இந்தியாவின் அக்னி 4 ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை

அக்னி 4 இடைநிலைத் தூர பேலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக இந்திய அரசின் பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம். இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய செய்திகள்.

    • இந்திய அரசு எல்லா மதங்களையும் உச்சபட்ச மரியாதையுடன் நடத்துகிறது. மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய நபருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
    • மேற்கு வங்கத்தில் முதலமைச்சரே மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அது நான்காவது அலையாக இருக்கலாம் என, அம்மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
    • தனக்கும் தன் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
    • நைஜீரியாவில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பேர் கொல்லப்பட்டனர்.
    • இலங்கை நீதிமன்ற உத்தரவையடுத்து, தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானம் இன்று மாலை புறப்பட்டுச் சென்றது.
    • இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் இன்று நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். கடந்த 4 நாட்களில், நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  2. இந்தியாவின் அக்னி 4 ஏவுகணை - வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

    அக்னி ஏவுகணை

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, கோப்பு படம்

    அக்னி 4 இடைநிலைத் தூர பேலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக இந்திய அரசின் பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. தந்திரோபாய கட்டளைப் படையகம் சார்பில் பயனர் பயிற்சி ஏவுதலின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஏவுகணைக்கான எல்லா தர மதிப்பீடுகளையும் இந்த சோதனை வெற்றிகரமாக உறுதி செய்ததாகவும், ஏவுகணை அமைப்பின் நம்பகத் தன்மையையும் இது உறுதி செய்ததாகவும், இது நம்பகமான குறைந்தபட்ச தற்காப்பை பெறுவதற்கான இந்தியாவின் கொள்கையை இது உறுதி செய்வதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  3. இலங்கையில் இருந்து புறப்பட்டது ரஷ்ய விமானம்

    இலங்கையில் ரஷ்ய விமானம்

    ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றிற்கு, நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு ரத்து செய்யப்பட்டதையடுத்து, விமானம் ரஷ்யா புறப்பட்டது.

    இலங்கை கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபரினால் இன்று (06) தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து, நீதவான் ஹர்ஷ சேதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    அயர்லாந்து நாட்டிற்கு சொந்தமான சேலேஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடட் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் விசாரணைகளின் போது, ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான சேவை நிறுவன விமானமொன்றை நாட்டை விட்டு வெளியேற, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் கடந்த 2ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்த தடையுத்தரவை சவாலுக்கு உட்படுத்தி, சட்ட மாஅதிபர் திணைக் களத்தினால் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறான பின்னணியிலேயே, விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை ரத்து செய்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

    இதன்படி, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏரோபுளோட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், இன்று மாலை 6 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரஷ்யா நோக்கி பயணித்திருந்தது.

  4. யுக்ரேன் சண்டையில் ரஷ்ய மேஜர் ஜெனரல் கொல்லப்பட்டதாக தகவல்

  5. இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு - 4 நாட்களில் 5 பேர் மரணம்

    இலங்கை துப்பாக்கிச் சூடு
    படக்குறிப்பு, துப்பாக்கி பிரயோகம் நடைபெற்ற இடத்தில் காவல்துறை விசாரணை

    இலங்கையில் கடந்த ஓரிரு தினங்களாக அதிகளவிலான துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

    இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு - முகத்துவாரம் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது தமிழ் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

    முச்சக்கரவண்டியில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

    இதேபோல், தங்காலை பகுதியில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 37 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு முன்னர், அஹங்கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளுந்த்கம பகுதியில் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 43 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

    நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களுக்கும், போதைப் பொருள் வர்த்தகத்திற்கும் இடையில் தொடர்புகள் காணப்படலாம் என போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

  6. நைஜீரியா தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு - 50 பேர் கொல்லப்பட்டனர்

    நைஜீரியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பேர் கொல்லப்பட்டனர்.

    நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒன்டோ மாநிலத்தில் ஒவே நகரில் செயின்ட் பிரான்சிஸ், கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    அப்போது அங்கு சென்ற துப்பாக்கி ஏந்திய நபர், தேவாலயத்தின் உள்ளே மற்றும் வெளிப்புறப் பகுதியில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், குழந்தைகள், பெண்கள் உட்பட குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று ராய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் யார்? எதற்காக நடத்தினார் என்பது குறித்து காவல்ந்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நைஜீரியாவின் வட மேற்கு பகுதியில் ஆயுத ஏந்திய குழுகளால், இது போன்ற தாக்குதல்கள் அடிக்கடி நிகழும். ஆனால், தென் மேற்கு பகுதியில் அரிதானது என்றும் கூறப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. முகமது நபி பற்றிய பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கருத்துக்கு அரபு ஊடகங்களின் எதிர்வினை

  8. பாஜகவின் வெறுப்புணர்வால் இந்தியாவிற்கு பாதிப்பு - ராகுல் காந்தி

    பாரதிய ஜனதா கட்சியின் மதவெறியால் உலகளவில் இந்தியா பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியா உள்ளுக்குள் பிளவுபட்டு, வெளியில் பலவீனமாகிறது.' என்றும் 'பாஜகவின் வெட்கக்கேடான வெறுப்புணர்வால், நம்மைத் தனிமைப்படுத்தியதுடன், உலக அளவில் இந்தியாவை பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.'என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. பாஜகவின் ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் அறிக்கையில் பொய்யான தகவல் - அண்ணாமலை பேட்டி

    கே.அண்ணாமலை

    பட மூலாதாரம், K Annamalai/Twitter

    படக்குறிப்பு, கே.அண்ணாமலை

    தமிழ்நாடு அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளை, ஆதாரங்களுடன் அறிக்கையாக வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம் இளைய மன்னர் குமரன் சேதுபதி மறைவையொட்டி, அவரது மணைவி ராணி லட்சுமி நாச்சியார், குடும்பத்தினரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து, ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தமிழ்நாடு பாஜக வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மையை மறைத்து, முற்றிலும் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார்.

    எனவே ஆதாரங்களை இணைத்து அறிக்கையாக பாஜக வெளியிட உள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட திமுக அண்ணா நகர் எம்எல்ஏ மகன், திமுக குடும்ப ஆடிட்டரை காப்பாற்ற அமைச்சர் ஏன் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார் ? என தெரியவில்லை.' என்றார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், 'கச்சத்தீவை மீட்பது குறித்து சட்ட ஆலோசனைகள் நடைபெற்று, அதற்கான விவரங்களை மத்திய அரசுக்கு, தமிழ்நாடு பாஜக அனுப்பி உள்ளது. கச்சதீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

    திமுகவின் நெருங்கிய நண்பர்களாக இருக்கக்கூடிய இலங்கை அமைச்சர்கள், கச்சத்தீவை இந்தியா மீட்க எதிர்ப்பு தெரிவித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.' என்றார் அண்ணாமலை.

  10. முகமது நபி குறித்த சர்ச்சை கருத்து: அரபு நாடுகள் எதிர்ப்பு - எதிர்வினை என்ன ?

    முகமது நபி குறித்து பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எழுந்துள்ளது.

    கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள இந்தியத் தூதர்களை வரவழைத்து, முகமது நபி குறித்து பாஜக தலைவர்கள் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

    பாரதிய ஜனதா கட்சி என்ன சொல்கிறது? இந்த காணொளியில் பாருங்கள்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  11. இந்தியாவை உலக நாடுகள் விமர்ச்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது - கே.பாலகிருஷ்ணன்

    கே.பாலகிருஷ்ணன்
    படக்குறிப்பு, கே.பாலகிருஷ்ணன்

    இந்திய அரசை மதவெறி கொண்ட அரசாங்கம் என உலக நாடுகள் விமர்சிக்கும் நிலை உருவாகி உள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடலூரில் மணல் கொள்ளை அபரிமிதமாக நடந்துள்ளது. அதனால் ஏற்பட்ட குழியில் தான், பெண்கள் சிக்கி மூழ்கி இறந்துள்ளனர்.

