தமிழ்நாடு காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் அதிருப்தி

தமிழ்நாட்டில் காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்திருப்பதாகவும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. கோயம்புத்தூர் - ஷீரடி தனியார் ரயில் சேவை: இன்று தொடக்கம் - தொழிற்சங்கம் எதிர்ப்பு

    ரயில்வே தொழிற்சங்கத்தினர் போராட்டம்

    தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்படும் முதல் தனியார் ரயில் கோயம்புத்தூரில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் ஷீரடிக்கு இன்று மாலை புறப்படுகிறது.

    கோயம்புத்தூரை சேர்ந்த எம் அண்ட் சி என்கிற நிறுவனம் இந்த ரயிலை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து, 'தனியார் ரயிலின் கட்டணம் இரண்டு மடங்கு வரை அதிகமாக உள்ளதாக சர்ச்சையானது. எனவே, கோவை - ஷீரடி ரயிலை தனியார் வசம் ஒப்படைக்காமல், ரயில்வே துறையே ஏற்று நடத்த வேண்டும்.' என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் அமைப்பினர் கோவை - ஷீரடி ரயிலை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை - ஷீரடி ரயிலை தனியாருக்கு விற்றதை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். விரைவு ரயில்களை தனியார்மயமாக்கும் முடிவுகளை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

  2. தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து இலங்கைக்கு விமான, கப்பல் சேவை - அமைச்சரவை ஒப்புதல்

    இலங்கை விமான சேவை

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து இலங்கைக்கு கப்பல், விமான சேவை தொடங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    தமிழ்நாடு திருச்சியில் இருந்து பலாலிக்கு விமான சேவையும் புதுச்சேரி-யாழ்ப்பாணம் இடையே பயணிகள், சரக்கு கப்பல் சேவைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் உள்ள பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரம் கோயில் மஹா கும்பாபிசேகம் வரும் ஜூலை 6ம் தேதி நடைபெறுகிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து ஆன்மீகவாதிகள் பங்கேற்கும் வகையில் காங்கேசன் துறைக்கு கப்பல் சேவையையும் பலாலிக்கு விமான சேவையும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  3. ராகுலிடம் 2-வது நாளாக விசாரணை: குற்றம் என்ன? எஃப்.ஐ.ஆர். எங்கே? - ப.சிதம்பரம் கேள்வி

  4. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம்.

    நான் ஜோ மகேஸ்வரன். இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய இங்கு இணைந்திருங்கள்.

  5. நேஷனல் ஹெரால்டு வழக்கு: ப.சிதம்பரம் கேள்வி

    ப.சிதம்பரம்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் இரண்டாவது நாளாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.

    இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக, ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில், "அறிவார்ந்த பாஜக நண்பர்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்று விழைகிறேன் PMLA சட்டத்தில் உள்ள பட்டியல் குற்றங்களில் (scheduled offences) எந்தக் குற்றத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை தன் விசாரணையைத் தொடங்கியுள்ளது?

    1. பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையின் விசாரணையைத் தூண்டிய 'திட்டமிடப்பட்ட குற்றம்' என்ன?

    2. இந்த குற்றத்தின் கீழ் எந்த போலீஸ் முகமை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது?

    3. முதல் தகவல் அறிக்கை எங்கே? அதன் நகலை காண்பிக்க முடியுமா?

    திட்டமிடப்பட்ட குற்றம் இல்லாமல், முதல் தகவல் அறிக்கை இல்லாமல் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணையைத் தொடங்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?" என பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. இலங்கையில் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை - விடுமுறை தினங்களில் விவசாயம் செய்ய யோசனை

    இலங்கை நெருக்கடி

    பட மூலாதாரம், KOGULAN

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    இலங்கையில் அத்தியாவசியமற்ற அரசு நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீர்ப்பாசனம், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு சேவை, கல்வி, போக்குவரத்து, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களை தவிர, ஏனைய அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    எதிர்வரும் 3 மாத காலத்திற்கு இந்த நடைமுறை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால், அரசு ஊழியர்களுக்கு காணப்படும் போக்குவரத்து பிரச்னையை கருத்தில்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

    உணவு பொருட்களுக்கான தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில், அரசு ஊழியர்கள் தமது வீட்டுத் தோட்டம் அல்லது உரிய காணிகளில் விவசாய நடவடிக்கைகளை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அமைச்சரவையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு புறப்பட்டார் ராகுல் காந்தி

    நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக 2-ஆம் நாளாக ஆஜராக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு புறப்பட்டார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. அவருடைய சகோதரி பிரியங்கா காந்தியும் உடன் உள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    இதனிடையே, அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட முயன்றவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர், மாநிலங்களவை உறுப்பினர் புனியா உள்ளிட்டோர், இன்று காலை காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்கு வந்த போது டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். தங்களிடம் டெல்லி காவல்துறையினர் தவறாக நடந்து கொண்டதாக அவர் குற்றச்சாட்டு தெரிவித்து வீடியோ ஒன்றை மாணிக்கம் தாகூர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  8. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு இந்திய அரசு வேலை - பிரதமர் நரேந்திர மோதி

    ராகுல் காந்தி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் புதிதாக 10 லட்சம் பேருக்கு இந்திய அரசுப்பணியில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என, பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோதியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள மனித வளங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோதி ஆய்வு செய்தார். அதன்படி, நாட்டில் இந்திய அரசு பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்துவதற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. டி20 உலகக் கோப்பை போட்டி: எங்கு எப்போது நடைபெறுகிறது?

