மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார். சட்டப் பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. ஆஸ்கர் அகாடமியில் சேர நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு

    அகாடமி ஆஃப் மோஷன் பிக்ச்சர்ஸ்-இல் சேர சூர்யா, கஜோல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் -இல் 2022ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்களாக சேர இந்திய நடிகர்கள் சூர்யா, கஜோல் ஆகியோற் உட்பட 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்கர் அகாடமியில் சேர நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு
    படக்குறிப்பு, ஆஸ்கர் அகாடமியில் சேர நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு
  2. முதல்வர் வருகையால் அவசர வேலை - கூலித் தொழிலாளி படுகாயம்

    முதல்வர் வருகையால் அவசர வேலை - கூலித் தொழிலாளி படுகாயம்

    ஆம்பூர் அருகே பாலாற்றில் கொட்டப்பட்ட தோல் கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபடும் பொழுது ஜேசிபி இயந்திரத்தில் சிக்கி கூலி தொழிலாளி படுகாயம் அடைந்துள்ளார்.

    திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகை தந்துள்ளதால் அவருடன் வந்துள்ள அதிகாரிகள் ஆம்பூர் மோட்டு கொள்ளை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை விடுதியில் தங்கியுள்ளனர்.

    இதனால் அவசர அவசரமாக பாலாற்று பகுதியில் கொட்டப்பட்டுள்ள தோல் கழிவுகளை இரவோடு இரவாக அகற்றும் பணியில் ஆம்பூர் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது ஜேசிபி ஓட்டுநர் சுரேஷ் என்பவர் அங்கு படுத்து உறங்கி கொண்டிருந்த கூலி தொழிலாளி இஸ்மாயில் என்பவர் இருப்பதை தெரியாமல் ஜேசிபி இயந்திரத்தை இயக்கியதால் அதில் சிக்கி தலை மற்றும் முகம் முழுவதும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

    அவரை மீட்டு அப்பகுதி மக்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மருத்துவர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தை சிறைப்பிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சரவணன், வட்டாட்சியர் மகாலட்சுமி, ஆம்பூர் நகர ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் ஆகியோர் அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  3. ஜூலை 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் உற்பத்திக்கு இந்தியா முழுவதும் தடை - முக்கிய தகவல்கள்

  4. மகாராஷ்டிரா - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு

    உத்தவ் தாக்கரே

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, உத்தவ் தாக்கரே

    மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், முதல்வர் உத்தவ் தாக்கரே தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார்.

    பின்னணி:

    மகாராஷ்டிர சட்டசபையில் 288 இடங்கள் உள்ளன. இதில் சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே உயிரிழந்துவிட்டார். எனவே தற்போது சட்டசபையில் 287 எம் எல் ஏக்கள் உள்ளனர்.

    ஒரு தனிப்பட்ட கட்சியோ அல்லது கூட்டணி கட்சியோ ஆட்சி அமைக்க 144 எம் எல் ஏக்கள் தேவை. தற்போது மகராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.

    சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின் 2019ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இந்த கூட்டணி ஆட்சி அமைந்தது.

    இந்த கூட்டணிக்கு ஆதரவாக 169 எம்எல்ஏக்கள் இருந்தனர்.

    தற்போது சிவ சேனாவில் 55 எம் எல் ஏக்களும், தேசியவாத காங்கிரசில் 53 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸில் 44 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

    2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் பந்தர்பூர் சட்டசபை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் என்சிபியிடம் இருந்த தொகுதி பாஜகவிடம் சென்றது.

    தற்போது 13 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 3 பேர் சிவசேனா கூட்டணியில் அமைச்சர்களாக உள்ளனர்.

    6 பேர் பாஜக ஆதரவாளர்களாகவும், ஐந்து பேர் சிவசேனா ஆதரவோடும், ஒருவர் காங்கிரஸ் ஆதரவோடும் ஒருவர் என்சிபி ஆதரவு நிலைப்பாட்டிலும் உள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. வணக்கம் நேயர்களே!

    வணக்கம் நேயர்களே!

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, வணக்கம்

    நேயர்/வாசக நண்பர்களுக்கு வணக்கம்!

    நான் பிரசாந்த் முத்துராமன். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் பிற உலக நாடுகளில் நிகழும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்திகள் குறித்த உங்கள் கருத்துகளை எங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் நீங்கள் தெரிவிக்கலாம். நேற்றைய நேரலைப் பக்கத்தை இந்த இணைப்பில் காணலாம்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.