நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
- நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை ராகுல் காந்தியிடம் மூன்றாவது நாளாக விசாரணை நடத்தியது.
- ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் பெண்கள் இருவர் உயிரிழந்தனர்.
- ஒற்றை தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் தான் வரவேண்டும் என ராமநாதபுரத்தில் அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,822 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று, தமிழ்நாட்டில் நேற்று ஒருநாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
- முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா முகமது நபி தொடர்பாக தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஆதரவாக, சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்ட இளைஞரை கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
- குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக டெல்லியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தியதாக ஏ.என்.ஐ முகமை தெரிவித்துள்ளது.
- குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
- காவிரி வரலாறு குறித்து கர்நாடக முதல்வருக்கு தெரியவில்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.










