You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இலங்கைக்கு ரஷ்ய பிரதிநிதிகள் வருகை - எரிபொருள் விநியோகம் தொடர்பாக பேச்சுவார்த்தை

இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்கின்றமை குறித்து, ரஷ்ய பிரதிநிதிகள், இலங்கை உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு சேவைக் கட்டணம் கேட்டால் என்ன செய்வது?

    ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், உணவு பில்லில் சேவைக் கட்டணம் வசூலிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு (சிசிபிஏ) திங்களன்று தடை விதித்தது.

    இந்த அறிவிப்பை மீறி நீங்கள் சாப்பிடும் ஹோட்டலில் சேவைக் கட்டணம் கேட்டால் என்ன செய்வது என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது: இந்திய உணவகங்கள்: ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு சேவைக் கட்டணம் கேட்டால் என்ன செய்வது?

  2. சர்ச்சைக்குள்ளான ட்விட்டர் பின்னூட்டத்தை நீக்கிய சென்னை காவல்துறை

  3. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு இன்று திருமணம்

    பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு சண்டீகரில் இன்று (ஜூலை 7) திருமணம் நடைபெறவுள்ளது. இது அவரது இரண்டாவது திருமணமாகும். டாக்டர் குர்பிரீத் கவுர் என்பவரை அவர் கரம் பிடிக்கப் போகிறார்.

    டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் கட்சியின் சில முக்கிய தலைவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் பகவந்த் மானின் திருமண விழாவில் கலந்து கொள்கின்றனர்.

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான மல்விந்தர் சிங் காங் இந்த தகவலை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

  4. பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

    பிகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், புதன்கிழமை இரவு சிகிச்சைக்காக பாட்னாவிலிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் லாலு பிரசாத் யாதவ் தவறி விழுந்துள்ளார். இதில், அவருடைய வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை நேற்று பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தித்தார்.

    இந்நிலையில், அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 வயதான லாலு பிரசாத் யாதவுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் உள்ளன.

  5. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி.

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள். உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • இசைத்துறையில் இளையராஜா, விளையாட்டுத்துறையில் பி.டி. உஷா, திரைத்துறையில் இயக்குநர் விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோர் நியமன உறுப்பினர்களாக தேர்வாகவுள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் இன்று அலுவலக நேர ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
    • இலங்கை ஜனாதிபதி மாளிகை எதிரில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.பி ஹிருனிகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டு, நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டது.
    • வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு தடையில்லை. தேவையெனில் உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    • எல்பிஜி சிலிண்டரின் விலை நேற்று முதல் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது
    • இந்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் நிலத்தடி நீர் எடுப்பது குறித்த அறிவிப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது. நடைமுறையில் உள்ள விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு நீர் வளத்துறை தெரிவித்துள்ளது.
    • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்.