இலங்கையில் இடைக்கால அரசு : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணங்கியதாக தகவல்

இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் ஆவண காப்பாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. யுக்ரேனுக்கு கூடுதல் உதவி - அமெரிக்கா தகவல்

    யுக்ரேனுக்கு அமெரிக்கா உதவி

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை யுக்ரேன் தலைநகர் கீயவ் சென்று அந்நாட்டு அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்ததாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

    யுக்ரேன் பயணத்தைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், '' தானும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினும் போலந்தில் இருந்து கியவ் வரை ரயிலில் சென்று, யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்ததாக'' தெரிவித்தார். ​​

    ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு அமெரிக்க அதிகாரிகளின் இந்த சந்திப்பு உயர் மட்ட அளவில் இருந்தது. ''யுக்ரேனுக்கு கூடுதலாக 700 மில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்க உள்ளதாக'' அமெரிக்கா அறிவித்துள்ளது.

    அமெரிக்க ராஜீய அதிகாரிகள் இந்த வாரம் யுக்ரேனுக்கு வருவார்கள் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 'கீயவில் அமெரிக்க தூதரகத்தை மீண்டும் எப்போது திறக்க வேண்டும் என்பது குறித்து மிக கவனமாக முடிவு செய்யப்படும்.' என்று பிளிங்கன் கூறுகிறார்.

    அவர் வெள்ளிக்கிழமை ஐ.நா. தலைமைச் செயலாளரிடம் பேசியதாகவும், போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய அவசியம், போர் நிறுத்தத்தின் தேவை மற்றும் உதவிக்கான வழிகள், மக்கள் வெளியேறுவது ஆகியவை குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு உறுதியான தகவல் அளிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

  2. மதிய உணவுத் திட்டம்: "பசி தாங்க முடியாமல் அழும் குழந்தைகள்"

    மதிய உணவு திட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    உலக அளவில், மிகச் சிறந்த நோக்குடன் நடைமுறைப்படுத்தப்படுவதாக இந்தியாவின் இலவச மதிய உணவுத் திட்டம் பார்க்கப்படுகிறது.

    கொரோனா தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு ஏப்ரல் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த திட்டத்தை மீண்டும் தொடங்குவது பல பள்ளிகளுக்கு சவாலாக உள்ளது. இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்

  3. தொடர்ந்து இணைந்திருங்கள்...

    வணக்கம்.

    நான் ஜோ மகேஸ்வரன்.

    இது வரை நந்தினி வெள்ளைச்சாமி தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்..

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  4. துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் மசோதா நிறைவேறியது, அதிமுக, பாஜக எதிர்ப்பு, பாமக ஆதரவு

    மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்க வழி செய்யும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு அதிமுக, பாஜக இரண்டும் எதிர்ப்புத் தெரிவித்தன. திமுக கூட்டணிக் கட்சிகளும், அதிமுக கூட்டணியில் இருந்து வந்த பாமகவும் இந்த மசோதாவை ஆதரித்தன.

  5. பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் மசோதா: சட்டப் பேரவையில் தாக்கல்

    தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை ஆளுநர்களுக்குப் பதிலாக தமிழ்நாடு அரசே நியமிப்பதற்கு வழி செய்யும் மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மசோதா விவாதத்துக்கு வந்தபோது பாஜக உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களை நியமிக்கும் விஷயத்தில் மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து ஆளுநர்கள் முடிவெடுக்கும் நடைமுறையே இவ்வளவு நாள் இருந்துவந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தங்களுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக ஆளுநர்கள் செயல்படும் போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இது உயர்கல்வியை வழங்கும் மாநில அரசின் பணியைப் பாதிப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

    திமுக கூட்டணிக் கட்சிகள் தவிர, பாமக-வும் இந்த மசோதாவை ஆதரிக்கிறது.

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், @mkstalin

    தமிழ்நாடு முதல்வரே தமிழ்நாட்டில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தராக இருக்கவேண்டும், உயர்கல்வி அமைச்சர் இணைவேந்தராக இருக்கவேண்டும், துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கவேண்டும் என்ற மசோதாவை 100 சதவீதம் ஆதரிப்பதாக தெரிவித்தார் பாமக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி.

    சட்டமன்றத்தில் இது தொடர்பான முதல்வரின் பேச்சு கீழே உள்ள டிவிட்டர் இணைப்பில் காணொளியாக உள்ளது.

  6. 'அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் யுக்ரேனில் அதிபரை சந்தித்தனர்'

    அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை யுக்ரேன் தலைநகர் கீயவ் சென்று அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்ததாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

    யுக்ரேன் மீது ரஷ்யப் படையெடுப்பு நடந்துவரும் நிலையில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

    பிளிங்கன் யுக்ரேனில் இருப்பதாக யுக்ரேன் அதிகாரி ஒருவர் முன்னதாக கூறியிருந்தார். ஆனால், அமெரிக்கா இது குறித்து கருத்து கூறுவதை தவிர்த்தது.

