இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம்.
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.
- மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
- இலங்கையில் எதிர்வரும் காலத்தில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று (19) அறிவித்தார்.
- இலங்கையில் 2வது முறை ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்ததும் மஹிந்த ராஜபக்ஷ ஓய்வு பெறாததே இன்றைய நிலைக்கு காரணம் என்று அவரது சகோதரரும் எம்.பியுமான சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
- யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, வரும் மாதங்களில் உலகளாவிய உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது.
- திருநெல்வேலி கல்குவாரி விபத்து: கனிம வளத்துறை உதவி இயக்குநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உரிமையாளரின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- ராம்ஜெத்மாலானியின் வாதங்கள்தான், எங்கள் விடுதலைக்கு வழிகாட்டியது; முதன்மைக் காரணம் ஆயிற்று என்று பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.
- பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பும் ஜிஎஸ்டி குறித்த தீர்ப்பும் மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உள்ளன. ஏற்கெனவே உள்ள உரிமைகளை உறுதிபடுத்தியுள்ளது என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை, குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள்.









