இலங்கைக்கு எங்களின் ஆதரவு தொடரும்: கொழும்பில் உள்ள இந்திய தூதர்
இலங்கையில் தொடரும் போராட்டம், வன்முறையையடுத்து இந்திய உள்துறை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல கொழும்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
இலங்கை மக்களை பிரச்னைகளில் இருந்து மீட்பேன் - புதிய பிரதமர் ரணில்
இன்றைய நேரலை நிறைவு
வணக்கம். இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது. நேரலைப் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான முக்கிய நிகழ்வுகள்.
- இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க 6வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார்.
- இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல கொழும்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- இலங்கையில் தொடரும் போராட்டம், வன்முறையையடுத்து இந்திய உள்துறை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி இந்திய பிரதமர் மோதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- வன்முறைகளில் ஈடுபடுவோரை எவ்வழியிலும் கட்டுப்படுத்துவோம் என, இலங்கை ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
- தருமபுரம் பல்லக்கு சர்ச்சை: தருமபுரம் ஆதினத்தில் உள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
- இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜிவ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ வசிக்க திருகோணமலை கடற்படை தளத்தை தேர்வு செய்தது ஏன்?
கல்லூரி முதல்வர்களுடன் ஆளுநர் சந்திப்பு - அமைச்சரை தவிர்த்து விட்டு சந்தித்ததாக சர்ச்சை
தாம்பரம் அருகே தனியார் கடையில் திடீர் தீ - பருத்தி எரிந்ததால் தீக்கிரை

படக்குறிப்பு, தீக்கிரையாகும் தனியார் துணி கடை தாம்பரம் அருகே தனியாருக்கு சொந்தமான பிரமாண்ட கைத்தறி பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த கௌரிவாக்கத்தில் மேடவாக்கத்தை சேர்ந்த மன்பிரித் சிங் என்பவர் கைத்தெறி பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூமை நான்கு வருடங்களாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கைத்தறி ஷோரூமில் உள்ள பருத்தியில் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது, இதைக் கண்ட ஷோரூமில் வேலை பார்த்து இருந்த ஊழியர்கள் வெளியேறினர்.
அடுத்த சில நிமிடங்களில் தீ மளமளவென பற்றி எரிந்து மேல் தளங்களில் பரவியது. இதில் அந்த ஷோரூமில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிய தொடங்கின.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கபட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த தீயனைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். இருப்பினும் தீ கட்டுக்குள் வராததால் தேனாம்பேட்டை, தாம்பரம், கிண்டி, மேடவாக்கத்திலிருந்து மேலும் தீயணைப்பு 5 வாகனங்கள் வரழைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து வந்த சேலையூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இலங்கைக்கு உதவிப்பொருட்கள் அனுப்ப 4 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு: தமிழ்நாடு அரசு
இலங்கைக்கு உதவிப் பொருட்களை அனுப்பி வைக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழ்நாடு அரசு நியமித்திருக்கிறது.
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை செயலர் ஜெசிந்தா லாசரஸ், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் பிரபாகர், ஆவின் மேலாண் இயக்குநர் சுப்பையன், மருந்து கொள்முதல் இயக்குநர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கையில் நாளை 8 மணி நேரத்துக்கு ஊடரங்கு கட்டுப்பாடுகள் விலக்கப்படும் - ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு
இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள், வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 2 மணிவரை விலக்கிக் கொள்ளப்படும் என்றும் மீண்டும் ஊடரங்கு பிற்பகல் 2 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை அமல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையை மீண்டும் வலுப்படுத்த ரணிலுடன் பணியாற்றுவேன்: கோட்டாபய ராஜபக்ஷ
இலங்கை மிக மோசமான காலகட்டத்தில் உள்ள நிலையில், நாட்டை வழிநடத்தும் சவாலான பணியை ஏற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், நாட்டை மீண்டும் வலுப்படுத்த ரணிலுடன் சேர்ந்து பணியாற்றும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இலங்கை பிரதமராக ரணில் பதவி ஏற்பு: இந்தியா நம்பிக்கை
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதும் அரசியல் ஸ்திரதன்மை ஏற்படும் நம்பிக்கை வந்துள்ளதாக இந்திய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடியையடுத்து கடந்த 9ம் தேதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில், இலங்கைக்கான இந்திய உயர் ஆணையரகம் (தூதரகம்) தனது ட்விட்டர் பக்கத்தில், 'இலங்கையில் ஜனநாயக வழிமுறைகளின்படி பிரதமர் பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்,' என்று தெரிவித்துள்ளது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்தியாவில் மின்வெட்டு பிரச்னை: நிலக்கரி தட்டுப்பாடுக்கு காரணம் என்ன?
இலங்கை பிரதமர் ரணிலுக்கு மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து
இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு அண்மையில் அந்த பதவியில் இருந்து விலகிய மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரதமராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள். இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை சிறப்பான முறையில், வழி நடத்திச் செல்ல வாழ்த்துகிறேன்.'' என்று தெரிவித்துள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை நெருக்கடி: பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்பு

