ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகத்தில் சூறையாடல்

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் குண்டர்கள் புகுந்து சூறையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. கருக்கலைப்பு: அமெரிக்காவை அதிர வைத்த தீர்ப்பு - கொந்தளிப்பும் மகிழ்ச்சியும் ஏன்?

  2. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம்.

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.

    • டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மூ சந்தித்து ஆதரவு கோரினார்.
    • அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
    • அதிமுக பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறப்படாததால், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
    • 2002ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்குகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதியை சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றமற்றவர் என்று கூறியதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏசான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.
    • ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ், 300 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்த அளவு, அதன் மொத்த பணியாளர்களில் 4%.
    • வி.கே.சசிகலா வரும் 26-ஆம் தேதி, மதியம் 12:30 மணிக்கு தி.நகர் இல்லத்திலிருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி சென்று, புரட்சிப் பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
    • கடலூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து. பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு. படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகப் பயணிக்க முயன்ற 35 பேரை இலங்கை கடற்படை பாணந்துறை அருகே கைது செய்துள்ளது.
    • அக்னிபத் திட்டத்தில் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் இன்று தொடங்கியுள்ளது.
    • கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் சிலர் புகுந்து சூறையாடியுள்ளனர். முதலமைச்சர், பிரதமர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருந்திருங்கள். நன்றி

  3. "நான் இருக்கலாம், இல்லாமல் போகலாம்" - படுகொலைக்கு முதல் நாள் கூறிய இந்திரா காந்தி

  4. மகாராஷ்டிர அரசியல் குழப்பங்களுக்குக் காரணம் ஆபரேஷன் லோட்டஸா?

  5. ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் சூறையாடல் - நடந்தது என்ன?

  6. இந்திரா காந்தி அவசர நிலை அறிவித்த நாளில் நடந்தது என்ன?

  7. அமெரிக்க கருக்கலைப்பு வழக்கு - எளிதில் புரிந்து கொள்ள உதவும் பின் குறிப்புகள்

    கருக்கலைப்பு

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

    இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது.

    இன்று வெளியாகியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள் மாற்றப்படும். கருக்கலைப்பு நடைமுறைக்கு தடை விதிக்க இனி மாகாணங்கள் ஒவ்வொன்றாக நடவடிக்கை மேற்கொள்ளும்.

    அநேகமாக அமெரிக்கா மாகாணங்களில் பாதியாவது கருக்கலைப்புக்கு தடை விதிக்க ஏதுவாக புதிய சட்டம் அல்லது கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரே Vs வேட் வழக்கை எளிதாக புரிந்து கொள்ள உதவும் பின் குறிப்புகள்

    • 1971இல் கருக்கலைப்பு செய்யத் தவறிய பெண் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது ரோ வெர்சஸ் வேட் வழக்கு என்று அழைக்கப்படுகிறது.

    • கருக்கலைப்பு வசதிகளை எளிதாக அணுக வேண்டும் என்றும் கர்ப்பம் மற்றும் கருக்கலைப்பு தொடர்பான முடிவு பெண்ணின் கையில் இருக்க வேண்டும் என்றும் அது அரசு அல்ல என்றும் மனுதாரர் கூறினார்.

    • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1973இல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. அதில் கருக்கலைப்பு சட்டபூர்வமானது மற்றும் கருக்கலைப்பு தொடர்பான முடிவுகளை எடுக்க கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசியலமைப்பு உரிமை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

    • இதன் பிறகு, மருத்துவமனைகளில் பெண்களுக்கு கருக்கலைப்பு வசதிகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.

    • ஆனால் அதன் பிறகு விஷயம் தீவிரம் அடைந்தது. மதக் குழுக்களுக்கு இது மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது, ஏனென்றால் கருவுக்கு வாழ உரிமை உண்டு என்று அவர்கள் நம்பினர்.

    • இந்த விவகாரத்தில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இடையே கருத்துகள் வேறுபட்டன. 1980வாக்கில், இந்த பிரச்னை மத ரீதியிலானதாக மாறியது.

