நன்றி நேயர்களே...
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
- இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான கடிதத்தை சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதர் வழியாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ என தெரிய வந்துள்ளது.
- ஈரோடு சிறுமியின் கருமுட்டை எடுத்து விற்ற வழக்கில் தொடர்புடைய 4 மருத்துவமனைகளையும் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.
- பிரிட்டனில் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகிய பிறகு கன்சர்வேட்டிவ் கட்சியில் அடுத்த தகுதிவாய்ந்த பிரதமர் பதவிக்கு போட்டியிடுவோரை தேர்வு செய்ய நடைபெறும் தேர்வில் ரிஷி சுனக் முன்னணியில் உள்ளார்.
- "ஊழல்" மற்றும் "பொறுப்பற்ற" போன்ற சொற்களை நாடாளுமன்றத்துக்குள் எம்.பிக்கள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என மக்களவை செயலகம் புதுப்பித்துள்ள வார்த்தைகள் பட்டியலால் சர்ச்சை வெடித்த நிலையில், அந்த வார்த்தைகள் "தடை" செய்யப்படவில்லை என்றும் பழைய நடைமுறையில் உள்ளவையே அந்த வார்த்தைகள் என்றும் கூறியிருக்கிறார் மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா.
- இலங்கையில் வெகு விரைவாக நிலையான அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் நாடு முடங்கும் அபாயம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
- இந்த வாரம் தொடங்கி 75 நாட்களுக்கு அனைத்து பெரியவர்களுக்கும் பூஸ்டர் கோவிட் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.