    இதே போல குவாரிகளில் தோண்டப்படும் குழிகளையும் மூடாமல் விடுவதால் பெரும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் நீச்சல் பயிற்சியை கட்டாயமாக்கவும் முயற்சிக்க வேண்டும்.

    கருவில் உள்ள குழந்தைகளை பாலினம் கண்டறிவது தடை செய்யப்பட்டும் அது தொடர்கிறது. இது சமூக விரோத செயல், தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு குழு அமைத்து, இதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

    மதுரையில் துறவிகள் மாநாடு என்ற பெயரில் ஆன்மீகவாதிகள் பேசிய பேச்சுக்கள் ஏற்க முடியாதவை. மதுரை ஆதீனம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளார். ஆதீனம் என்கிற பெயரில் மதவெறி கூடாரமாக மடங்கள் மாறிவிட கூடாது.

    இந்திய அரசை மதவெறி கொண்ட அரசாங்கம் என உலக நாடுகள் விமர்சிக்கும் நிலை உருவாகி உள்ளது. பாஜக 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், மத அடிப்படையில் மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கிலேயே, இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசின் செயல்பாடுகள் இப்படியே தொடர்ந்தால் இலங்கையின் நிலமை தான் இந்தியாவுக்கும் ஏற்படும்" என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

  12. பாஜகவுடன் எந்த உரசலும் இல்லை - எடப்பாடி பழனிச்சாமி

    பாரதிய ஜனதா கட்சி - அதிமுக உறவு நன்றாக உள்ளது. எந்த உரசலும் இல்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், "அதிமுக அரசு மீது பழி சுமத்தும் நோக்கத்தில், சேலத்திற்கு அதிமுக ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் தகவல்களை பரப்புகிறார்.

    சேலத்திற்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது.'' என்றார்.

    பாரதிய ஜனதாவுடன் உறவு குறித்த கேள்விக்கு, "பாஜகவுடன் அதிமுகவின் உறவு நன்றாக இருக்கிறது. எந்த உரசலும் இல்லை. ஒருவர் (பொன்னையன்) தெரிவித்த கருத்து, அவருடைய சொந்த கருத்து என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

    அத்தோடு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியை வளர்க்க அக்கறையுடன் இருப்பார்கள். தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசுவார்கள். அதில் ஒன்றுமில்லை.'' என்றார் எடப்பாடி பழனிச்சாமி.

    எடப்பாடி பழனிச்சாமி
    படக்குறிப்பு, எடப்பாடி பழனிச்சாமி
  13. இலங்கை ஆளும் கட்சி அமைச்சருக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை

  14. சென்னை சொகுசு கப்பலுக்கு அனுமதி இல்லை - புதுச்சேரி ஆளுநர்

    தமிழிசை செளந்தரராஜன்

    சென்னையில் நேற்று முன் தினம் புறப்பட்ட சொகுசு கப்பல், புதுச்சேரிக்கு வர இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி மீன்பிடி துறைமுகத்தில் தேசிய மாணவர் படையினரின் சாகச பயணத்தை, துணை நிலை ஆளுநர் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்த, சொகுசு கப்பல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சென்று, பின்னர் புதுச்சேரி வரை செல்கிறது என்கிற அறிவிப்பு குறித்து கேட்டதற்கு,

    'அதுபற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது. நாங்கள் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. எங்களிடம் இதுவரை கோப்புகள் வரவில்லை. வந்த பின்னரே அது எப்படி? என்பதைப் பார்த்து முடிவெடுக்கப்படும். இதுவரைக்கும் எங்களிடம் அனுமதி பெறவில்லை. புதுச்சேரி அரசும் அனுமதி கொடுக்கவில்லை.' என்றார்.