  8. ராகுல் காந்தி அலுவலகம் சூறையாடல் : காங்கிரஸ் போராட்டம்

    காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடப்பட்டதைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள், எஸ்.எஃப்.ஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், "நாங்கள் வன்முறையில் ஈடுபட மாட்டோம். ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    பின்னணி

    கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் சிலர் புகுந்து சூறையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    SFI கொடியுடன் சிலர் சுவர் ஏறிகுதித்து இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாக இளைஞர் காங்கிரஸின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொடியுடன் சிலர் சுவர்களில் ஏறி நுழையும் காட்சிகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் இளைஞர் காங்கிரஸ் வெளியிட்டது.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  9. செங்குத்தாக பாய்ந்து இலக்கை அழிக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி

    குறைந்த தூரத்தில் உள்ள இலக்குகளை செங்குத்தாகப் பாய்ந்து துல்லியமாகத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய ரக ஏவுகணையை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஒடிஷா மாநில கடல் பரப்பில் நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக, "வான் பரப்பில் இருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் திறனை இது மேலும் வலுப்படுத்தும்" என்றும் அவர் தன் ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. மகாராஷ்டிரா: ஆபரேஷன் லோட்டஸ் - 5 காரணங்கள்

    மகாராஷ்டிர அரசியலில் தொடர்ந்து நிலவி வரும் பரபரப்பின் பின்னணியில், ஆபரேஷன் லோட்டஸ் இயங்கி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

    இந்த நிலையில், பின்னணிக் காரணமாக ஆபரேஷன் லோட்டஸ் சொல்லப்படுவதற்கான 5 காரணங்களை வரிசைப்படுத்தி விளக்குகிறது இந்தக் காணொளி.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  11. தமிழ்நாட்டில் 1,359 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கொரோனா- விளக்கப்படம்

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,359 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    ஏற்கனவே தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 5,174 பேரில், 621 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

    இதையடுத்து, இன்றைய (ஜூன் 24ஆம் தேதி) நிலவரப்படி, தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,912ஆக உயர்ந்துள்ளது.

  12. ராகுல் அலுவலகத்தில் தாக்குதல் - கேரள முதலமைச்சர் கண்டனம்

    கேரளாவில் ராகுல் காந்தி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் சிலர் புகுந்து சூறையாடிய சம்பவம் நடந்தது. இந்த விவகாரத்தில் மாநில முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கடிதம் எழுதியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மேலும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'ஜனநாயக ரீதியில் போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், இந்த செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..' என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. விருதுநகர்: வீட்டிலிருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

    நாட்டுவெடிகுண்டுகள்
    படக்குறிப்பு, நாட்டுவெடிகுண்டுகள்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள, ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் மான் மற்றும் காட்டுப் பன்றிகள் வெடி வைக்கப்பட்டு வேட்டையாடப்படுவது அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    வேட்டையாடும் நபர்களை கண்காணிக்க, வனத்துறையினர் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செம்பட்டையன்கால் என்ற கிராமத்தில் கார்த்திக் எனும் இளைஞர் வீட்டை சோதனை செய்தபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பன்றி இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து கார்த்திக் என்பவரை கைது செய்த வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சுமார் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

  14. டெல்லியில் ஓபிஎஸ் முகாம் - ஓரம்கட்டுகிறாரா பிரதமர் நரேந்திர மோதி?

  15. ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் சூறை - கேரள முதல்வர் கண்டனம்

    ராகுல்காந்தி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ராகுல் காந்தி

    கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் சிலர் புகுந்து சூறையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    SFI கொடியுடன் சிலர் சுவர் ஏறிகுதித்து இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாக இளைஞர் காங்கிரஸின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் மாநில முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கடிதம் எழுதியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    இந்த தாக்குதலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், ஜனநாயக வழியில் கருத்து தெரிவிக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கவும் நம் நாட்டில் அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் தவறானவை, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  16. ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டதாக ஜேசிடி பிரபாகர் புகார்

    ஜேசிடி பிரபாகர்

    பட மூலாதாரம், FB JCDPrabhakar

    படக்குறிப்பு, ஜேசிடி பிரபாகர்

    ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.சி.டி பிரபாகர் இன்று மாலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ செயல்திட்டத்தில் இல்லாததை பொதுக்குழுவில் எழுப்பியது தவறு என்று குறிப்பிட்டு பேசத் தொடங்கினார்.

    மேலும், "அன்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் எல்லோரும் கருத்துகள்தான் சொன்னார்கள், ஆனால், பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை குறித்த பேச்சுகள் வந்துகொண்டே இருந்தன. இதனால் வேதனையில் தொண்டர்கள் இருந்தனர்.

