ரிலையன்ஸ் ஜியோ குழுவில் இருந்து முகேஷ் அம்பானி விலகல்

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிர்வாக இயக்குநர்கள் குழுவில் இருந்து விலகியுள்ளார். அவருடைய மகன் ஆகாஷ் அம்பானி தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. ஓபிஎஸ் – இபிஎஸ்: அதிமுகவில் இதுவரை ஏற்பட்ட பிளவுகள் என்னென்ன?

  2. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம்.

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.

    • அ.தி.மு.கவின் சட்டவிதிகளுக்குப் புறம்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறி தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
    • முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிர்வாக இயக்குநர்கள் குழுவில் இருந்து விலகியுள்ளார். அவருடைய மகன் ஆகாஷ் அம்பானி தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார்.
    • மகராஷ்ட்ரா சிவசேனாவின் 15 எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் ஆதித்யா தாக்ரே தெரிவித்துள்ளார்.
    • டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா, டெல்லியின் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா முன்னிலையில் பதவியேற்றார்.
    • இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கிப் பயணிக்க முயன்ற மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள குர்லாவில் நேற்று (ஜூன் 27) நள்ளிரவு 3 அடுக்கு பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில், 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  3. மும்பை கட்டிட விபத்து: புறாக்களையும் மீட்ட மனிதநேயம்

    மும்பை குர்லா கட்டிட விபத்து

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, மீட்கப்பட்ட புறாக்களுடன் மீட்பு படையினர்

    மகாராஷ்ட்ரா மாநிலம் மத்திய மும்பையில் உள்ள குர்லாவில் நேற்று (ஜூன் 27) நள்ளிரவு 3 அடுக்கு பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில், 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

    மும்பை நாயக் நகர் சொசைட்டியின் டி பிரிவு நேற்று இரவு இடிந்து விழுந்தது. தீயணைப்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்ட தகவலின் படி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    மும்பை குர்லா கட்டிட விபத்து

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, மீட்கப்பட்ட புறாவிற்கு தண்ணீர் கொடுக்கும் மீட்பு படையினர்

    அமைச்சர் ஆதித்யா தாக்கரே நேற்று இரவு மற்றும் இன்று மதியம் கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்டார். மும்பையில் பாழடைந்த கட்டிடங்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ்களை மாநகராட்சி மறுபரிசீலனை செய்யும். அத்தகைய கட்டமைப்புகளை அகற்றுவது மற்றும் இடிப்பது குறித்து பரிசீலினை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையில், தற்போது குவாஹாத்தியில் சிவசேனா கட்சியின் அதிருபதி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இருக்கும் உள்ளூர் எம்எல்ஏ மங்கேஷ் குட்ல்கர், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    மீட்புப் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், 10க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இடிபாடுகளில் சிக்கித் தவித்த இரண்டு புறாக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு, முதலுதவி அளித்து காப்பாற்றினர்.

    மும்பை குர்லா விபத்து

    பட மூலாதாரம், ANI

  4. வேலூரில் இருசக்கர வாகனத்தோடு போடப்பட்ட சிமெண்ட் சாலை - மாநகராட்சி ஆணையர் விளக்கம்

    வேலூர் மாநகராட்சி சாலை
    படக்குறிப்பு, வேலூர் மாநகராட்சியில் அமைக்கப்பட்ட சாலை

    வேலூர் மெயின் பஜார், காளிகாம்பாள் கோவில் தெருவில் இரு சக்கர வாகனத்துடன் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    வேலூர் மாநகராட்சி சீர்மிகு நகராக (ஸ்மார்ட் சிட்டி) தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேலூர் காளிகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா. இவரது இருசக்கர வாகனத்தை வழக்கம் போல் தங்களது கடைமுன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது.

    அத்தோடு சேர்ந்து தெருவோரம் நிறுத்தி, வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து, வாகனத்தை எடுக்க முயற்ச்சித்துள்ளார். ஆனால் சிமெண்ட் கலவை இருகிவிட்டதால் எடுக்கமுடியவில்லை. பின்னர் போராடி, உடைத்து வண்டியை மீட்டுள்ளனர்.

    வேலூர் மாநகராட்சி சாலை
    படக்குறிப்பு, வேலூர் மாநகராட்சி சாலை

    இது குறித்து யுவராஜ் என்பவர் கூறுகையில், 'இது என்னோட தம்பி வண்டி தான். சாலை போடவுள்ளதாக எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இரவோடு இரவாக சாலை போட்டுள்ளனர். அப்போது எங்களது வண்டிக்கும் சேர்த்தே சாலை போட்டுள்ளனர். இது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் அலட்சியமாக பதில் சொல்கின்றனர். இப்போது எங்கள் வண்டி நாசம் ஆகிவிட்டது.' என்றார்.