    மேலும், 'இந்த சொகுசு கப்பல் மட்டுமில்லை, வருங்காலத்தில் கேளிக்கைகள் அனுமதிக்கப்பட்டாலும், அதில் எந்தவிதத்திலும் கலாச்சார சீர்கேடு இல்லாமலும் மக்களை பாதிக்காத ஒரு வகையான சுற்றுலாவாகத்தான் இருக்கவேண்டும். இதில் நான் ரொம்ப தெளிவாக இருக்கிறேன்.' என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

  15. இலங்கையில் ரஷ்ய விமானத் தடை நீக்கம் - நீதிமன்றம் உத்தரவு

    ரஷ்ய விமான தடை நீக்கம்

    பட மூலாதாரம், SHIRAJ MOHAMED

    ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றிற்கு, நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இலங்கை கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபரினால் இன்று (06) தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து, நீதவான் ஹர்ஷ சேதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    அயர்லாந்து நாட்டிற்கு சொந்தமான சேலேஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடட் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் விசாரணைகளின் போது, ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான சேவை நிறுவன விமானமொன்றை நாட்டை விட்டு வெளியேற, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் கடந்த 2ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்த தடையுத்தரவை சவாலுக்கு உட்படுத்தி, சட்ட மாஅதிபர் திணைக் களத்தினால் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறான பின்னணியிலேயே, விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை ரத்து செய்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

  16. மேற்கு வங்கத்தில் முதல்வரே பல்கலை. வேந்தர் - அமைச்சரவை முடிவு

    மேற்கு வங்கத்தில் முதலமைச்சரே மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பார் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக மாநில ஆளுநர் தற்போது உள்ளார். துணைவேந்தர் நியமனங்களை ஆளுநரே செய்கிறார். ஆளுநர் - மாநில அரசு இடையிலான இணக்கமற்ற சூழலையை அடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரே துணைவேந்தர்களை நியமனம் செய்யும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்கத்தில் சுகாதாரம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, சிறுபான்மையினர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் உள்ள மாநில அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக, கவர்னருக்குப் பதிலாக முதலமைச்சரே இருப்பார் என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. ஐபிஎல் வர்ணனை செய்வது ஏன்? கவுதம் கம்பீர் விளக்கம்

    மாதந்தோறும் நான் 5,000 பேருக்கு உணவு வழங்குகிறேன் என்று கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரரும் எம்.பியுமான கவுதம் கம்பீர் கூறுகையில், 'மாதம்தோரும் வழங்கும் உணவிற்காக மாதம் ரூ. 25 லட்சம் என ஆண்டுக்கு ரூ. 2.75 கோடி செலவாகிறது.வேலை செய்தால்தான் இதை செய்ய முடியும். எனவே எம்.பியாக இருந்து கொண்டு ஐபிஎல்லில் வர்ணனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.

    கவுதம் கம்பீர்
  18. கோயம்புத்தூரில் ஆசிய வலுதூக்கும் போட்டி - இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர்

    ஆசிய வலு தூக்கும் போட்டி

    பட மூலாதாரம், CMOTamilNadu

    தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் சார்பில் இந்திய வலுதூக்கும் கூட்டமைப்புடன் இணைந்து கோயம்புத்தூரில் ஆசிய வலுதூக்கும் போட்டியை நடத்துகிறது.

    ஆசியாவின் 22 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். இந்நிலையில், ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டிக்கான இலச்சினையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். முதலமைச்சர் வெளியிட வலுதூக்கும் சங்க நிர்வாகிகள் இலச்சினையை பெற்றுக் கொண்டனர்.

  19. இந்திய சுதந்திர பவள விழா: சிறப்பு நாணயங்களை வெளியிட்ட பிரதமர்

    சிறப்பு நாணய வெளியீடு

    பட மூலாதாரம், Nirmala Sitharaman

    இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோதி சிறப்பு வரிசைரூபாய் 1, ரூ.2, ரூ. 5, ரூ .10, ரூ. 20 நாணயங்களை வெளியிட்டார்.

    இந்த நாணயங்கள், 75வது சுதந்திர தின விழா (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) இலச்சினையை கொண்டுள்ளன. மேலும், பார்வைதிறன் இழந்த மாற்றுத்திறனாளிகள் எளிதில் அறியும் வகையில் உள்ளன.

  20. இலங்கை நெருக்கடி: வரி விகிதம் உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாய் எவ்வளவு? மக்களுக்கு என்ன ஆகும்?