இலங்கை நெருக்கடி: கோட்டாபய ராஜபக்ஷ - ரணில் விக்ரமசிங்க திடீர் சந்திப்பு
இலங்கை கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறையில் எம்.பி. போலீசார் உள்ளிட்ட 9 பேர் இறந்துள்ளனர் என்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்புவிற்கு ராணுவ கவச வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
யுக்ரேன் போர்: ரஷ்ய வீரர்கள் 26, 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம்

பட மூலாதாரம், Reuters
ரஷ்யா ராணுவ வீரர்கள் இதுவரை 26, 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று யுக்ரேன் தெரிவித்துள்ளது.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து தற்போது வரை ரஷ்ய படை வீரர்கள் 26, 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் ரஷ்ய ராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது. இதன்படி, ரஷ்யாவின் 1, 187 டாங்கிகள், 2, 856 ஆயுத வாகனங்கள், 199 ஏர் கிராப்ட், 160 ஹெலிகாப்டர்கள், 290 ஆளில்லா தாக்குதல் விமானங்கள், 12 கப்பல்கள் உள்ளிட பல்வேறு ராணுவ தளவாடங்களை அழித்துள்ளதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.
யுக்ரேன் வெளியிட்டுள்ள இந்த தகவலை பிபிசி சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை.
இலங்கை வன்முறை: முன்னாள் அமைச்சர்களின் கார்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு தீ வைப்பு
இலங்கை நெருக்கடி: இந்தியாவில் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு தஞ்சம் அளிக்க கூடாது - அன்புமணி ராமதாஸ்
இலங்கை போர்க் குற்றவாளிகளான ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இந்தியா ஒரு போது தஞ்சம் அளிக்க கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா முன்னாள் மத்திய அமைச்சரும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், '' 2009 ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்தவர்கள் ராஜபக்ஷ சகோதரர்கள் தான். அவர்களின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ளது. அப்படிப்பட்ட போர்க்குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது.
போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆதாரங்களின் அடிப்படையில் ராஜபக்ஷ சகோதரர்களை கைது செய்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும், பிற உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இலங்கை நெருக்கடி: கொழும்பு வீதிகளில் ராணுவ கவச வாகனங்கள்

படக்குறிப்பு, இலங்கை ராணுவ கவச வாகனம் இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு ராணுவ கவச வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் தற்போது வரை 9 பேர் இறந்துள்ளனர். 61 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 41 வாகனங்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன. 136 வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
'எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டின் ராணுவமும் நாட்டிற்கு வரவழைக்கப்பட மாட்டார்கள்.' என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு வீதிகளில் ராணுவ கவச வாகனங்கள் பெருமளவில் வரவழைக்கப்பட்டுள்ளன.
ஐபாட்: முடிவுக்கு வருகிறது 21 ஆண்டுகால சகாப்தம்.

இசை, பாடல்களைக் கேட்கும் ஐபாட்டை கடந்த 2001ம் அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்.
90 மில்லியன் பாடல்களுக்கு மேல் இதில் உள்ளன. இந்நிலையில், ஐபாட் உற்பத்தியை நிறுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் உள்ளார்: உறுதிப்படுத்திய பாதுகாப்பு செயலாளர்
பில் கேட்ஸ்க்கு கொரோனா தொற்று
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பில் கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'லேசான அறிகுறியுடன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி குணமடையும் வரை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளதாகவும்' தெரிவித்துள்ளார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இலங்கை நெருக்கடி: இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு ராணுவம் வரவழைக்கப்படாது- பாதுகாப்பு செயலாளர்

படக்குறிப்பு, நீர்க்கொழும்புவில் எரிக்கப்பட்ட வாகனம் இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டின் ராணுவமும் நாட்டிற்கு வரவழைக்கப்பட மாட்டார்கள் என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரதன தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அவரை திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளோம். நிலைமை வழமைக்கு கொண்டு வந்ததன் பின்னர், அவர் விரும்பிய இடத்திற்கு அனுப்பி வைப்போம் என்றும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன கூறியுள்ளார்.
மேலும், 'இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் தற்போது வரை 9 பேர் இறந்துள்ளனர். 61 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 41 வாகனங்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன. 136 வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும்.' அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், 'எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டின் ராணுவமும் நாட்டிற்கு வரவழைக்கப்பட மாட்டார்கள்.' என்றார்.
இலங்கை வன்முறையில் உயிரிழப்பு 9-ஆக உயர்வு: பாதுகாப்பு செயலாளர்

