நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ:
- வெள்ளை இன மக்களின் மனிதாபிமான அடிப்படையிலான அவரச உதவிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், இந்த உலகம் கருப்பின மக்களின் தேவைகளுக்கு அளிப்பதில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
- சென்னை ஆவடி அருகே வீட்டில் உள்ள தரை தளத்தில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி வீட்டின் உரிமையாளர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள மாணவி ஒருவரின் வீட்டில் காலை உணவு உட்கொண்டார்.
- கொழும்பில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் தொடங்கியுள்ளார்.
- "அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா 'அகண்ட பாரதம்' ஆக மாறிவிடும்" என, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
- இலங்கையில் இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளை வரையறுக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.
- யுக்ரேன் தலைநகர் கீயவில் ரஷ்யப்படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இத்தகைய தாக்குதல்கள் இன்னும் தீவிரமடையும் எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை நடைபெற்றது.
- பாபாசாகேப் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோதியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அன்ட் மோதி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
- முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களிடம் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலன் விசாரித்தார்.
- வேலூரில் பெண் மருத்துவரை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதாகி சிறையில் உள்ள 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்யுமாறு கோரியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.