சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட பாதுகாப்புப் படைகளுக்கு ரணில் விக்ரமசிங்க உத்தரவு

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவர் தனது உரையில், "சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்தையும் செய்வதற்கு" ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. "கோட்டாபய வெளியேறினாரா? எங்களுக்கு மொத்த ராஜபக்ஷ குடும்பமும் சிறையில் இருக்க வேண்டும்' - மக்கள் கோபம், டெஸ்ஸா வோங், கொழும்பு

    இலங்கை
    படக்குறிப்பு, இலங்கை நெருக்கடிக்கு ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி அரசு எதிர்ப்பாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஜி.பி. நிமல் தொடர்ந்து 43 நாட்களாக பங்கெடுத்து வருகிறார்.

    இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவில் தரையிறங்கிய தகவலை அந்நாட்டு விமானப்படையும் பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளன.

    கொழும்பு நகரில் அரசு எதிர்ப்பாளர்களின் முக்கிய போராட்ட களமான காலி முகத்திடலில் -இன்று காலையில் திரண்ட பொதுமக்களில் சிலர், கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியிருப்பது தொடர்பாக கோபத்துடன் கருத்துக்களை பகிர்ந்தனர்.

    “எங்களுக்கு இது பிடிக்கவில்லை. நாங்கள் அவரை நாட்டுக்குள்ளேயே வைத்திருக்க விரும்பினோம். எங்களின் பணம் திரும்ப வேண்டும். அனைத்து ராஜபக்ஷ குடும்பத்தினறையும் திறந்தவெளிச் சிறையில் அடைக்கவே விரும்புகிறோம் ”என்று கடந்த 43 நாட்களாக காலி முகத்திடல் மைதானத்தில் தங்கியிருந்த எதிர்ப்பாளர் ஜி.பி.நிமல் கூறினார்.

    "இது நியாயம் இல்லை," என்றும் அவர் என்னிடம் கூறினார்.

    நாங்கள் மற்ற போராட்டகாரர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, மாலத்தீவில் இருந்து சமீபத்தில் இலங்கைக்கு வந்ததாகக் கூறி ஒரு இளைஞனும் எங்களுடன் சேர்ந்தார்.

    ராஜபக்சே தனது நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று கூறப்பட்டபோது, அவர் லேசாக முணுமுணுத்து சிரித்தார். "இது மிகவும் சங்கடமானது. இது நல்லதல்ல. மாலத்தீவிலும் ஊழல் நிறைந்துள்ளது. அங்கும் இதே திசை நோக்கியே நிகழ்வுகள் செல்கின்றன," என்றார்.

  2. சிங்கள ரியாலிட்டி நிகழ்ச்சியில் தமிழ் சிறுமி முதலிடம்

    இலங்கை வரலாற்றில முதல் முறையாக சிங்கள ரியாலிட்டி இசை நிகழ்ச்சி போட்டியில், தமிழ் சிறுமி ஒருவர் முதலிடத்தை பெற்று, வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  3. ட்விட்டர் பேர வழக்கு: ஈலோன் மஸ்க்குக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் ட்விட்டர் நிர்வாகம்

    ஈலோன் மஸ்க்

    பட மூலாதாரம், get

    சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை $44 பில்லியனுக்கு வாங்க செய்து கொண்ட ஒப்பந்தத்தை பிரபல பெரும் கோடீஸ்வரர் ஈலோன் மஸ்க் மீறியுள்ளதாக அவருக்கு எதிராக ட்விட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

    இந்த ஒப்பந்தத்தை ஈலோன் மஸ்க் கடந்த வாரம் நிறுத்துவதாகக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், டெலவேரின் சான்சரி நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கில், ட்விட்டருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதில் மஸ்க் பாசாங்குத்தனத்துடனும் நம்பிக்கை மோசடி செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  4. கோட்டாபயவுடன் மாலத்தீவுக்கு சென்றது யார்? இலங்கை விமானப்படை விளக்கம்

    இலங்கை விமானப்படை

    பட மூலாதாரம்,

  5. இலங்கை ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற இந்தியா உதவி செய்யவில்லை - இந்திய தூதர்

    இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் இந்தியா பின்னணியில் உதவி செய்ததாக சில ஊடகங்களில் வெளியான தகவலை இலங்கைக்கான இந்திய தூதர் மறுத்துள்ளார்.

    கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரை இலங்கைக்கு வெளியே அனுப்புவதற்கு இந்தியா உதவியதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் வெளியாயின.

    இந்த நிலையில், இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனநாயக வழிமுறைகள் மற்றும் திப்புகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கையர்கள் தங்களின் வளம் மற்றும் முன்னேற்றத்திற்கான விருப்பங்களை உணரக் கோரும் வேளையில், இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதை இந்தியா தொடரும் என்று வலியுறுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  6. கோட்டாபய இலங்கையில் இருந்து வெளியேறியதை உறுதிப்படுத்தியது பிரதமர் அலுவலகம்

    இலங்கை ஜனாதிபதி கோட்டாபய அந்நாட்டில் இருந்து வெளியேறிய தகவலை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

    முன்னதாக, அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜனாதிபதி, அவரது மனைவி, இரண்டு பாதுகாவலர்கள் நாட்டை விட்டு வெளியேற ஒரு சிறப்பு ஜெட் விமானத்தை வழங்கியதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விமானப்படை தலைமையகம் ஒரு செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது.

    கோட்டாபய இலங்கையில் வெளியேறியது தொடர்பான விரிவான செய்தி

    இலங்கை

    பட மூலாதாரம், SL Airforce Hqrs

    படக்குறிப்பு, இலங்கை விமானப்படை தலைமையகத்தின் செய்திக்குறிப்பு
  7. ஸ்ரீநகரில் போலீஸார் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - ஒரு அதிகாரி பலி, இரு காவலர்கள் காயம்

    ஜம்மு காஷ்மீர் தாக்குதல்

    பட மூலாதாரம், ANI

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் லால் பஜார் பகுதியில் போலீஸார் மீது தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார், இரண்டு போலீசார் காயம் அடைந்தனர்.

    காஷ்மீர் மண்டல காவல்துறையினர் இது தொடர்பாக கூறுகையில், ஆயுததாரிகளின் தாக்குதலில் உதவி துணை ஆய்வாளர் முஷ்டாக் அகமது இறந்து விட்டதார தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. வணக்கம் நேயர்களே!

    நான் ஆ. லட்சுமி காந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு குறித்த விவரங்கள் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.