அமெரிக்காவில் தீவிரமாகும் துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க பைடன் அரசு நடவடிக்கை

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க செனட் சபை, தனி நபர்கள் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதாவை நிறைவேற்றியுள்ளது - இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இயற்றப்பட்ட மிக முக்கியமான துப்பாக்கி சட்டமாகும்.
துப்பாக்கி வாங்கும் இளம் பிரிவினர் மீது கடுமையான சோதனைகளை நடத்தவும் அச்சுறுத்தலாகக் கருதப்படும் மக்களிடமிருந்து துப்பாக்கிகளை அகற்றவும் மாநிலங்களை இந்த சட்டம் ஊக்குவிக்கிறது.
துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில், 15 குடியரசு கட்சியினர் செனட்டில் ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து மசோதாவை அங்கீகரித்தனர். அதிபர் ஜோ பைடனால் சட்டத்தில் கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், கீழவையின் ஒப்புதல் இன்னும் தேவைப்படுகிறது.
இதையொட்டி, ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள (மக்கள்) பிரதிநிதிகள் சபையில் விரைவில் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.