    இதுகுறித்து வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, 'இந்த சாலை குறித்து தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம். இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமல் சாலை போடப்பட்டது, தொடர்பாக சம்பந்தப்பட்ட பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

    அவர்கள் கொடுக்கும் விளக்கத்தை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றார்.

  5. இலங்கை நெருக்கடி: வீட்டு பணிப்பெண்களுக்கு குடும்ப பின்னணி அறிக்கை அவசியமற்றது - அமைச்சரவை

    இலங்கையிலிருந்து வீட்டுப் பணிப் பெண்களாக செல்வோரின் குடும்பப் பின்னணி அறிக்கையை அவசியமற்றதென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

    இலங்கையில் குடும்பப் பின்னணி அறிக்கை மூலம், 05 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட தாய் எவரும் வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாடு செல்ல முடியாதவாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஏற்கனவே, வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் பெண்களின் வயது 21ஆக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குழந்தைகளை கைவிட்டு, வீட்டுப் பணிப்பெண்களாக தாய்மார் செல்லும் போது, அது மோசமான சமூகச் சீரழிவை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

    இலங்கை பொருளாதார நெருக்கடி
  6. மும்பை அருகே ஹெலிகாப்டர் விபத்து

    மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை அருகே ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

    மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை அருகே சாகர் கிரண் பகுதியில் இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் (ஓ.என்.ஜி.சி) பணிக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஓஎன்.ஜி.சி ஊழியர்கள் 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

    ஹெலிகாப்டரை தரையிறக்கும் போது, விபத்து ஏற்பட்டதாக முதல் கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. ஜெயலலிதாவின் 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்?

  8. காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு - விருதுநகரில் விவசாயிகள் போராட்டம்

    விருதுநகர் விவசாயிகள் போராட்டம்
    படக்குறிப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

    விருதுநகரில் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூளிப்பட்டி, புதுக்கோட்டை, நாட்டார்மங்கலம், தாயில்பட்டி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களில், சுமார் இரண்டாயிரம் விவசாயிகள், 10 ஆயிரம் ஏக்கரில் கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் மக்காச் சோளம் பயிரிட்டனர்.

    அப்போது கன மழை காரணமாக பல்லாயிரம் ஏக்கர் மக்காச் சோளப் பயிர்கள் நீரில் மூழ்கி, முற்றிலும் சேதமடைந்தன. பயிர் காப்பீடு செய்த, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் என 2, 000 விவசாயிகளுக்கு வர வேண்டிய பயிர் காப்பீடு தொகை சுமார் 15 கோடியை வேளாண்மை துறை மூலம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

    விருதுநகர் விவசாயிகள் போராட்டம்
    படக்குறிப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

    ஆனால், வேளாண்மை துறை அதிகாரிகள் மழையின் காரணமாக விவசாயிகள் அதிகமான மகசூல் செய்து நல்ல லாபம் ஈட்டினர் என்று பொய்யான தகவலை அரசுக்கு அனுப்பி, நிவாரணத் தொகையை கிடைக்காமல் தடுத்து விட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தமிழ் விவசாய சங்கத்தினர் விருதுநகர் - சிவகாசி சாலையில் இன்று திரண்டு, பேரணியாக சென்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு செய்த நிவாரணத் தொகையை வழங்க தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முழக்கமிட்டனர். தொடர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

  9. கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை: ஊடுருவ முயன்ற 18 பேர் கண்டுபிடிப்பு

    கடலோர பாதுகாப்பு ஒத்திகை
    படக்குறிப்பு, பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார்

    கடலோர மாவட்டங்களில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் இன்று கடல் வழியாக ஊடுருவ முயன்ற 18 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

    தமிழ்நாடு முழுவதும் 13 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நாளை மாலை 6மணி வரை நடைபெருகிறது.

    ஒத்திகையின் போது வேடமிட்டு தீவிரவாதிகள் போல் படகுகள் உள்ளிட்டவற்றில் ஊடுருவும் கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்தவர்களை மரைன் போலீசார் கண்டுபிடிக்கின்றனர்.

    இதன்படி, தூத்துக்குடியில் நடைபெற்று வரும் சாகர் கவாஜ் ஒத்திகையில் தூத்துக்குடி நடுக்கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படை, இந்திய கடற்படை, உள்ளூர் காவல்துறை ஆகியோர் மேற்கொண்ட சோதனையில், கடல் வழியாக ஊடுருவ முயன்ற 10 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இதேபோல் ராமேஸ்வரம் பகுதியில் 8 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

    கடலூர், கன்னியாகுமரி, நாகை உள்ளிட்ட பல்வேறு கடலோர மாவட்ட மாவட்டங்களில் ஒத்திகைப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

    கடந்த 2008 மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர மாநிலங்களில் ஆண்டு தோறும் சாகர் கவாச், ஆபரேஷன் ஆம்லா உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன

