டெல்லி முண்ட்கா தீ விபத்து: குறைந்தது 27 பேர் பலி - குடியரசு தலைவர், பிரதமர், டெல்லி முதல்வர் இரங்கல்

கட்டடத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், காயமடைந்தவர்கள் சஞ்சய் காந்தி மற்றும் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட கூடுதல் துணை ஆணையர் பிபிசி நிருபர் தில்நவாஸ் பாஷாவிடம் தெரிவித்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. இலங்கை பிரதமர் ரணிலுக்கு ஆதரவில்லை - மைத்திரிபால சிறிசேன

    இலங்கை - மைத்திரிபால சிறிசேன

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மைத்திரிபால சிறிசேன

    இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவிக்கின்றது.

    இலங்கை சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

    'சர்வகட்சி அரசாங்கம் ஒன்றையே தாம் கோரிய போதிலும், அதனை பொருட்படுத்தாது ரணில் விக்ரமசிங்கவை நியமித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது' என மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்

  2. இந்தியை திணிப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
    படக்குறிப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

    கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநரும் வேந்தருமான ஆர். என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் க.சிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், 'தமிழ்நாடு ஒரு முற்போக்கான மாநிலம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை விடவும் தமிழ்நாடு பல துறைகளில் முன்னணியில் உள்ளது.

    இந்தியாவை முன்னெடுத்து செல்வதில் தமிழ்நாடு தலைமை வகிக்க வேண்டும். மத்திய அரசு ஒரு மொழியை திணிப்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால் அது உண்மைக்கு புறம்பானது. தேசிய கல்வி கொள்கை என்பது பள்ளி கல்வியிலிருந்து பட்டப்படிப்பு வரை பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கிறது.

    சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தலைமை நீதிபதிகளின் மாநாட்டிலும் பிரதமர் மோதி உயர்நீதிமன்றங்களில் அந்த மாநில மொழிகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    பிராந்திய மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். தமிழ் பழமையான, வளமான மொழி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியில் வளமான இலக்கியங்கள் உள்ளன. மத்திய அரசு தொடர்ந்து தமிழை வளர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    உத்தர பிரதேசம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற மாநிலங்களிலும் தமிழ் மொழிக்கு இருக்கைகளை உருவாக்க ஆலோசித்து வருகிறோம். பல மாநிலங்களும் இதற்கு இசைவு தெரிவித்து முன்வந்துள்ளன. மற்ற மாநிலங்கள் மட்டுமல்லாமல் தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் பிற நாடுகளிலும் தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்க முயற்சித்து வருகிறோம்.

    மாநில அரசும் இதற்கு முன் வரவேண்டும். பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் தத்துவத்தின் வளமையை கொண்டு சேர்க்க வேண்டும். எந்த ஒரு மொழியையும் குறிப்பாக இந்தி மொழியை திணிப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அனைத்து மொழிகளிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும்.' என்றார்.

  3. இலங்கை மக்களை பிரச்னைகளில் இருந்து மீட்பேன் - புதிய பிரதமர் ரணில்

  4. ராஜஸ்தானில் காங்கிரஸ் சிந்தனை அமர்வு - ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை அமர்வு கூட்டம் இன்று தொடங்கியது.

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று தொடங்கியுள்ள இந்த கூட்டத்தில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் புபேஷ் பாகல், எம்.பி ராகுல்காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

    கூட்டத்தில், கட்சியின் எதிர்கால திட்டமிடல், வரும் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் உத்தி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது. வரும் 15ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    முன்னதாக இந்த கூட்டத்தில் விவாதிக்கும் வகையில் அரசியல், பொருளாதாரம், சமூக நீதி மற்றும் மேம்பாடு, விவசாயம் உள்ளிட்ட 6 தலைப்புகளில் ஒருங்கிணைப்பு குழு கடந்த மாதம் ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுவின் ஆலோசனைகள் உள்ளிட்டவையும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல் - ஐரோப்பிய கவுன்சில் தலைவர்

    ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, ஜப்பானில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல்

    ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஜப்பான் நகரின் ஹிரோஷிமாவிற்கு சென்றார்.

    ஜப்பானில் கடந்த 1945 ஆம் ஆண்டில், முதல் அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட ஹிரோஷிமா நகருக்கு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லச் மைக்கேல் சென்றார். அங்குள்ள ஒரு நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார்.

    அங்கு, தற்போதைய உலகளாவிய பாதுகாப்பு குறித்து விவாதித்தார். அப்போது, . "உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ளது," என்று கூறியதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், "அணு ஆயுதம் வைத்துள்ள ரஷ்யா, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து வெட்கப்படும் அளவிற்கு, ஏற்க முடியாதவற்றை சொல்கிறது. இறையாண்மை கொண்ட யுக்ரேன் மீது தாக்குதலும் நடத்துகிறது." என்றார்.

  6. பேரக்குழந்தை பெற்றுத்தராத மகன், மருமகள் ரூ.5 கோடி இழப்பீடு தரவேண்டும்: பெற்றோர் வழக்கு

  7. முதுநிலை நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரும் மனு தள்ளுபடி

    இந்தியாவில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் - 2022 தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    'நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. இது நோயாளிகளின் நலன் மற்றும் மருத்துவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.' என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. கன்னியாகுமரியில் 1, 500க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லவில்லை - அசானி புயல் காரணமாக

    கன்னியாகுமரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்

    அசானி புயல் காரணமாக, குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு, சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விசைப்படகு மீனவர்கள் நடுக்கடலில் பகுதியில் 7 நாட்கள் முதல் 1 5 நாட்கள் வரை தங்கி, ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வழக்கம் தற்போது வங்க கடலில் உருவான அசானி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

    இதனால், குமரி கடல் பகுதியில் காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால், வரும் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்த்துள்ளது. இதையடுத்து 1, 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

  9. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன். இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் வழங்குகிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்.

