இந்தியாவின் அக்னி 4 ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை

அக்னி 4 இடைநிலைத் தூர பேலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக இந்திய அரசின் பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு: 'துளியும் உண்மையில்லை' - மா.சுப்பிரமணியன் பேட்டி

    தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    பட மூலாதாரம், Subramanian.Ma

    படக்குறிப்பு, தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் தற்போது கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் ஹெல்த் மிக்ஸ் பவுடருக்கு பதிலாக ஆவின் பவுடர் கொடுத்தால் அரசு ரூ.45 கோடி பணத்தை மிச்சப்படுத்தலாம். ஹெல்த் மிக்ஸ் பவுடர் மற்றும் ஐயன் சிரப் ஆகிய பொருட்களை வாங்குவதில் திமுக அரசு ஊழல் செய்துள்ளது.

    இதனால் ரூ. 77கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். அந்த குற்றசாட்டுகளில் துளியும் உண்மை இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் சுப்ரமணியன் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், 'கர்ப்பிணிகளுக்கு வாங்கப்படும் கிட் தொடர்பான டெண்டர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. டெண்டர் முடிவு வருவதற்கு முன்னர், டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது. நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அண்ணாமலை குற்றம் சுமத்துவது நியாயமல்ல.' என்றார்.

    மேலும், 'அண்ணாமலை சொல்வதுபோல் ஆவின் பால் பவுடரை, ஹெல்த் மிக்ஸ் பவுடருக்கு பதிலாக கொடுக்கமுடியாது. ஆவின் பால் பவுடர் டீ, காபியுடன் கலந்து சாப்பிடும் பவுடர்.' என்றார் அமைச்சர்.

    பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டது போல ஐயன் சிரப் வாங்குவதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என கூறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,'' குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஐயன்சிரப் மருந்தில் இரண்டு பொருட்கள்மட்டும்தான் இருக்கும்.

    கர்ப்பிணி பெண்களுக்கு அரசு தரும் ஐயன் சிரப்பில் 32 பொருட்கள் உள்ளன. குழந்தைகளுக்கு கொடுக்கும் சிரப் மருந்தை கர்ப்பிணி பெண்களுக்கு தர முடியாது. இந்த இரண்டு மருந்துகளின் கலவையும் வேறுவேறு,''என்றார்.

  2. சென்னையில் ஆன்லைன் ரம்மியால் பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

    ஆன் லைன் ரம்மியால் தற்கொலை

    பட மூலாதாரம், Getty Images

    சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் பாக்யராஜ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பவானி(29). சென்னை கந்தன்சாவடியில் தனியார் நிறுவனத்தில் பவானி பணி புரிந்துள்ளார். இவர் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.

    தகவலறிந்த மணலி புதுநகர் காவல் நிலைய போலீசார் சடலத்தை உடற்கூராய்வுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், வேலைக்கு ரயிலில் செல்லும் போது, ஆன் லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

    இதற்காக, பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். மொத்தம் 20 சவரன் வரை நகைகளை விற்றுள்ளார். மேலும், தமது சகோதரிகள் இருவரிடம் தலா ஒன்றரை லட்சம் என 3 லட்ச ரூபாய் கடன் பெற்றும், ஆன்லைன் ரம்மியில், பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

  3. ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை: மருத்துவமனைகளில் சிறப்பு குழு ஆய்வு

    சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்
    படக்குறிப்பு, ஆய்விற்கு செல்லும் மருத்துவ குழு

    ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை எடுத்த புகாரையடுத்து, மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

    ஈரோடு மாநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். சிறுமியின் தாய், கணவரைப் பிரிந்து மற்றொருவருடன் வசித்து வருகிறார். தனது மகளை கருமுட்டை விற்பனை செய்வதில் ஈடுபடுத்தியுள்ளார் என்று புகார் எழுந்துள்ளது.

    ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுமியை அழைத்துச் சென்று, கருமுட்டையை விற்பனை செய்துள்ளனர். சிறுமியின் தாய், இடைத்தரகர், போலி ஆவணங்களை தயாரித்தவர் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .

    இந்நிலையில், வயது சிறுமியை கருமுட்டை தானத்திற்கு உட்படுத்திய புகாருக்குள்ளாகியுள்ள, தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ குழு அதிகாரிகள் நேற்று மாலை முதல் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

    மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களிடையே விசாரணை நடத்தினர். இதில், சிறுமி கருமுட்டை தானம் செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    தொடர்ந்து, இன்று காலை பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  4. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம்.

    நான் ஜோ மகேஸ்வரன். இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  5. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்திய வெளியுறவுத் துறை விளக்கம்

    இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

    முகமது நபி பற்றி சர்ச்சைக்கிடமாகப் பேசி, கான்பூரில் ஒரு கலவரத்துக்கு வழி வகுத்ததாக குற்றம்சாட்டப்படும் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசியதாக மற்றொரு நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    அது மட்டுமல்ல, எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் சித்தாந்தத்தையோ, ஆட்களையோ பாஜக முன்னிறுத்தவில்லை என்று ஓர் அறிக்கையையும் பாஜக வெளியிட்டுள்ளது.

    இதனிடையே, சௌதி அரேபியா உள்ளிட்ட மத்தியக் கிழக்கு நாடுகளில் முகமது நபி பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு தீவிர எதிர்வினைகள் வெளியாகிவருகின்றன. மேலும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் (ஓஐசி) இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "ஓஐசியின் பொதுச் செயலாளர் இந்தியா குறித்து வெளியிட்ட அறிக்கையை பார்த்தோம்.

