பிரதமர் நரேந்திர மோதிக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. காங்கிரஸ் எம்.பிக்கள் மீதான தாக்குதல் - ப.சிதம்பரம் கடும் கண்டனம்

    ப.சிதம்பரம்
  2. அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் திடீர் ஆலோசனை

    ADMK

    பட மூலாதாரம், DIPR

    அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். இதற்கு முன்னதாகவே கட்சி அலுவலகத்துக்கு உள்ளே இருந்த முன்னாள் அமைச்சர்கள் தங்களுடைய ஆலோசனை கூட்டத்தை முடித்துக் கொண்டனர். இவர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாவர்.

    கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது சேலத்தில் உள்ள அவரது வீட்டில் இருக்கிறார். அங்கிருந்தபடி தமது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    மறுபுறம் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய கூட்டத்தில் வைத்திலிங்கம், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், வைகைச்செல்வன், தர்மர், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், செம்மலை, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுதான் எனது நிலைப்பாடு என்று கூறினார்.

  3. அதிமுக தலைமை அலுவலகத்தில் என்ன நடக்கிறது?

  4. அக்னிபத் திட்டம்: தமிழ்நாடு, பிகார் உள்பட பல மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம்

  5. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி வெளியீடு

    class 10

    பட மூலாதாரம், AFP

    தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியாகுமென என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நண்பகல் 12 மணிக்கும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

  6. இலங்கையில் பரவும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று – இதுவரை 14 பேர் உயிரிழப்பு

  7. வீடுகள் இடிப்பு - உ.பி அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    உ.பி

    பட மூலாதாரம், Getty Images

    கான்பூர் வன்முறைக்கு பிறகு, உத்தர பிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டவர்களின் வீடுகள் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

    வீடுகள் இடிக்கப்படுவதை தடுக்க கோரிய மனுவை விசாரித்த நீதிபதி ஏ. எஸ் போபண்ணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, உத்தரப் பிரதேச அரசு பதிலளிக்க மூன்று நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது.

    முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மா முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

  8. அ.தி.மு.க. பொதுக் குழுவுக்கு தடை கோரிய மனு தள்ளிவைப்பு

    AIADMK OFFICIAL

    பட மூலாதாரம், AIADMK OFFICIAL

    ஜூன் 23ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அ.தி.மு.கவின் பொதுக் குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

    ஜூன் 23ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அ.தி.மு.கவின் பொதுக் குழுவுக்குத் தடை கோரி சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக அ.தி.மு.கவின் அவைத் தலைவர் தமிழ் மகன் ஹுசைன், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோர் பதிலளிக்க வேண்டுமென கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று நீதிபதி ப்ரியா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "சூரியமூர்த்தி அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் இல்லை என்றும் அவர் அ.தி.மு.கவின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும்" என்றும் கோரப்பட்டிருந்தது.

    இதற்குப் பதிலளிக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அ.தி.மு.கவின் பொதுக் குழு ஜூன் 23ஆம் தேதி கூடவிருப்பதால், அதற்கு முன்பாக வழக்கை விசாரிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், நீதிபதி அதனை ஏற்கவில்லை. உரிமை இயல் வழக்குகளில் இந்த அளவுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டுமெனக் கூறி, வழக்கை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததை உறுதிசெய்தார் நீதிபதி.

  9. வணக்கம் நேயர்களே!

    நான் எம். ஆர். ஷோபனா. இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலையை இனி நான் தொகுத்து வழங்கவுள்ளேன். உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவிலான முக்கிய செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

  10. மக்களவை சபாநாயகரை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்

    காங்கிரஸ்

    பட மூலாதாரம், ANI

    மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து முறையிட்டனர்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த மூன்று தினங்களாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜரானார். அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களை டெல்லி காவல் துறை கைது செய்தது. மேலும், ஜோதிமணி எம்.பி உள்ளிட்டோரை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு சென்று கைது செய்தது காவல் துறை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்களும் இதுதொடர்பாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து முறையிட்டனர்.

  11. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் - மா.சுப்பிரமணியன்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    பட மூலாதாரம், MA SUBRAMANIAN FACEBOOK PAGE

    காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என, பொதுமக்களுக்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சென்னை, தாம்பரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் நேற்று 18 வயது பெண் ஒருவர் தஞ்சாவூரில் உயிரிழந்துள்ளார். அவர், காய்ச்சல் ஏற்பட்டு வீட்டிலேயே 2-3 தினங்கள் இருந்துள்ளார். கடைசியாக தனியார் மருத்துவமனைக்கு நேற்று மதியம் வந்துள்ளார், அங்கு உயிரிழந்துள்ளார்.

    காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் உடனேயே மருத்துவமனைக்கு வந்து ஆலோசனை பெற வேண்டும் என்பது அவசியம். தானாகவே சரியாகிவிடும் என தப்பு கணக்கு போடக்கூடாது" என தெரிவித்தார்.

  12. அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

    அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வம் விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை பிபிசி தமிழின் இந்த ட்விட்டர் பதிவுக்கு சென்று தெரிவியுங்கள்:

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூரிலும் இளைஞர்கள் போராட்டம்

    அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு

    இந்திய ராணுவத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரில் இளைஞர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், தமிழ்நாட்டிலும் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    4 ஆண்டுகள் தற்காலிகமாக ராணுவத்தில் பணிக்கு ஆள் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர்கள், இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  14. பிகாரில் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம்

    இந்திய ராணுவத்தில் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரின் சாப்ரா மாவட்டத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டயர்களை எரித்ததாகவும், பேருந்து ஒன்றை சேதப்படுத்தியதாகவும் ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    அதேபோன்று, அம்மாநிலத்தின் ஜெஹனாபாத் பகுதியிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு - பிகாரில் இளைஞர்கள் போராட்டம்

    அக்னிபத் திட்டம்

    பட மூலாதாரம், ANI

    அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைவர்கள், ராணுவத்தில் குறுகிய கால பணி நியமனம் தொடர்பான 'அக்னிபத்' கொள்கையை சமீபத்தில் அறிவித்தனர். அக்னிபத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு முறை 'டூர் ஆஃப் டூட்டி' என்று அழைக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தால், "நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். வேலையில்லாத இளைஞர்களின் 'போராளிகள் குழு' உருவாகிவிடுமோ என்ற அச்சம் நிலவுவதாக" சிங்கப்பூரில் உள்ள எஸ் ராஜரத்தினம் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸைச் சேர்ந்த அனித் முகர்ஜி பிபிசியிடம் கூறியிருந்தார்.

    இந்நிலையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரில் ராணுவத்தில் சேருவதற்கு ஆர்வமுள்ள, தங்களை தயார்படுத்திக்கொண்டு வரும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், "டூர் ஆஃப் டூட்டி முறையை கைவிட வேண்டும், முன்பு இருந்த முறையிலேயே ஆட்சேர்ப்பை நடத்த வேண்டும். 4 ஆண்டுகளுக்கு மட்டும் யாரும் ராணுவத்தில் சேரமாட்டார்கள்" என தெரிவித்ததாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 12,213 பேருக்கு கொரோனா தொற்று

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 12,213 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7,624 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 58,215 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். தினசரி தொற்று விகிதம் 2.35 சதவீதமாக உள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 476 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என, மாநில பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது வரை, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் மருத்துவமனைகளிலும் 1,938 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 169 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

  17. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை ராகுல் காந்தியிடம் மூன்றாவது நாளாக விசாரணை நடத்தியது.
    • ஈரோடு மாவட்டத்தில் கனமழையால் பெண்கள் இருவர் உயிரிழந்தனர்.
    • ஒற்றை தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் தான் வரவேண்டும் என ராமநாதபுரத்தில் அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியுனர்.
    • இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 24 மணிநேரத்தில் 8,822 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று, தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை ஒருநாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    • முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா முகமது நபி தொடர்பாக தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஆதரவாக, சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்ட இளைஞரை கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
    • குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக டெல்லியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் நேற்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தியதாக ஏ.என்.ஐ முகமை தெரிவித்துள்ளது.
    • குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
    • காவிரி வரலாறு குறித்து கர்நாடக முதல்வருக்கு தெரியவில்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.