  10. ரிலையன்ஸ் ஜியோ: முகேஷ் அம்பானி விலகல்

    உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிர்வாக இயக்குநர்கள் குழுவில் இருந்து விலகியுள்ளார். அவருடைய மகன் ஆகாஷ் அம்பானி தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. 'அரசுக்கு எதிராக பேசினால் சம்மன், நாட்டிற்கு நல்லதல்ல' - சுப்ரியா சுலே

    அரசுக்கு எதிராக பேசினால் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பும் போக்கு நாட்டிற்கும் அரசியலமைப்பிற்கும் நல்லதல்ல என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆளும் கட்சியான சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். இது சிவசேனா-காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சிக்கலைப் போக்க முதலமைச்சர் உத்தவ் தாக்ரே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சிவ சேனா கட்சியின் எம்.பியும் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மகளும் எம்.பியுமான சுப்ரியா சுலே, ''அரசுக்கு எதிராக பேசினால் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பும் போக்கு நாட்டிற்கும் அரசியலமைப்பிற்கும் நல்லதல்ல.

    ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மைக்கு தேவையான 144 எம்.எல்.ஏக்கள் ஆதரவை பெற்றிருக்கவில்லை. அதை பெறவும் முடியாது. எனக்கு தெரிந்த வரை 50 பேரின் ஆதரவைப் பெற்றுள்ளார்.'' என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட ஓ.பி.எஸ்; சின்னம் முடங்குமா? - முன்னாள் தேர்தல் ஆணையர் விளக்கம்

  13. விருதுநகரில் மகாவீரர் சிலை கண்டறியப்பட்டு, அருங்காட்சியகத்தில் சேர்ப்பு

    மகாவீரர் சிலை

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் பட்டப்படிப்பு மாணவர்களின் ஆய்வில் மகாவீரர் சிலை கண்டறியப்பட்டு, விருதுநகர் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அடுத்த புதுப்பட்டி காட்டுப் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் ராகவன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் பட்டப்படிப்பு மாணவர்களான சரத்ராம், ராஜபாண்டி ஆகியோர் நேற்று மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, 3 அடி உயரம் 2 கால் அடி அகலம் கொண்ட சிலை கண்டறியப்பட்டது. இது குறித்து ஓய்வு பெற்ற தொல்லியல் துறை துணை இயக்குனரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளருமான சாந்தலிங்கத்திடம் கலந்து ஆலோசித்தனர்.

    இந்த சிற்பம் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சிற்பம் என உறுதி செய்யப்பட்டது. மேலும் தொல்லியல் ஆய்வாளர் ராகவன் கூறுகையில், ''இந்த சிலை வர்த்தமானர் எனும் சமணர் சமயத்தின் 24 ஆவது தீர்த்தங்கரான மகாவீரர் சிலையாகும்.

    தியான நிலையில் அமர்ந்தவாறும், அர்த்த பரியங்க ஆசனத்தில் யோக முத்திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையின் பின்புறம் முக்காலத்தையும் உணர்த்தும் ஒளிவீசும் பிரபாவளையம், பின்புலத்தில் குங்கிலிய மரம், பக்கவாட்டில் சித்தாகிய இயக்கி இயக்கனான மாதங்கன் சாமரம் வீசுவது போல் உள்ளது.

    இச்சமண சிலையை அங்குள்ள மக்கள் சமணர் சாமி என்று அழைத்தும் தங்களின் குலதெய்வமாக எண்ணியும் குறிப்பிட்ட நாளில் பொங்கல் வைத்து, முடி காணிக்கை செலுத்தியும் வணங்கி வந்துள்ளனர்.'' என்றார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நடவடிக்கையின் பேரில் இந்த சிலை விருதுநகர் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  14. ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களின் போஸ்டர் போட்டி

    அதிமுகவின் ஒற்றைத் தலைமையைக் கைப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முனைப்பு காட்டி வருகிறது. இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு காட்டி வருகிறது.

    இந்நிலையில், சேலத்தில் கையில் வேலோடு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இதில், எடப்பாடி பழனிச்சாமி தலையில் கிரீடம், கையில் வேல் என சித்தரித்து "சூரசம்ஹாரம் ஸ்டார்ட்" என்ற வாசகங்களோடு பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

    அதிமுக நெருக்கடி
    படக்குறிப்பு, இ.பி.எஸ் ஆதரவாளர்களின் சுவரொட்டி

    ஏற்கனவே ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சேலத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில், இந்த புதுவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    இதே போல், எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், ''பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவமானப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும்.'' என வாசகங்களை அச்சிட்டுள்ளனர்.

