You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இலங்கைக்கு உதவி: 'தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி' - இலங்கை பிரதமர் ராஜபக்ஷ

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்து ராஜபக்ஷ கடிதம் எழுதியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

வணக்கம் நேயர்களே!

நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள். உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

நேற்றைய நேரலை பக்கத்தின் முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

  • உத்தர பிரதேச மாநிலம் லலித்பூரில் 13 வயது சிறுமியை நான்கு பேர் பாலியல் வல்லுறவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து, புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்ற பாதிக்கப்பட்ட சிறுமியை காவல் நிலைய பொறுப்பு அதிகாரியும் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
  • விளையாட்டு செய்தியாளர் போரியா மஜும்தாருக்கு பிசிசிஐ இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
  • இலங்கை மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு படகில் வர முயன்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் மற்றும் படகோட்டிகள் இருவர் உட்பட 14 பேரை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
  • மதுரை மருத்துவக் கல்லூரியின் டீனாக ரத்தினவேல் மீண்டும் நியமிக்கப்படுவதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
  • பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யகோரி, தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில். வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என்று மாற்றம் செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும் என, பாஜக தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
  • இலங்கை பெண் அகதி வீட்டுக்குள் இரவில் நுழைந்த காவல்துறையை சேர்ந்த ஒருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
  • சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • சென்னையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞர் விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூறு அறிக்கையில் தெரியவந்துள்ளது.