இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம். இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான இன்றைய முக்கிய செய்திகள்.
- இந்திய அரசு எல்லா மதங்களையும் உச்சபட்ச மரியாதையுடன் நடத்துகிறது. மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய நபருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
- மேற்கு வங்கத்தில் முதலமைச்சரே மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அது நான்காவது அலையாக இருக்கலாம் என, அம்மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
- தனக்கும் தன் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
- நைஜீரியாவில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பேர் கொல்லப்பட்டனர்.
- இலங்கை நீதிமன்ற உத்தரவையடுத்து, தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானம் இன்று மாலை புறப்பட்டுச் சென்றது.
- இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் இன்று நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். கடந்த 4 நாட்களில், நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.