    அதிமுக நெருக்கடி
    படக்குறிப்பு, ஓ.பி.எஸ் ஆதரவாளரின் போஸ்டர்
  15. இந்தியாவில் நக்சல் புரட்சியின் ஆரம்பம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

    India
  16. அதிமுக அழிவுப் பாதையை நோக்கி செல்கிறது - டிடிவி தினகரன் பேட்டி

    டிடிவி தினகரன்

    பட மூலாதாரம், TTV Dhinakaran

    படக்குறிப்பு, டிடிவி தினகரன்

    அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அதிமுக அயோக்கியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. பணத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து இயங்குகிறார்கள். ஐ.பி.எல்-இல் ஏலம் எடுப்பதுபோல கட்சியினரை 25 லட்சத்தில் இருந்து 5 கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்கியுள்ளனர். ஆனாலும், அவர்களின் தவறான் எண்ணம் நடைபெறவில்லை.

    பணம் பத்தும் செய்யும். பணம் பாதாளம் வரை பாயும் என்பது போல் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது'' என்றார்.

    அதிமுகவின் இந்த நிலை பாஜகவிற்கு லாபமா ? என்பதை விட திமுகவிற்குதான் லாபம். அதிமுக பொதுக்குழு என்கிற பெயரில் நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளி. அந்த கூட்டத்தில், அயோக்கியர்கள் மத்தியில், ஓபிஎஸ், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் தைரியமாக செயல்பட்டுள்ளனர்.

    அமமுகவின் மூலம் ஜெயலலிதாவின் லட்சியத்தை செயல்படுத்தி, அதிமுகவை மீட்டெடுப்போம். அமமுக வருங்காலத்தில் திமுகவிற்கு நிச்சயம் பாடம் கொடுக்கும்.'' என்றார்.

  17. மகாராஷ்ட்ரா சிவசேனாவின் 15 எம்.எல்.ஏக்கள் கடத்தல் - ஆதித்யா தாக்ரே

    மகாராஷ்ட்ரா சிவசேனாவின் 15 எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் ஆதித்யா தாக்ரே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்ட்ரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 40 பேர் அசாம் மாநிலத்தில் தங்கியுள்ளனர். 'இவர்களில் 15க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.

    அவர்களை கடத்தி வைத்துள்ளனர். அவர்கள் திரும்ப வர வேண்டும். மற்றொடு பிரிவினர் அறத்திற்கு மாறாக உள்ளனர்' என்று முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவின் மகனும் அமைச்சருமான ஆதித்யா தாக்ரே தெரிவித்துள்ளார்.

    அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே காணோளியில் பங்கேற்கிறார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன்.

    இதுவரை க.சுபகுணம் வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

  19. LGBTQ+: சுயமரியாதை பேரணியின் நோக்கம் என்ன? எதற்காக நடத்தப்படுகிறது?

    காணொளிக் குறிப்பு, LGBTQ+: "எங்களுக்கும் திருமணம் செய்ய சட்டப்பூர்வ உரிமை வேண்டும்"
  20. செங்கல்பட்டு அருகே காரில் கடத்தி வந்து இளைஞர் வெட்டி படுகொலை

    செங்கல்பட்டு அருகே  காரில் கடத்தி வந்து இளைஞர் வெட்டி படுகொலை

    பட மூலாதாரம், Chengalpattu Police

    செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வல்லம் பகுதியில் செங்கல்பட்டு-திருக்கழுக்குன்றம் பிரதான சாலையில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணிக்கு XYLO காரில் 4 பேர் கொண்ட கும்பல் காரில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரைக் கடத்தி வந்து நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியுள்ளது.

    தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இதில் இறந்தவர் சென்னை மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம் அரசங்கழனி பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்பதும் இவர் பரங்கிமலை பாமக முன்னாள் ஒன்றிய இளைஞரணி செயலாளர் என்பதும் பகுதி நேரமாக சைலோ கார் வாடகைக்கு ஓட்டி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

    நேற்று இரவு வழக்கம் போல் சைலோ காரை எடுத்துக்கொண்டு வேலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

    காவல்துறை சார்பில் காரை கடத்துவதற்காக கொலை நடைபெற்றதா அல்லது முன்விரோதம் காரணமா என விசாரணை மேற்கொண்டு மூன்று தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த பிரசாத், முத்து, திருமூர்த்தி ஆகிய 3 பேரைக் கைது செய்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை புறநகர் பகுதியில் மிக முக்கியமான பகுதியாக உள்ள மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆட்களைக் கடத்தி வந்து கொலை செய்வது, எரிப்பது, தடயங்களை மறைப்பது போன்ற நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகிறது. காவல்துறை ரோந்துப் பணியில் தொடர்ந்து ஈடுபடவேண்டும். இரவு நேரங்களில் செங்கல்பட்டு நகரப் பகுதிகளில் வரும் கார்களை சோதனை செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.