சேலத்தில்
காதலிப்பதாகக் கூறி சிறுமியை ஆபாசமாக ஒளிப்படம் எடுத்து பணம் பறித்த நபரை காவல்துறையினர்
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சின்னசேலம்
எலவடை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்ற எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர், சேலம் குகை பகுதியைச் சேர்ந்த
உறவினரான 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி, சில ஆபாச படங்களை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னர்
அந்த படங்களைக் காட்டி, அதைச் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என அந்தச் சிறுமியை மிரட்டி 180,000
ரூபாய் பணம் பறித்துள்ளார்.
ஒரு கட்டத்தில்
குடும்பத்தினருக்கு இது தெரிய வந்ததைத் தொடர்ந்து, சசிகுமாரிடம் பஞ்சாயத்து பேசி பணத்தை மீட்டுள்ளனர்.
இருப்பினும், அதோடு நிற்காத சசிகுமார் சிறுமியை ரகசியமாகச் சந்தித்து ஒரு கைபேசியைக் கொடுத்து, அதன்மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அதில், சிறுமியின் அந்தரங்க படங்களை அனுப்பி அதை வெளியிடாமல் இருக்க அவசரமாக 50,000 ரூபாயைக் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது குடும்பத்தினருக்குத் தெரியவரவே, அவர்கள் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் சசிகுமாரை கைது செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவருடைய கைபேசி, மடிக்கணினி ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சசிகுமார் மேலும் பல பெண்களிடம் இதுபோன்று பணம் பறித்துள்ளாரா என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.