காளி போஸ்டர் சர்ச்சை: கருத்து வைரலானதால் மஹுவா மொய்த்ரா விளக்கம்

வணங்கும் தெய்வத்தை 'இறைச்சி உண்ணும் தெய்வம் என்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம்' என்று ஒவ்வொருவரும் கருதுவர். ஒரு ஊரில் காளிக்கு சாராயத்தை படைப்பார்கள். வேறு ஊரில் சிகரெட் படைப்பார்கள். அது அவரவர் வழிபடும் விதம். அது அவர்களுடைய சுதந்திரம் என்று பேசினார். அவரது கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இந்தியாவில் கடந்த 21 மணிநேரத்தில் 13,086 பேருக்கு கொரோனா தொற்று

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவில் கடந்த 21 மணிநேரத்தில் 13,086 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 19 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

    இந்தியாவில் தற்போது வரை 1,14,475 பேர் மருத்துவமனைகளிலும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். தினசரி தொற்று விகிதம் 2.90 சதவீதமாக உள்ளது.

    அதேபோன்று, தமிழ்நாட்டில் ஒரு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,654 என பதிவாகியுள்ளதாக ஜுலை 4 அன்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

    அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மொத்தம் 30 ஆயிரத்து 31 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 2, 654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மொத்தம் 2, 672 பேருக்கு தொற்று பதிவானது.

    நேற்று அதிகபட்சமாக சென்னையில் 1,066 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து 4வது நாளாக சென்னையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    செங்கல்பட்டில் நேற்று 375 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் 1, 542 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுக்க தற்போது 15, 616 சிகிச்சையில் உள்ளனர் என்று மருத்துவத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2. சிகாகோவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு

    துப்பாக்கிச்சூடு

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஹைலாண்ட் பார்க் எனும் இடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் குறைந்தது 24 பேர் காயமடைந்துள்ளனர்.

    இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை அமெரிக்க காவல்துறை கைது செய்தது. 22 வயதான ராபர்ட் ஈ கிரைமோ III என்பவரை துரத்திப் பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடமிருந்து துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இச்சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இத்தாக்குதலால் தான் "அதிர்ச்சிக்கு" உள்ளாகியுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிரான போராட்டத்தைத் தான் தொடர்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    உயரமான கட்டிடத்தின் மேற்கூரையிலிருந்து அணிவகுப்பை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அணிவகுப்பு தொடங்கிய 10 நிமிடங்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    கடந்த மே மாத இறுதியில் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 குழந்தைகள், ஒரு ஆசிரியர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் மே மாதத்தில் மட்டும் 5 துப்பாக்கிச்சூடுகள் நடந்துள்ளன.

    இதையடுத்து, துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஒன்று கடந்த வாரம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.

    இளம் வயதினர் துப்பாக்கி வைத்திருப்பதை இம்மசோதா கட்டுப்படுத்துகிறது. அச்சுறுத்தும் நபர்கள் என கருதப்படுபவர்கள் துப்பாக்கிகள் வைத்திருப்பதை தடுக்க மாகாணங்களை ஊக்கப்படுத்துகிறது.

  3. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
    • தமிழ்நாட்டில் கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண் செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • காரைக்காலில் இருந்து சென்ற இந்திய மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. உடனே விடுவிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள்ளார்.
    • இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிசோடி காணப்படுகின்றன.
    • 71-வது உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கெடுக்க கர்நாடகாவின் சினி ஷெட்டி தேர்வாகி உள்ளார்.
    • இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனையொன்றை படைத்துள்ளார்.
    • மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசாங்கம் வெற்றி பெற்றது.