ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகத்தில் சூறையாடல்

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் குண்டர்கள் புகுந்து சூறையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நெட்ஃப்ளிக்ஸ்- அதிகரிக்கும் போட்டிகள் காரணமா?

    ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நெட்ஃப்ளிக்ஸ்

    பட மூலாதாரம், Getty Images

    நெட்ஃப்ளிக்ஸ், அதன் வளர்ச்சி வேகம் குறைந்தது மற்றும் அதிகரித்துள்ள போட்டியை ஈடுகட்டப் போராடுவதால், மீண்டுமொரு சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது.

    ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் மே மாதத்தில், 150 பேரை நீக்கியது. தற்போது மீண்டும், 300 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலான ஆட்குறைப்பு அமெரிக்காவில் நடக்கிறது. இந்த அளவு, அதன் மொத்த பணியாளர்களில் 4%.

    கடந்த பத்து ஆண்டுகளில் முதன்முறையாக இந்த நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை இழந்து வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    நெட்ஃப்ளிக்ஸ், விளம்பரங்களின் ஆதரவுடனான சேவையை மேற்கொள்வது குறித்து ஆராய்ந்து வருகிறது.

    ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நெட்ஃப்ளிக்ஸ்

    பட மூலாதாரம், NETFLIX

    “நாங்கள் இதில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்கிறோம். சில மாற்றங்களைச் செய்துள்ளோம். இதனால் எங்கள் வருவாய் வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதற்கு ஏற்ப எங்கள் செலவுகள் வளரும்,” என்று நெட்ஃப்ளிக்ஸ் வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேவேளையில், மற்ற பகுதிகளில் வேலைக்கு ஆட்களை எடுப்பதைத் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

    நெட்ஃப்ளிக்ஸ், உலகளவில் 220 மில்லியன் சந்தாதாரர்களோடு ஸ்ட்ரீமிங் சந்தையில் முன்னணியில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் டிஸ்னி ப்ளஸ், அமேசான் ப்ரைம் வீடியோ போன்ற போட்டித் தளங்கள் அறிமுகமானதைத் தொடர்ந்து கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளது.

    சமீபத்தில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற இடங்களில் தொடர்ச்சியான விலை உயர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது, அதன் சந்தாதாரர்களை இழக்கக் காரணமானது.

  2. வணக்கம் நேயர்களே!

    நான் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கிறோம்.

    • ஆப்கானிஸ்தானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 1000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளிடம் தாலிபன் உதவி கோரியுள்ளது.
    • அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
    • பெரும் பரபரப்புக்கு மத்தியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • ஜி7 மாநாட்டில் பங்கேற்க வரும் 26-27 ஆகிய தேதிகளில் ஜெர்மனி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோதி.
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், தங்களது கட்சி இன்றும் வலுவான நிலையில் உள்ளது என்று சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டது.
    • தமது மகன் ரவீந்திரநாத், அதிமுகவில் உள்ள தமது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் டெல்லி செல்ல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • பிரதமர் நரேந்திர மோதியை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மூ சந்தித்துப் பேசினார்.
    • எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் மிக மோசமான நிலைமையை தற்போது தாம் எதிர்நோக்கி வருவதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.