நெல்லை கல்குவாரி விபத்து: மூன்றாவது நாளாக மீட்புப் பணி

திருநெல்வேலியில் கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் கல்குவாரியில் ராட்சத கல் சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் இடிபாடுகளில் சிக்கினர். இதில், முருகன், விஜய் இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
சுமார் 18 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட செல்வம், என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இடிபாடுகளில் சிக்கிய 3 பேரை மீட்கும் பணி இரண்டாவது நாளாக திங்கள்கிழமையன்று நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் மற்றும் சுரங்கத்துறை நிபுணர்களும் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் முயற்சிக்கு பின்னர், லாரியின் அருகில் இடிபாடுகளில் சிக்கி கிடந்தவரை, இரவு 11 மணியளவில், சுமார் 47 மணி நேரத்திற்கு பின் சடலமாக கண்டெடுத்தனர்.
இந்நிலையில், கல்குவாரி இடிபாடுகளில் சிக்கியுள்ள செல்வகுமார், ராஜேந்திரன் ஆகிய இருவரின் உடலை மீட்கும் பணி , இன்று 3வது நாளாக தொடர்கிறது.