    எங்கள் ஜனநாயக கடமையை உணர்ந்துதான் பொதுக்குழுவுக்கு நாங்கள் சென்றோம். ஆனால், கண்ணியமாக நடத்தப்படவேண்டிய நாங்கள் எப்படி நடத்தப்பட்டோம் என்பதை நாடே பார்த்தது.

    ஓபிஎஸ்ஸோ, ஈபிஎஸ்ஸோ இருவருமே எம்ஜிஆரோ அல்லது அம்மாவோ அல்ல. இந்த கட்சி ஓபிஎஸ், ஈபிஎஸ்-இன் சொத்து அல்ல. தொண்டர்களின் சொத்து.

    ஓபிஎஸ் மீது அவமரியாதை நிகழ்த்தப்பட்டபோது, அவரை அண்ணன் என்று சொல்லும் ஈபிஎஸ் அதைத் தடுத்திருக்க வேண்டாமா?

    கண்ணியமற்ற வார்த்தைகளில் சிலர் பேசினர். அவர் (ஓபிஎஸ்) பேசும்போது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பாட்டில் வீசப்பட்டது. அப்போதும் அமைதியாக புன்முறுவலுடன்தான் வெளியே வந்தார்” என்று தெரிவித்தார்.

    மேலதிக விவரங்கள் விரைவில்.

  17. எழுத்தாளர் மாலனுக்கு சாகித்ய அகாடமி விருது

    மாலன்

    பட மூலாதாரம், twitter/maalan

    படக்குறிப்பு, மாலன்

    2021 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது ஊடகவியலாளரும் எழுத்தாளருமான மாலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற நூலுக்கு இந்த மொழிபெயர்ப்புக்கான பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

  18. அதிமுகவில் ஒற்றுமை, கூட்டுத் தலைமை வேண்டும் - ஆர்.வைத்திலிங்கம் பேட்டி

    ஆர்.வைத்திலிங்கம்

    பட மூலாதாரம், ADMK

    படக்குறிப்பு, ஆர்.வைத்திலிங்கம்

    கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். ஒற்றுமை, கூட்டுத் தலைமை வேண்டும் என்பது எங்களது எண்ணம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், 'கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிராகாரிக்கப்படுகிறது. வரும் 11ம் தேதி பொதுக் குழு கூட்டம் நடைபெறும்' என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இது 'சட்டவிரோதமான கூட்டம். இந்த கூட்டம் செல்லாது' என்றும் வைத்திலிங்கம் தெரிவித்தார். இதையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர்.

    இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த, எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் சி.வி.சண்முகம், "பொதுக்குழு கூட்டம் முறையாகத்தான் நடைபெற்றது. நேற்றைய பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டன.'' என்றார்.

    இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பு மனுத்தாக்களுக்காகத்தான் ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார்.

    உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, சட்டத்திற்கு புறம்பாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம். அவர்கள் கொண்டு வந்த எல்லா தீர்மானங்களும் செல்லுபடி ஆகாது. கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். கூட்டுத் தலைமை வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். சசிகலா ஆதரவு கேட்பீர்களா ? என்கிற கேள்விக்கு, 'இந்த கட்சிக்குள் நடைபெறும் விவாதங்களில் மற்றவர்களை தொடர்புபடுத்தி பேச வேண்டாம்.' என்றார்.

  19. "ஓபிஎஸ் இனி அதிமுக ஒருங்கிணைப்பாளர் இல்லை" சி.வி.சண்முகம் அடுக்கும் காரணங்கள்

  20. திருச்சியில் இலங்கைத் தமிழர் தற்கொலை முயற்சி - விடுதலை செய்யக் கோரி

    இலங்கைத் தமிழர்கள் போராட்டம்

    திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர், தன்னை விடுதலை செய்யக் கோரி தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி, கடந்த 35வது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசு தங்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இலங்கை தமிழர்கள் 4 பேர் மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்‌‌.

    உமா ரமணன் என்பவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தீக்குளிக்க முயன்றார். தீக்காயமடைந்த அவரை மீட்டு, திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் 4 பேர் மரத்தில் தூக்கு கயிறு கட்டி, தற்கொலை செய்து கொள்வதாக கூறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சிறப்பு முகாமில் போராட்டம்
    படக்குறிப்பு, இலங்கைத் தமிழர் உமா ரமணன்