பட மூலாதாரம், SL PRESIDENT MEDIA DIVISION
இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடியால் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. வன்முறையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 9ம் தேதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து நேற்று இரவு அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பிரதமராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை பிரதமராக 6வது முறையாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்ச புகார் - பயனாளி தற்கொலை
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் வாங்கியும் இழுத்தடிப்பு செய்ததாக கூறி திருவாரூரில் இளைஞர் தற்கொலை கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வேலங்குடி ஊராட்சிக்குட்பட்ட கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்த லெனின் என்பவரது மகன் மணிகண்டன்( 25 ). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் பிரதம மந்திரி வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆரம்பித்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் மகேஸ்வரன் என்பவரிடம் முதலில் 3,000 ரூபாய், இதையடுத்து திட்டத்திற்கான பணம் வங்கி கணக்கில் சேர 15 ஆயிரம் ரூபாயும் மணிகண்டன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
திட்டத்தின் மூன்றாவது தவணை பணத்தை, வீட்டின் மேற்கூரை வேலையை முடித்தால்தான் தர முடியும் என்று கூறியுள்ளனர். இதனால், வெளிநாடு செல்ல வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 36 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று வீட்டு வேலைகளை முடித்துள்ளார்.
ஆனால், மூன்றாவது தவணை பணம் தராமல் இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன், தற்கொலைக்கு முயன்றுள்ளார். காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளார்.
தற்கொலைக்கு அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து பேரளம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் வட்டார வளர்ச்சி அலுவலக ஓவர்சியர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கோயம்புத்தூரில் கல்லூரி முதல்வர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், கோவையில் கல்லூரி முதல்வர்களுடன் ஆளுநர் இன்று கலந்துரையாடுகிறார்.
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை நடைபெற இருக்கிறது. இதில், பல்கலைக்கழகங்களின் வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி, இணை வேந்தரும் உயர்கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதற்காக ஆளுநரும் உயர்கல்வி துறை அமைச்சரும் கோவைக்கு இன்று வந்தடைந்தனர். இந்நிலையில், பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடுகிறார்.
பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஆனால், உயர்கல்வி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவில்லை. இது ஆளுநரின் தனிப்பட்ட நிகழ்வு. அதனால் உயர்கல்வி துறை அமைச்சர் கலந்து கொள்ளவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் பிபிசி தமிழிடம் தெரிவித்தது.
தலித் எதிர்ப்பு ஒருபுறம் இந்துத்துவ எதிர்ப்பு மறுபுறம்: 'மழையால்' ஆம்பூர் பிரியாணி விழா ரத்து
தாஜ்மஹாலின் 22 அறைகளை திறக்க கோரிய மனு தள்ளுபடி - அலகாபாத் உயர்நீதிமன்றம்
உலக புகழ் பெற்ற தாஜ்மகாலில் மூடப்பட்டுள்ள 22 அறைகளில் உள்ளதாக கூறப்படும் இந்து தெய்வங்களின் சிலைகள் குறித்து ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக இளைஞர் அணியைச்சேர்ந்த ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்துள்ள மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை தள்ளுபடி செய்துள்ளது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
காஷ்மீர் வட்டாட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் படுகாயம்
காஷ்மீர் சடூரா மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தீவிரவாதிகள் இன்று துப்பாக்கியால் சுட்டதில், அங்கு பணியாற்றி வரும் ராகுல் பட் என்பவர் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை காஷ்மீர் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மேற்கு நாடுகளில் தடைவிதிக்கப்படும் ரஷ்ய பெரு முதலாளிகள் துபாயில் புகலிடம் தேடுவது ஏன்?
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல் - தேர்தல் அணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் (எம்.பிக்கள்) 6 பேரின் பதவிக் காலம் வரும் ஜூன் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி, கே.ஆர்.என். ராஜேஷ் குமார், அதிமுக உறுப்பினர்கள் ஏ. நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஏ. விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையொட்டி அந்த இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
தேர்தல் அறிவிக்கை வெளியிடும் நாள்: மே 24, 2022
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: மே 31, 2022
வேட்பு மனுக்கள் பரிசீலனை: ஜூன் 1, 2022
வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்: ஜூன் 3, 2022
தேர்தல் நாள்: ஜூன் 10, 2022
தேர்தல் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை
வாக்குகள் எண்ணிக்கை: ஜூன் 10
தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் நாள்: ஜூன் 13, 2022

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய நாடாளுமன்றம்