ராகுல் காந்தி மீண்டும் ஜூன் 14இல் விசாரணைக்கு வர அமலாக்கத்துறை உத்தரவு

நேஷனல் ஹெரால்ட் நாளிதழ் தொடர்புடைய பண மோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மத்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துள்ளது. ராகுல் விசாரணைக்கு அழைக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் தொடர்ந்து போலீஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இலங்கையில் பொருளாதார நெருக்கடி வந்தது ஏன் - முழு விளக்கம்

  2. பிரிட்டனில் இன்று தொடங்கும் காமன்வெல்த் விளையாட்டு: இந்தியாவின் பதக்க வாய்ப்பு எப்படி?

  3. கொரோனா தடுப்பூசிக்கும், ரத்த வங்கிகளில் இருப்பு குறைவதற்கும் என்ன தொடர்பு? புதிய சிக்கல்

  4. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம். இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இது வரையிலான இன்றை முக்கிய நிகழ்வுகள்.

    • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஜூலை 14ஆம் தேதி விசாரணைக்கு வர அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. அவர் விசாரிக்கப்படுவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
    • கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' என்கிற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • இந்திய பிரதமர் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    • மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று இந்திய பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
    • இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளன.
    • சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த சம்பவத்தில், காவல்துறையை சேர்ந்த 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள்

  5. ராகுல் காந்தி மீண்டும் ஜூன் 14இல் மீண்டும் விசாரணைக்கு வர அமலாக்கத்துறை உத்தரவு

    ராகுல் காந்தி

    பட மூலாதாரம், AICC

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) மீண்டும் அமலாக்க இயக்குநரகத்தில் (ED) ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் இன்று முதலாம் நாள் விசாரணைக்குப் பிறகு ராகுல் காந்தி வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

    நேஷனல் ஹெரால்டு நாளிதழுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கு குறித்து ராகுல் காந்தியிடம் அதிகாரிகள் திங்கட்கிழமை சுமார் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த விசாரணை, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசின் அழுத்தம் காரணமாக நடப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    டெல்லியில் திங்கட்கிழமை காலையில் காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து ராகுலிடம் விசாரணை நடத்தப்பட்ட அமலாக்கத்துறை இயக்குநரகத்தை நோக்கி போலீஸ் தடையை மீறி பேரணியாக புறப்பட முயன்றனர். ஆனால், அவர்களை போலீஸார் காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து முன்னேற விடாமல் தடுத்து போலீஸ் பேருந்துகளில் ஏற்றி வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

    இரவு 10 மணி கடந்த பிறகும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் டெல்லி துக்ளக் சாலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

    காங்கிரஸ்

    பட மூலாதாரம், AICC

    படக்குறிப்பு, டெல்லி துக்ளக் சாலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள்

    இதற்கிடையே, காலை 11.10 மணிக்கு விசாரணைக்காக ஆஜரான ராகுல் காந்தி, இரவு 9.45 மணிக்கு பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். இதற்கு இடையே பிற்பகல் 2.10 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை மதிய உணவு அருந்த வெளியே செல்லவும் ராகுல் காந்தி அனுமதிக்கப்பட்டார்.

    ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான அதே சமயம், அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அமலாக்கத்துறையின் வரவேற்பு அறை பகுதியில் அமர்ந்திருக்க அனுமதிக்கப்பட்டனர்.

    பிரியங்கா காந்தி

    பட மூலாதாரம், AICC

    உணவு இடைவேளையின்போது டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவரும் தங்களுடைய தாயுமான சோனியா காந்தியின் உடல் நிலை குறித்து அறிய தமது சகோதரி பிரியங்காவுடன் ராகுல் சென்றார். கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகளுடன் சோனியா காந்தி கங்காராம் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார்.

  6. 90 மீட்டர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட ராணுவத்தினர்

  7. கும்பகோணத்தில் காதல் தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர்கள் - திருமணமான ஐந்து நாளில் சோகம்

  8. அஃப்ரீன் பாத்திமா வீட்டை இடித்த உபி அரசு - இவர் யார்?

  9. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கருக்கலைப்பு - தொடரும் விதி மீறல்

    கருவில் இருப்பது பூ என்றால் பெண் குழந்தை, தலை என்றால் ஆண் குழந்தை. இதுபோன்ற குறியீட்டுச் சொற்களை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஸ்கேன் மையங்களில் பாலினத்தை சொல்வதற்கு பயன்படுத்துகிறார்கள்.

    குறிப்பாக இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை 'பெண் குழந்தை' என தெரிய வந்தால் போலி மருத்துவர்கள் மூலமாக கருக்கலைப்பும் நடைபெறுகிறது.

    தேசிய குடும்ப நல ஆய்வின்படி, தமிழ்நாட்டில், 2015-16ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 954 பெண் குழந்தைகள் இருந்தனர். அதே ஆய்வில் 2020-21ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 878 பெண் குழந்தைகள்தான் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.

    கரு

    பட மூலாதாரம், Getty Images

  10. உலக ரத்த கொடையாளர் தினம்: 'பாம்பே ஓ' ரத்தப் பிரிவை தானம் செய்யும் கொடை உள்ளங்கள்

  11. நான் நலமுடன் இருக்கிறேன்: ப. சிதம்பரம்

    நான் நலமுடன் இருக்கிறேன், நாளை எனது பணிக்கு திரும்புவேன் என்று கூறியிருக்கிறார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.

    டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சி தலைவர்களுடன் பங்கேற்ற ப. சிதம்பரத்தின் விலா எலும்பு முறிந்ததாக அக்கட்சியின் மேலிட தலைவர்கள் கூறியிருந்தனர்.

    இந்த நிலையில், ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கியிருக்கிறார்.

    மூன்று பெரிய, முரட்டுத்தனமான போலீஸ்காரர்கள் உங்கள் மீது மோதும்போது, சந்தேகத்திற்கிடமான மெல்லிய முறிவில் இருந்து உங்களால் தப்பிக்க முடிந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    எனது விலா எலும்பில் ஏற்பட்ட பிரச்னை 10 நாட்களில் தானாகவே சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நான் நலமாக இருக்கிறேன், நாளை என் வேலையைப் பார்ப்பேன் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. ராகுலிடம் தொடரும் விசாரணை: காங்கிரஸ் தலைமையகத்தில் கூடிய மூத்த தலைவர்கள் முக்கிய ஆலோசனை

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் வேளையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் ரகு சர்மா, முகுல் வாஸ்னிக், ராஜீவ் சுக்லா, அஜய் மாக்கன், டிஎஸ் சிங் தியோ உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தற்போது கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரணை பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - பூபிந்தர் சிங் ஹூடா

    பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரித்தது வரும் செயல்பாடு, பாஜக தலைமையிலான மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா திங்கள்கிழமை தெரிவித்தார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹூடா, ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சி உறுதியாக நிற்கிறது என்றும் நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.

  14. கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?

  15. தருமபுரி தேர் அச்சு முறிந்து விபத்து: இருவர் மரணம், 10க்கும் மேற்பட்டோர் காயம்

    தருமபுரி தேர் விபத்து
    படக்குறிப்பு, தருமபுரி தேர் விபத்து

    தருமபுரி அருகே கோயில் திருவிழாவில் தேர் அச்சு முறிந்து, கவிழ்ந்தது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஹள்ளி காளியம்மன் கோயில் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காளியம்மன் கோயில் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

    தேர் நிலையடியைச் சேர்வதற்கு சற்று முன்பு, எதிர்பாராத விதமாக அச்சு முறிந்து முன்பக்கமாக கவிழ்ந்தது. இதில், பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா காலனியை சேர்ந்த மனோகரன், சரவணன், அப்பு முதலி காலனி சேர்ந்த முருகன், மாதலி கிராமத்தை சேர்ந்த மாதேஸ் ஆகியோர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோகரன், சரவணன் இருவரும் உயிரிழந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேர்த்திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று தேர்த் திருவிழா நடைபெற்றுள்ளது.

    இதேபோல், திருப்பூர் மாவட்டம் சீராப்பாளையம் கருப்பராயன் கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக, ஈரோடு மாவட்டம் மன்னதாம்பாளையம் குல விளக்கு அருகே காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க கிராம மக்கள் சென்றுள்ளனர். இதில், பெருமாநல்லூர் செட்டிபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் இளங்கோ, சீராம்பாளையத்தை சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளார் கோவிந்தராஜ் ஆகிய இருவரும் ஆற்றில் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்றபோது, முழ்கி உயிரிழந்தனர்

    தருமபுரி தேர் விபத்து
    படக்குறிப்பு, கவிழ்ந்து கிடக்கும் தேர்
  16. தமிழ்நாட்டில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் - காரணம் என்ன?

  17. ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்கவும் - ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

    இந்தியாவில் ஆன் லைன் சூதாட்டங்களை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்று ஊடகங்களுக்கு தகவல் ஒலிபரப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் திங்கள் கிழமை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், 'சூதாட்டம், பந்தயம் கட்டுதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்கள் கவனத்திற்குள்ளாகியுள்ளன.

    இதனால், சமூக, பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள், இளைஞர்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். எனவே, அச்சு, காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் ஆன் லைன் சூதாட்டத்தை ஊக்குவிப்பது போன்ற விளம்பரங்களை தவிர்க்க வேண்டும்.' என்று அறிவுறுத்தியுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய மரணம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

    காவல் மரணம்

    பட மூலாதாரம், Getty Images

    கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி இறந்த விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி இறந்தது குறித்து, ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு, தானாக முன்வந்து இந்த நோட்டீஸை மனித உரிமை ஆணையம் அனுப்பியுள்ளது.

    ஜூன் 13ஆம் தேதியன்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, நோட்டீஸ் அனுப்பியுள்ள மாநில மனித உரிமை ஆணையம் , சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையர் இந்த விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளது.

    அப்படிச் செய்யத் தவறும் பட்சத்தில், உரிய நடவடிக்கையை மாநில மனித உரிமை ஆணையம் மேற்கொள்ளுமென்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

  19. இலங்கை நெருக்கடி: வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

    இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது, சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 38 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 5 லட்சம் பேர் வெளிநாடு செல்லலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான காணொளியில் பார்க்கலாம்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு