். மதுரையில் ஒரு பைசா செலவழித்திருக்கிறார்களா? ஒரு புதிய திட்டத்தையாவது கொண்டு வந்திருக்கிறார்களா? டாக்டர் கலைஞர் நூலகத்தை மட்டும் தான் அனைத்து அமைச்சர்களும் சென்று பார்க்கின்றனர்.

    அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி ஒன்றரை கோடி தொண்டர்களால் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்" என தெரிவித்தார்.

  5. 'பாகுபலி' சவால் - 30 வகை உணவுகளை 30 நிமிடங்களில் சாப்பிட்டால் ஒரு லட்சம் பரிசு

    ஹைதராபாத்தில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு விரும்பிகளுக்கு ஒரு சவால் விடுக்கப்படுகிறது. 30 வகை உணவுகளை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ஒரு லட்சம் பரிசு வெல்லலாம் என்கிற 'பாகுபலி' சவால் தான் அது. சாப்பாடு ருசியாக இருந்தாலும் இந்த சவாலில் வெல்வது கடினம் என்கின்றனர், இச்சவாலில் கலந்துகொண்டவர்கள்.

    சுவாரஸ்யமான இந்த காணொளியை பாருங்கள்:

    காணொளிக் குறிப்பு, 'பாகுபலி' சவால் - 30 வகை உணவுகளை 30 நிமிடங்களில் சாப்பிட்டால் ஒரு லட்சம் பரிசு
  6. அறிவியல் அதிசயம்: வசியம் செய்யும் உயிரிகளின் பிரமிக்க வைக்கும் வரலாறு

    கூட்டுப்புழு

    பட மூலாதாரம், WESTEND61 / GETTY IMAGES

    மற்றவர்களின் மனதைக் கட்டுப்படுத்த ஒரு வெற்றிகரமான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க முடியுமா? அப்படி ஒரு தொழில்நுட்பம் உங்களிடமிருந்தால் இந்த உலகம் உங்கள் காலடியில் இருக்கும். உங்கள் கட்டளையை உலக மக்கள் அனைவரும் நிறைவேற்றுவார்கள்.

    பூமியில் வாழும் கோடான கோடி உயிரினங்களில் பல இந்த திறமையைக் கொண்டுள்ளன. இவை தங்கள் விருப்பத்திற்கேற்ப மற்ற உயிரினங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றன. இவற்றில் இரண்டு உயிரினங்கள் குறித்து விவரிக்கிறது இக்கட்டுரை.

  7. 'குடியரசு தலைவர் தேர்தலிலும் பணம் விளையாடுகிறது' - யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, திரைப்பட இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன் காலமானார்

    பிரதாப் போத்தன்

    பட மூலாதாரம், @therealprithvi / Instagram

    நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70.

    பிரதாப் போத்தன் கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்தார். இந்த நிலையில், இன்று காலையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை எட்டு மணியளவில் காலமானார்.

    1952ல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குலத்திங்கள் போத்தன் - பொன்னம்மா போத்தன் தம்பதிக்குப் பிறந்த பிரதாப் போத்தன், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

    அழியாத கோலங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமான பிரதாப் போத்தன், மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் இயக்குநராக உருவெடுத்தார்.திரைக் கலைஞர் ராதிகாவுடனான இவரது திருமணம் முறிந்த பிறகு, அமலா சத்யநாத் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

  9. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 20,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 20,038 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 16,994 பேர் குணமடைந்துள்ளனர். 47 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை கொரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளிலும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டும் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,39,073ஆக உள்ளது. தினசரி கொரோனா தொற்று விகிதம் 4.44 சதவீதமாக உள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இதனிடையே, தமிழ்நாட்டில் நேற்று ஒருநாளில் 2,283 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போதுவரை கொரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளிலும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டும் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 17,858 ஆக உள்ளது. 2,707 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு இல்லை.

  10. தமிழ்நாடு அமைச்சர் எஸ்.எம்.நாசருக்கு கொரோனா தொற்று உறுதி

    அமைச்சர் எஸ்.எம்.நாசர்

    பட மூலாதாரம், @Avadi_Nasar / Twitter

    தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, அமைச்சர் எஸ்.எம்.நாசர் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இரு தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  11. டொனால்டு டிரம்பின் முன்னாள் மனைவி இவானா டிரம்ப் காலமானார்

    இவானா டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னாள் மனைவி இவானா டிரம்ப் காலமானார். அவருக்கு வயது 73.

    “சிறந்த மற்றும் ஊக்கமளிக்கும் வாழ்க்கையை நடத்திய வியப்புக்குரிய, அழகான பெண்,” என தன் சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

    செக் குடியரசில் பிறந்த இவானா, 1977ஆம் ஆண்டு டொனால்டு டிரம்பை திருமணம் செய்தார். 15 ஆண்டுகள் கழித்து 1992 ஆம் ஆண்டில் இருவருக்கும் விவாகரத்து ஆனது.

    இருவருக்கும் ஜூனியர் டொனால்டு டிரம்ப், எரிக் டிரம்ப் என இரண்டும் மகன்களும் இவான்கா என்ற மகளும் உள்ளனர்.

    இவானா மரணம் தற்செயலானதாக இருக்கலாம் என, போலீசார் நம்புவதாக ஏபி செய்தி முகமை தெரிவித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள தன் வீட்டின் படிக்கட்டுக்கு அருகில் இவானா சுயநினைவின்றி இருந்ததாகவும் அவர் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும் வட்டாரங்கள் தெரிவிப்பதாக அச்செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    1980கள் மற்றும் 1990களில் குறிப்பிடத்தகுந்த பிரபலங்களாக டொனால்டு டிரம்ப் மற்றும் இவானா டிரம்ப் இருந்துள்ளனர். இருவருடைய பிரிவும் பொதுமக்களின் ஆர்வத்திற்குரிய ஒன்றாக இருந்தது.

    டொனால்டு டிரம்ப் உடனான பிரிவுக்குப் பின், இவானா அழகுசாதன பொருட்கள், ஆடைகள், நகைகள் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தி தொழிலில் ஈடுபட்டார்.

  12. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு குறித்த விவரங்கள் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான கடிதத்தை சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதர் வழியாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ என தெரிய வந்துள்ளது.
    • ஈரோடு சிறுமியின் கருமுட்டை எடுத்து விற்ற வழக்கில் தொடர்புடைய 4 மருத்துவமனைகளையும் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.
    • பிரிட்டனில் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகிய பிறகு கன்சர்வேட்டிவ் கட்சியில் அடுத்த தகுதிவாய்ந்த பிரதமர் பதவிக்கு போட்டியிடுவோரை தேர்வு செய்ய நடைபெறும் தேர்வில் ரிஷி சுனக் முன்னணியில் உள்ளார்.
    • "ஊழல்" மற்றும் "பொறுப்பற்ற" போன்ற சொற்களை நாடாளுமன்றத்துக்குள் எம்.பிக்கள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என மக்களவை செயலகம் புதுப்பித்துள்ள வார்த்தைகள் பட்டியலால் சர்ச்சை வெடித்த நிலையில், அந்த வார்த்தைகள் "தடை" செய்யப்படவில்லை என்றும் பழைய நடைமுறையில் உள்ளவையே அந்த வார்த்தைகள் என்றும் கூறியிருக்கிறார் மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா.
    • இலங்கையில் வெகு விரைவாக நிலையான அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் நாடு முடங்கும் அபாயம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
    • இந்த வாரம் தொடங்கி 75 நாட்களுக்கு அனைத்து பெரியவர்களுக்கும் பூஸ்டர் கோவிட் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.