படக்குறிப்பு, இலங்கை வன்முறையில் எரிக்கப்பட்ட வாகனம் இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், போலீஸ் அதிகாரிகள் இருவர் இறந்தவர்களில் அடக்கம்.
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன இதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், கொழும்பு தேசிய மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் 230க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
இலங்கையில் கண்டதும் சுடும் உத்தரவு சட்டவிரோதம் - எம்.ஏ.சுமந்திரன்

இலங்கையில் வன்முறையில் ஈடுபடுகின்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் நேற்றைய தினம் வழங்கப்பட்ட உத்தரவு சட்ட விரோதமானது என்று நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
இலங்கை அமைச்சரவை கலைக்கப்படும் போது, அமைச்சின் செயலாளர்களும் பதவியிழப்பார்கள் என அரசியலமைப்பின் உறுப்புரை 52(3) கூறுவதால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்படி உத்தரவை வழங்க முடியாது எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு அதிகாரம் - முழு விவரங்கள்
மனித உரிமை ஆர்வலர் மஹிந்த: ராஜபக்ஷக்கள் வளர்ந்த கதை
இந்திய ஹாக்கி அணியில் தமிழ்நாடு வீரர்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்தோனேசியாவின் ஜகார்தாவில் ஆசிய ஆண்கள் ஹாக்கிப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணியில் தமிழ்நாட்டின் தூத்துக்குடியைச் சேர்ந்த மாரீஸ்வரன், அரியலூரைச் சேர்ந்த கார்த்திக் இடம் பெற்றுள்ள்னர்.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இருவருக்கும் விளையாட்டுப் பயிற்சியாளர்கள், வீரர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்.
'இந்திய ஹாக்கி (ஆண்கள்) அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்ற 13 ஆண்டுக் காத்திருப்பு கோவில்பட்டி மாரீஸ்வரன் மற்றும் அரியலூர் கார்த்தி ஆகிய இருவரால் முடிவுக்கு வந்துள்ளது.
ஜகார்த்தா ஆசிய கோப்பையை மட்டுமின்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வென்று காட்ட வாழ்த்துகிறேன்!.' என்று தெரிவித்துள்ளார்.
எளிய பின்னணியில் இருந்து இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இருவர் குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இலங்கை: கோட்டாபய பதவி விலகினால் மட்டுமே பிரதமராவேன் - சஜித் பிரேமதாஸ
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மட்டுமே, புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஏற்பார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவிக்கின்றார்.
இலங்கை எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் ராஜபக்ஷே குடும்பம் பெரும் செல்வாக்கை பெற்றது எப்படி?
தொடர்ந்து இணைந்திருங்கள்
வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன். இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் வழங்குகிறேன்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, தேச துரோக வழக்குகளை பதியக்கூடாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், GETTY IMAGES
தேச துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தேச துரோக வழக்குகளை பதியக்கூடாது என, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, நாட்டில் உள்ள தேச துரோக சட்டங்களின் விதிகளை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாக, இந்திய உச்ச நீதிமன்றத்தில் மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசு தெரிவித்திருந்தது.
இந்த விவகாரத்தை அரசு பரிசீலிக்கும் நடைமுறைகள் முடிவடையும் வரை தேச துரோக சட்டப்பிரிவுகள் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்திய ஹாக்கி அணியில் தமிழ்நாடு வீரர்கள் இருவர்: 20 ஆண்டுகளுக்கு பின் சாத்தியமானது எப்படி?
இந்தியா இலங்கைக்கு படைகளை அனுப்பாது - உயர் ஆணையரகம்

பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ குடியிருப்புக்கு அருகில் எரிந்த நிலையில் கிடக்கும் வாகனம் இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக வரும் செய்திகளுக்கு இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இலங்கைக்கு இந்திய படைகளை அனுப்புவதாக, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் யூகங்களின் அடிப்படையில் வெளியாகும் செய்திகளை உயர் ஆணையரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. இந்த கருத்துகள் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஏற்றதாக இல்லை.
இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றில் அந்நாட்டுக்கு உறுதுணையாக இருப்பதாக, நேற்று தெளிவாக கூறியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
முன்னதாக இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