    ஆனால் தற்போது இந்த சந்திப்பு இடம் பெற்றதை அமெரிக்கா அறிவித்திருப்பதோடு இரண்டு அமைச்சர்களும் தற்போது யுக்ரேன் எல்லையைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறியுள்ளது.

    லாய்ட் ஆஸ்டின், ஆன்டனி பிளிங்கன்.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்: அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின், வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இருவரும் அதிபர் ஜோ பைடனுடன்.
  7. அனுமன் சாலிசா சர்ச்சை: நடிகை நவ்நீத் ராணா, கணவர் வெவ்வேறு சிறைகளில் அடைப்பு

    மகாராஷ்டிராவில் பாங்கு ஓதும் மசூதிகளுக்கு எதிராக ஒலி பெருக்கிகள் மூலம் அனுமன் சாலிசா பாட்டை பாடுவோம் என்று வலதுசாரிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இதற்காக ஒலிபெருக்கிகளையும் அவர்கள் விநியோகிக்கிறார்கள். இது ஒரு அரசியல் சர்ச்சையாக உருவெடுத்து வருகிறது.

    இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் இல்லமான மாதோஸ்ரீ முன்பாக தான் அனுமன் சாலிசா பாட்டை பாடப் போவதாக அறிவித்தார் நடிகையும் சுயேச்சை எம்.பி.யுமான நவ்நீத் கௌர் ராணா. இதையடுத்து அவர் வீட்டு முன்பு சிவசேனை தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இருவேறு சமூகங்களிடையே பகைமையை வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் நவ்நீத் ராணா மற்றும் அவரது சுயேச்சை எம்.எல்.ஏ. கணவர் ரவி ராணா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இப்போது நவ்நீத் ராணா பைகுல்லா சிறைச்சாலையிலும், அவரது கணவர் ரவி ராணா டலோஜா சிறையிலும் அடைக்கப்பட்டிருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

    நவ்நீத் கௌர்

    பட மூலாதாரம், Getty Images

  8. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 2,541 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 2,541 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் கொரோனா தொற்று பாதித்த 30 பேர் உயிரிழந்தனர். இதனால், இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை 4,30,60,086 ஆகவும், கொரோனா தொற்றுடன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,22,223 ஆகவும் உயர்ந்திருப்பதாக அரசுத் துறை தகவல்களை மேற்கோள் காட்டி பி.டி.ஐ. செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,522 ஆக இருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. இந்திய ரூபாய் மதிப்பு ரூ.23 பைசா சரிவு

    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை காலை 23 பைசா சரிவை சந்தித்தது.

    இதன் மூலம் ஒரு அமெரிக்க டாலர் 76.65 ரூபாய்க்கு விற்பனையானது.

  10. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 785 புள்ளிகள் வீழ்ச்சி

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று திங்கள்கிழமை காலை 785 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது என்கிறது பி.டி.ஐ செய்தி முகமை.

    தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243.35 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 16,928.60 என்ற அளவில் இருந்தது.

  11. பிரான்ஸ் அதிபராக இம்மானுவல் மக்ரோங் மீண்டும் வெற்றி

    இம்மானுவல் மக்ரோங்

    பட மூலாதாரம், EPA

    பிரான்ஸ் அதிபராக இம்மானுவல் மக்ரோங் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தனக்கு எதிராக போட்டியிட்ட லீ பென்னை அவர் தோற்கடித்தார்.

    இது வரை வலதுசாரி தலைவர்கள் பெற்ற வாக்குகளை விட லீ பென் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தபோதிலும், இத்தேர்தலில் அவர் தோற்றுள்ளார்.

    இந்த தேர்தலில் மக்ரோங் 58.55 சதவீத வாக்குகளையும் லீ பென் 41.45 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளார்.

    தேர்தலில் வெற்றி உறுதியான பின்னர், ஈஃபிள் டவர் அருகே தன் ஆதரவாளர்களிடையே உரையாற்றிய மக்ரோங், தான் "அனைவருக்குமான அதிபராக இருப்பேன்" என தெரிவித்தார்.

    தேர்தலில் தோல்வியுற்றாலும், தான் பெற்ற வாக்குகள் வெற்றியை குறிப்பதாக லீ பென் தெரிவித்தார்.

    மக்ரோங் வெற்றிக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    தனது "உண்மையான நண்பர்" என மக்ரோங்கை குறிப்பிட்டு, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் அவருடைய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. இது 1969 ஆம் ஆண்டுக்குப் பின்னான தேர்தல்களில் பதிவான குறைவான வாக்கு சதவீதம் இது ஆகும்.

  12. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காணஇங்கே சொடுக்கவும்.