    அவரின் தேவையற்ற, குறுகிய மனப்பான்மையுடன் வெளியிடப்பட்ட கருத்தை இந்திய அரசு திட்டவட்டமாக மறுக்கிறது.

    ஒரு மத ஆளுமையை இழிவுபடுத்தும் ட்வீட்டுகள் மற்றும் கருத்துக்கள் சில தனிப்பட்ட நபர்களால் வெளியிடப்பட்டன.

    இந்திய அரசு எல்லா மதங்களையும் உச்சபட்ச மரியாதையுடன் நடத்துகிறது. மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய நபருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. தாலிபன்கள் தங்கள் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க இந்தியாவின் உதவியை நாடுகிறதா?

  7. தடுத்து வைக்கப்பட்ட விமானம் - இலங்கையை விட்டு வெளியேறும் ரஷ்ய பிரஜைகள்

  8. அறநிலையத்துறை குறித்த மதுரை ஆதீனத்தின் கருத்து - அமைச்சர் சேகர்பாபு பதில்

    பி.கே.சேகர்பாபு

    பட மூலாதாரம், PK SEKAR BABU FACEBOOK

    அறநிலையத்துறை குறித்த மதுரை ஆதீனத்தின் கருத்துக்கு அத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

    “தேவாலயங்கள், மசூதிகளின் சொத்துகளில் அரசு தலையிடுவதில்லை. ஆனால், திருக்கோயில்களை கொள்ளையடிக்கும் கூடாரமாக அறநிலையத்துறை மாற்றி வருகிறது. எனவே, அறநிலையத்துறையை கலைத்துவிட வேண்டும்” என, ஞாயிற்றுக்கிழமை மதுரை ஆதீனம் பேசியிருந்தார்.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காகவே இப்படி பேசியுள்ளார். காலப்போக்கில் அவரும் மனம் மாறி இந்த அரசை ஆதரிக்கின்ற, அரசியல்வாதிகளை ஏற்றுக்கொள்ளும் சூழல் பிறக்கும்” என தெரிவித்தார்.

  9. கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்று நீரில் மூழ்கி சிறுமி உட்பட 7 பெண்கள் பலி - இந்திய பிரதமர் இரங்கல்

    கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர் தண்ணீரில் மூழ்கி நேற்று உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோதி தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில், ஏழு சிறுமியர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். இந்த துயர் மிகுந்த வேளையில், அவர்களின் குடும்பங்கள் மன சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    அதேபோன்று இச்சம்பவத்திற்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  10. பாலிவுட் நடிகர் சல்மான் கான், தந்தை சலீம் கானுக்கு கொலை மிரட்டல்

    சல்மான் கான்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    பலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவருடைய தந்தை சலீம் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில், மும்பை போலீஸ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை (மே 05) காலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடிதம் ஒன்றை சலீம் கானுக்கு வழங்கியதாகவும் அதில் சல்மான் கானுக்கும் அவருடைய தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாகவும், காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பாந்த்ரா காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 506(2)இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  11. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை துறவிகள், ஜீயர்கள், அதீனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் - பேரூர் ஆதீனம்

    பேரூர் ஆதீனம்

    தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை துறவிகள், ஜீயர்கள், அதீனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, மதுரையில் பேரூர் அதீனம் தெரிவித்துள்ளார்.

    மதுரையில் துறவிகள் மாநாடு பழங்காந்தம் சந்திப்பில் நடைபெறுகிறது. முன்னதாக மதுரை தனியார் மஹாலில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "தமிழ்நாட்டில் உள்ள மசூதிகள், தேவாலயங்கள் போல இந்துக்களின் கோயில்களை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து துறவிகள், ஜீயர்கள், அதீனங்கள் கட்டுப்பாட்டில் விட வேண்டும்.

    இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு 93% இந்துக்கள் இருந்தனர். ஆனால், தற்போது 80% இந்துக்கள் மட்டுமே இருக்கின்றனர். இதற்கு மதமாற்றம்தான் காரணம். இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் மதமாற்றத் தடை சட்டம் அமலில் உள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் மதமாற்ற தடை சட்டத்தை அமல் செய்ய வேண்டும்.

    பசுக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பசுக்களை தத்தெடுத்து கோயில்களில் உள்ள கோ மடங்களில் பாதுகாக்க வேண்டும். கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மரக் கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்றார்.

  12. மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: "4வது அலையாக இருக்கலாம்" - ஆதித்யா தாக்கரே

    ஆதித்யா தாக்கரே

    பட மூலாதாரம், ANI

    மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இது கொரோனா நான்காவது அலையாக இருக்கலாம் என, அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    மேலும், இதனால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும், மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்ஹ்டார்.

    "முகக்கவசம் அணிவதை மாநில அரசு இன்னும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், விரைவில் கட்டாயப்படுத்தப்படும். பூஸ்டர் தடுப்பூசியை உரிய நேரத்தில் மக்கள் செலுத்திக்கொள்ள வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.

    கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 5 தினங்களாக, தொற்று உறுதி செய்யப்படும் தினசரி எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது. ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1494 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

  13. இலங்கை நெருக்கடி: 'மனித பேரழிவை ஏற்படுத்த முயற்சி' - விமல் வீரவங்ச குற்றச்சாட்டு

  14. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,518 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,518 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,779 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 9 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா தொற்றால் தற்போது வரை சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25,782.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.