  10. கும்பகோணத்தில் காதல் தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர்கள் - இருவர் கைது

    இரட்டைக் கொலை

    பட மூலாதாரம், GETTY IMAGES

    கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி கிராமத்தில் நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம், குடும்ப பிரச்னை காரணமாக நடைபெற்றது என்றும், இக்கொலைகளில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து சக்திவேல், ரஞ்சித் ஆகிய இருவரும் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

    இதனிடையே, சம்பவ இடத்தில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் குடும்ப பிரச்னை காரணமாக நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்தார்.

  11. நேஷனல் ஹெரால்டு: சோனியா குடும்பத்தை சோதிக்கும் ஊழல் புகாரின் பின்னணி என்ன?

    ராகுல் காந்தி - சோனியா காந்தி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ராகுல் காந்தியின் கொள்ளுத் தாத்தாவும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவால் 1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1937ஆம் ஆண்டில் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜே.எல்.) என்ற நிறுவனத்தின் சார்பில் இந்த பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. ஏ.ஜே.எல். நிறுவனத்தில் 5,000க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இந்நிறுவனத்தின் மூலம் உருது மொழியில் குவாமி ஆவாஸ் (Qaumi Awaz) என்ற பத்திரிகையும் இந்தி மொழியில் நவ்ஜீவன் என்ற தினசரி பத்திரிகையும் தொடங்கப்பட்டது.

    அந்த காலத்தின் மிகவும் செல்வாக்குமிக்க தலைவர்களால் வடிவமைக்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தால் அடையாளப்படுத்தப்பட்டது. இதன்மூலம் இந்தியாவின் சிறந்த தேசியவாத பத்திரிகை என்ற புகழை அடைந்தது நேஷனல் ஹெரால்டு.

  12. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,594 பேருக்கு கொரோனா தொற்று

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,594 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50,548ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்துவந்தது. நேற்று 8,084 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் தினசரி பாதிப்பு விகிதம் 2.05% ஆக குறைந்துள்ளது. நேற்று இந்த விகிதம் 3.24% ஆக இருந்தது.

    இதனிடையே தமிழ்நாட்டில் நேற்று 255 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், சென்னையில் 127 பேருக்கும் செங்கல்பட்டில் 44 பேருக்கும் கோயம்புத்தூரில் 14 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 134 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். நேற்று கொரோனா தொற்றால் உயிரிழப்பு இல்லை. தற்போது வரை சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 1,453ஆக உள்ளது.

  13. குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் - திருமாவளவன்

    தொல். திருமாவளவன்

    குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் இதுவரை கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்த எவரும் குடியரசுத் தலைவராக இருந்ததில்லை.

    இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், தலித்துகள் முதலானோர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால், இதுவரை கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த எவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

    தொல். திருமாவளவன்

    இந்தியாவின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சமூகம் ஆற்றியிருக்கும் பங்களிப்பு மகத்தானது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகையில் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.78 கோடி ஆகும். இவ்வளவு பெரிய எண்ணிக்கை கொண்ட ஒரு சமூகம் இப்படி புறக்கணிக்கப்படுவதும் தாக்குதலுக்குள்ளாவதும் இந்திய ஜனநாயகத்துக்குப் பெருமை சேர்ப்பதாகாது.

    எதிர்க்கட்சிகள் தமது பொது வேட்பாளராக கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும். இது பாதுகாப்பற்ற நிலையில் எந்நேரமும் அச்சத்தில் உழலும் கிறிஸ்தவ மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும் வெறுப்பு அரசியலுக்கு எதிரான ஒரு மாற்று நடவடிக்கையாகவும் அமையும்" என தெரிவித்துள்ளார்.

  14. வாஷிங் மெஷினை சரி செய்யாததால் பெண்ணுக்கு முதுகுவலி - ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

  15. அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராகிறார் ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    பட மூலாதாரம், AICC

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆஜரானார். அவரிடம் சுமார் 11 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளார் ராகுல் காந்தி.

    முன்னதாக, நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி மூத்த தலைவர்கள், கட்சியினருடன் பேரணியாக சென்றார் ராகுல் காந்தி.

    இதனிடையே, டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ப. சிதம்பரத்தின் விலா எலும்பு முறிந்ததாக அக்கட்சியின் மேலிட தலைவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில், ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கியிருக்கிறார்.

    "மூன்று பெரிய, முரட்டுத்தனமான போலீசார் உங்கள் மீது மோதும்போது, சந்தேகத்திற்கிடமான மெல்லிய முறிவில் இருந்து உங்களால் தப்பிக்க முடிந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், "எனது விலா எலும்பில் ஏற்பட்ட பிரச்னை 10 நாட்களில் தானாகவே சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நான் நலமாக இருக்கிறேன், நாளை என் வேலையைப் பார்ப்பேன்" என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

  16. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஜூலை 14ஆம் தேதி விசாரணைக்கு வர அமலாக்கத்துறை உத்தரவிட்டது. அவர் விசாரிக்கப்படுவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
    • கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' என்கிற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
    • இந்திய பிரதமர் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று இந்திய பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
    • இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளன.
    • சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த சம்பவத்தில், காவல்துறையை சேர்ந்த 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.