இன்றைய நேரலை நிறைவு
வணக்கம்.
இன்றைய நேரலைப் பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. நேரலைப் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருந்தமைக்கு நன்றி.
இது வரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.
- தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு.
- அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
- யாரோ இருவரால் மொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ளது என, இலங்கையின் முன்னாள் அமைச்சரும், கிரிக்கெட் முன்னாள் கேப்டனுமான அர்ஜூன ரணதுங்க பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
- சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் திருவிழா விபத்து குறித்தும் ஆராயவும் விபத்துகளை தடுக்கும் வழிகாட்டுதலை வழங்கவும் ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- பேரறிவாளன் விடுதலை: ''அமைச்சரவை முடிவிற்கு எதிராக ஆளுநர் செயல்பட்டால் கூட்டாட்சியைப் பாதிக்கும்' - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
- தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். அந்த கிராமத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
- இந்தியா முழுவதும் நீட் பயிற்சி என்ற பெயரில் , ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்து வருகின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- தேசவிரோதம் தொடர்பான பிரிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் தர உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
- தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமோ, சூழ்ச்சியோ இல்லை. இயற்கையாகத் தான் இறந்திருப்பார் என்று சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
- ரஷ்யா - யுக்ரேன் அதிபர்கள் ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு துருக்கி முயற்சி எடுத்தது. ஆனால், யுக்ரேன் போர் குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்று யுக்ரேன் அதிபரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
- டெல்லியில் இன்று மொத்தம் 1367 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- பெட்ரோலியப் பொருட்கள் மீது "தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மதிப்புக்கூட்டு வரியை குறைத்து மக்களுக்கு உதவ வேண்டும்" - பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
- ரஷ்யாவின் கேஸ் விநியோகம் ரத்து என்பது மிரட்டல் நடவடிக்கை என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார்.
- தஞ்சாவூர் களிமேடு கிராமத்தை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் கூறுகையில், ' துயரத்திலும் அரசியல் செய்ய நினைக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை, குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழின் இணைய தளம், ட்விட்டர், முகநூல், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி.