  10. இந்திய குடியரசுத்துணை தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

  11. இந்தி மொழி தேவையில்லை - ஆளுநர் இருந்த மேடையில் அமைச்சர் க.பொன்முடி

    க.பொன்முடி - ஆளுநர் ஆர்.என்.ரவி

    இந்தி மொழி தேவையில்லை என, தமிழ்நாடு அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டனர். முன்னாள் இஸ்ரோ தலைவர் க.சிவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    இந்நிகழ்வில் ஆளுநர் முன்னிலையில் தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது: "உயர்கல்வியில் 53% மாணவர் சேர்க்கையுடன் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இதுதான் திராவிட மாடல். சிவன் மற்றும் நானுமே தமிழ் வழியில் தான் படித்தோம். தமிழ் மொழியில் படித்து தான் இந்திய அளவில் சிவன் உயர்ந்துள்ளார், நான் முனைவர் பட்டம் வரை பெற்று இன்று அமைச்சராக உள்ளேன்.

    ஆளுநரே, நாங்கள் எந்த மொழிக்கும் குறிப்பாக இந்தி மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. மொழி கற்பது வாய்ப்பாகத்தான் இருக்க வேண்டுமே தவிர கட்டாயமாக இருக்கக்கூடாது. நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்.

    ஆங்கிலம் சர்வதேச மொழி, தமிழ் உள்ளூர் மொழி. உலகத்தோடு உரையாட ஆங்கிலமும், எங்களுக்குள் உரையாட தமிழும் போதும் என்கிற போது இந்தி எதற்கு?

    இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், நம் ஊரில் பானி பூரி விற்பவர்கள் இந்தி பேசுபவர்களாக தான் இருக்கிறார்கள்" என்றார்.

  12. விருதுநகரில் மாணவர்கள் தாக்கியதாக கூறி அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்

    விருதுநகர் போராட்டம்

    விருதுநகர் அருகே பேய்க்குளம்கிராமத்தில்இருந்துபழைய பேருந்து நிலையத்திற்கு வந்த அரசுபேருந்தை ஜெயராம் என்றஓட்டுனர் இயக்கி உள்ளார்.

    பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கல்லூரி மாணவர்கள் படியில் பயணம் செய்ததாகவும் பழைய பேருந்து நிலையம் வந்தவுடன்ஓட்டுநர் படியில் தொங்கிய மாணவர்களை திட்டியதாகவும், ஆத்திரமடைந்த மாணவர்கள் அந்த ஓட்டுநரை தாக்கியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அருகில் இருந்த பெரிய கருப்பன் என்ற மற்றொரு ஓட்டுநர் ஜெயராமுக்கு ஆதரவாக மாணவர்களைத் தடுக்க முற்பட்டபோது அவரையும் மாணவர்கள் தாக்கியதாகவும் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் தெரிவிக்கின்றனர்.

    2 ஓட்டுநர்களும் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும் என்று கூறிபோராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் பேருந்து இயக்கம் தடைபட்டது. இதனால் ஏராளமான பயணிகள் அவதிக்குள்ளாகினர் .

    பின்புகாவல்துறையினர்விருதுநகர் அரசு போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த நான்கு மாணவர்களும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

    பின்பு அரசு போக்குவரத்து ஊழியர்களான ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தை கைவிட்டு பேருந்தை இயக்கினர்.

  13. தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதாக பி.எஃப்.ஐ அமைப்பினர் மீது வழக்குப்பதிவு

    ஆர்.என்.ரவி

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதாக பி.எஃப்.ஐ அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

    இந்த நிலையில், கோவையில் சில இடங்களில் ஆளுநருக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக, மரியதாஸ் மற்றும் ஆனந்தகிருஷ்ணன் என்பவர்கள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், அடையாளம் தெரியாத 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவி, 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பை பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. அதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

  14. இலங்கை நெருக்கடி: ரணில் - கோட்டாவின் மாளிகை சூழ்ச்சி பிரச்னைக்கு தீர்வாகாது - அனுரகுமார

  15. இலங்கை நெருக்கடி - புதிய பிரதமராக பதவியேற்ற ரணிலுக்கும் எதிர்ப்பு

    ரணில் விக்ரமசிங்க

    பட மூலாதாரம், SL PRESIDENT’S MEDIA DIVISION

    இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஆட்சியாளர்களை வெளியேறுமாறு கோரி காலி முகத்திடலில் தன்னெழுச்சி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில், பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 9ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்திதார். இதையடுத்து, வெற்றிடமான பிரதமர் பதவிக்கு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

    எனினும், புதிதாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கும் மக்கள் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களினால் முழுமையாக நிராகரிக்கப்பட்டு, தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற ஒருவருக்கு எவ்வாறு பிரதமர் பதவியை வழங்குவது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    அத்துடன், ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்த சந்தர்ப்பத்தில், இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற மாபெரும் நிதி மோசடியுடன், ரணில் விக்ரமசிங்க தொடர்புப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

    ஊழல், மோசடிகளின் ஊடாக பெற்றுக்கொண்ட பணத்தை மீள கையளிக்குமாறே தாம் கோரி வருவதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். எனினும், தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்கவை கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  16. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க 6வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார்.
    • இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல கொழும்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
    • இலங்கையில் தொடரும் போராட்டம், வன்முறையையடுத்து இந்திய உள்துறை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    • சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி இந்திய பிரதமர் மோதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
    • வன்முறைகளில் ஈடுபடுவோரை எவ்வழியிலும் கட்டுப்படுத்துவோம் என, இலங்கை ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
    • தருமபுரம் ஆதினத்தில் உள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
    • இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜிவ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.